பில்லா
ரஜனி இரு வேடங்கள் தாங்கி நடித்த ஒரு படம். எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே. எனக்குப்பிடித்த ரஜனியின் படங்களிலும் ஒன்று.
தீ
தொழிலாளிகளுக்கு வரும் பிரச்சினைகளை காட்டியிருக்கும் ஒரு படம். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய விடயம். தவிர குடும்பத்தைக் காப்பாற்ற படிக்காமல் வேலைக்குப் போகும் ரஜனி கடைசியில் தனது தம்பியாலேயே கைது செய்யப்படுவது போன்ற பாசப்பிணைப்புகள் நிறைந்த ரஜனியின் சற்று வித்தியாசமான நடிப்பை எமக்குக் காட்டிய படம். “சுப்பண்ணா சொன்னாருண்ணா சுதந்திரம் வந்ததுண்ணு” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
முத்து
ஆரம்பத்தில் நகைச்சுவையான ஒரு மனிதராக எஜமானுக்கு விசுவாசமான ஒரு வேலைக்காரனாக வரும் ரஜனிக்கு வரும் கஷ்டங்கள், போன்ற திருப்பங்கள் உள்ள படம். அவற்றையும் தாண்டி நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ரஜனியின் நகைச்சுவை யாருக்குத்தான் பிடிக்காது.
MR.பாரத்
என்னம்மா கண்ணு செளக்கியமா? என்ற பாடல் வரும் படம். தனது தாயை ஏமாற்றிய தந்தையை தனது தாய்க்காக தந்தை சத்யராஜுடன் போராடும் படம். தந்தைக்கும் தனயனுக்கம் நடக்கும் போராட்டத்தைப் படமாகக் காட்டியிருப்பார்கள். தனுஷ் அந்தப்படத்தின் ரீமேக்கை பண்ணியிருந்தாலும்கூட ரஜனியின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் முன்னால் நிற்க முடியுமா.
தில்லுமுல்லு
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் இந்திரன்
ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரன்
ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டைவேடம் போடுவது போன்ற மரணநகைச்சுவைப் படம். இதை டீவியில் எப்போது போட்டாலும் நான் பார்க்கத் தவறியதில்லை.
தளபதி
இப்போது இந்தப்படத்தைப் பற்றிச் ஒரு வரியில் சொல்வதென்றால் நண்பேன்டா என்று சொல்லலாம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இதில் சின்னத்தாயவள் மற்றும் காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் தினமும் கேட்கும் playlistக்குள் இடம்பிடித்திருக்கிறது.
பாட்சா
ரஜனியின் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம், நான் முதலாவதாகப் பார்த்த ரஜனி படம் என்பதால் இன்னும் பிடிக்கும். இப்படத்தில் ரஜனி ரகுவரன் சந்திக்கும் இடம், அந்த நேரத்தில் அவரை ரகுவரன் ஆட்கள் சூழ்ந்து இருப்பதை காட்ட சிரித்துவிட்டு கொஞ்சம் அங்கே பாரு கண்ணா என்பார். வாவ் அருமை. அந்த ஸ்டைல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.
அருணாச்சலம்
சின்ன வயதில் இரசித்த இன்னுமொரு படம், இப்பொழுதும் கூட.
ரஜனி வீட்டை விட்டு வெளியேறி உருத்திராட்சத்தை குரங்கு எடுத்துச் செல்லுதல், ரஜனி கதிரையில் இருந்து ஆடி விழுதல் போன் நகைச்சுவைக் காட்சிகள் தொடக்கம், ரஜனி குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்தில் செலவழித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதை செலவழிக்கும் காட்சிகள் வரை அற்புதமாக இருக்கும். ரஜனியின் ஸ்டைஸ்+ஆக்சன்+காமடி நிறைந்த ஒரு படம்.
படையப்பா
“ஏனுங்க அந்தப் பாம்புப்புத்துக்குள்ள கைய வுட்டீங்களே கடிக்கலைங்களா” என்ற சந்தேகத்துக்கு எப்படா பதில் சொல்லுவார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..:P
இந்தப் படத்தில் நீலாம்பரி சொல்லுவது போல வரும்
“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னைய விட்டுப் போகல படையப்பா”
என்ற வார்த்தையை இன்றும் ரஜனி மெய்யாக்கிக்கொண்டிருப்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
எந்திரன்
எந்திரன் ரஜனியின் படங்களில் முற்றிலும் வேறுபட்ட படம், ஷங்கர் என்ற இயக்குனர் ரஜனியை சிறப்பாகக் கையாண்டிருப்பார். Making of Enthiranனில் ரஜனியின் கஷ்டங்கள் நன்றாகத் தெரிந்தது. ஆனால் ரஜனியின் வழக்கமான ஸ்டையிலை காணமுடியாதது ரஜனியின் தீவிர ரசிகர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ரோபோ ரஜனி தனது பேட்டைக்குள் புகுந்த மனித ரஜனியைக் கண்டுபிடிக்கும் காட்சியில் ரஜனியின் பழைய ஸ்டைலைக் கண்டேன்.
ரஜனி இமயத்திற்குப் போனாலும் நடிப்பிலும் ஸ்டைலிலும் அதைவிட இமயம்தான். Tweet
:-)))
(SLS standardized original Kangon smiley)