ஸ்ரோஸ்:
சுவிங்குடன், யோக்கரைக் கலந்தானாயின்
விக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.
அவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்!
மெய்டின் ஓவர் எச்சரிக்கை
பந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்
டென்சன் ஆக்கிறான் எச்சரிக்கை
கட்சை விட்டதும் கத்திப் பேசினால்
பயபுள்ள காண்டாகிட்டான் எச்சரிக்கை
புல்டாசாக முகத்துக்கு வீசினால்
மூஞ்சிய உடைக்கபோறான் எச்சரிக்கை
பட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்
கவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்
ரன் எடுப்பதொன்றே குறியான பின்
பவுண்டரி அடிப்பது ஒன்றே உறுதியாகக் கொள்
உனக்கு பந்து போடுறவன் பயங்கரமா பவுன்ஸ் அடிப்பான்
யோசிக்காமல் குனிந்து விளையாடாமல் விட்டுக்கொள்
அவுட் ஸ்விங் பவுன்சர் இரண்டும்
உன் பட்டில் படவே படாது என்றே கொள்
Short ballக்கு ஹீக் சொட் அடித்தல்
என்ற பண்டைச் செயல்
உன்னால் செய்ய முடியாது ஒத்துக்கொள்
இந்தப் பந்துகளுக்கெதிராய் உயிரை விடாமல்
சீக்கிரம அவுட்டாகி ஓடும் பணி செய்துகொள்
பொன்டிங்:
ஆஹா… அவுட்டாகி ஓடும் பணி சேர்த்துக்கணுமா?
பணியே அவுட்டாகி ஓடுவதென்னானபின் பட்டிங் எதற்கு? தனியே வருவேன்
ஸ்ரோஸ்:அப்பிடி வாங்க வழிக்கு, சோ நீங்க பாட்மன்தானே
பொன்டிங்: புவர்லி ஆஸ் அக்கியூஸ்ட்
ஸ்ரோஸ்: அப்ப ஜஜ்மென்ட் சொல்றன்
பொன்டிங்: சொல்லுங்க..
ஸ்ரோஸ்: பதிலுக்கு ஒரு கவிதை சொல்லணும் அதுதான் தண்டனை
பொன்டிங்: யாருக்கு?
ஸ்ரோஸ்: அது கவிதையக் கேட்டாத்தானே தெரியும்
பொன்டிங்: அதுவும் சரிதான். ஆனால்…நீங்க கோவிச்சுக்க கூடாது!
ஸ்ரோஸ்: ஏன் இங்கிலாந்தைப் பற்றிக் கேலியா?
பொன்டிங்: சாச்சா…இது ஒரு அணித்தலைவரின் வேண்டுதல் மாதிரி
ஒரு அணித்தலைவர் தெய்வத்துக்கிட்ட பாடுற தோத்திர பாடல்!
ஸ்ரோஸ்: ஓ… நீங்க காப்டனா?
பொன்டிங்: ச்சாச்சா.. நான் டீம்ல இருக்கனாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு
ஸ்ரோஸ்:கவிதையை கேட்டால் கேள்விக்குறி? ரோதனைக்குறியா மாறலாம்
இல்லையா?
பொன்டிங்: ங்கொய்யால மே பி… மே ஐ..
ஸ்ரோஸ்: பிளீஸ்..
பொன்டிங்:
பல ஸ்விங் வீசிப் பந்து வீசுகையில் – அதை
சிக்ஸராய் பவுண்டரியா மாற்ற முடியாத
சப்பையான பாட்ஸ்மன் வேண்டும்
சின்னப்பசங்களும் சிக்ஸ் அடிக்கக்கூடிய
பந்து வீசவே தெரியாத எதிரணியும் வேண்டும்
பாட்னசிப்புகள் போடும் வேளையில்
பவுண்டரி கொடுத்தவன் உதவிட வேண்டும்
போலிங்கின் போதும் உதவிட வேண்டும்
அடித்து நெகிழ்ந்திட அரைச்சதம் வேண்டும்
முழுச்சதம் அடிக்க வசதியாய்
பாறை பதத்தில் பட்டும் வேண்டும்
அதற்குப்பின்னால் கிடைக்கும் ரன்னும்
அது சிங்கிள் பாய்ச்சி கூட்டிய அவரேஜீம்
சதக்குவிப்புகள் அதிகமுள்ள
மேதாவிலாச கரியரும்(career) வேண்டும்
Onedayயில் நூறு டெஸ்டில் இருநூறென
டீமில் நிலைத்திட ரன்னும் வேண்டும்
பவுண்டரி வேண்டும் சிக்சும் வேண்டும்
எனக்கென வீரரை கேட்கும் வேளையில்
கொடுத்துதவும் நல்ல தேர்வுக் குழுவும் வேண்டும்
இப்படி அணியொன்று வரவேண்டும் என நான்
ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்
வந்தருவார் நம் விக்கிரமாதியெனக்
கடும் நோன்பு புரிந்ததும் தேடிப்போனேன்
ஸ்ரோஸ்: தேடி எங்க போனீங்க?
பொன்டிங்: கிரவுண்டுக்குத்தான்
பொடி நடை போட்டே பந்து பிடிக்கவென
காலை முதல் மாலை வரை போலி வீரர்கள் திரிவது கண்டேன்
வேகமேயற்ற ஸ்விங்கற்ற பந்துக்கும் அடிக்க முடியாது அவுட்டானது கண்டேன்!
எக்ட்ரா பிளேயருக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் கூட அணியில் இடம்கிடைக்கா அரசியல் கண்டேன்
பட்டிங்கில்லா வேளையில் மட்டும் அவன் எக்ட்ராபிளேயர் வேண்டும் என்றான்
எவ்வணியானால் என்னவென்று எல்லா அணியிலும் தேடிப்பார்த்தேன்
வரவர ஒழுங்காய் கிறிக்கட் விளையாடும் வீரனைக் காண்பது மிகமிகக் குறைவு
வரந்தரக் கேட்டதால் ஸ்ரோசண்ணே உனக்கு வீரமான வீரன் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
பறந்துகொண்டே காட்ச் பிடிக்கும் இங்கிலாந்து அணியின் வீரர்கள் எப்படி?
ஆஷஸ் சொல்லும் வரலாறு அத்தனையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ?
இதுவும்(batting) உதுவும்(bowling) அதுவும்(fielding) செய்யும் இனிய வீரர் யார்க்கும் முண்டோ?
உனக்கேனுமது அமையப்பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல் எனக்கும் அமையச் செய்யேன்
விக்கிரமாதித்தா நமஸ்துதே! Tweet
பொன்டிங் & ஸ்ரோஸ்
டொக்கின்ங் சூப்பர்