Related Posts with Thumbnails
Showing posts with label இலங்கை. Show all posts
 
எம் இனிய உலகமே
இன்றுடன் முடிந்தது உன்
மாயன் கலண்டர் கலகமே!

கவியரங்க மேடையிலோ
நீதான் கனல் கண்ணன்
இன்று முதல் நீயோ
வடிவேலுவின் அண்ணன்

பஸ் வண்டி கார் வண்டி
நீயொரு புகை வண்டி
இன்று முதல் நீயோ
வெறும் காய்கறி மண்டி

கிரிக்கெட்டில் நீயோ
சிங்கிள் ரன் சிங்கக்குட்டி
எனதருமை அர்ஜீன ரணதுங்கவே!

பீப்பீ ஊதி பீப்பீ ஊதி
பட்டம் பெற்றாய் பீப்பீமாமா
அடுப்பு ஊதி அடுப்பு ஊதி
கற்றுக்கொள் போட காப்பி மாமா

பார்ட்டி என்று வந்துவிட்டால்
நீதான் அதி(ல்)விஷேடம்
நிரூஜாவைக் கரம் பிடித்தாய்
அதுதான் உனக்கு இனி விஷேடம்

அதிகாரமையமே
ஆட்டம் கண்டதுவே!
உன் இதயத்தில் புதிதாக
அம்பொன்று துளைத்ததுவே!

நேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது
இன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது!

வாழ்த்துக்கள் மாலவன் அண்ணா, நிரூஜா அண்ணி
"எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் செத்தான்டா"
இதுதான் ரஜனிகாந்த், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளுக்குப் பிறகு அன்று தொட்டு இன்றுவரை சலித்துப்போகாத ஒரு பஞ்ச் டயலாக்.

நாம் பாடசாலையில் படிக்கும் போது ஏன் படிக்கிறாய்? என்ற கேள்வி வந்தால் கம்பஸ் போகணும் படிக்கிறோம் என்று சொல்லுவோம். கம்பஸ் போன பிறகு ஏன் படிக்கிறாய்? என்று கேட்டால், நல்லவேலைக்குப் போகணும் என்று சொல்லுவோம்.

ஆனால் வேலைக்குப் போகிறவர்களைக் கேட்டால் "நான் படிச்சதுக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை" என்று சொல்லுவார்கள். அப்படியென்றால் தேவையில்லாதவற்றை ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது.
க.பொ.த சாதாரண தரம் வரை நாம் பாடசாலையில் எல்லாப் பாடத்தையும் படிக்கிறோம். அதாவது இத்தனை துறைகள் இருக்கிறது என்று எங்களுக்கு டெமோ காட்டுகிறார்கள். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கம்பஸ்/உயர் கல்விக்குச் செல்கிறோம்.

எனக்கு இருக்கிற முக்கிய சந்தேகம் என்னவென்றால் என்னதான் பாடங்கள் பல இருக்கு என்று டெமோ காட்டப்படும்போதும் சரி, அதன் பிறகு பிரிக்கப்படும் போதும் சரி, உயர்கல்விக்குப் போகும் போதும் சரி சில விடயங்கள் அப்பிடியே எல்லா இடத்திலும் வந்து தொலைக்கிறது. அதாவது
  • What are the advantages of bla bla bla?
  • What are the disadvantages of bla bla?
  • Briefly explain the following?
  • Definitions
இந்த மாதிரியாக கேள்விகள் எல்லா இடத்திலும் வந்து உயிரை எடுக்கிறது. பாடமாக்கி எழுதினால் மட்டுமே இதுமாதிரியான எல்லாக் கேள்விக்கும் பதிலளிக்க முடியும். விளங்கிக் கொண்டு அதை வைத்து எழுதலாம் என்றால் பாடத்தில் எத்தனை chapterகள் இருக்கோ அத்தனைக்கும் இந்தக் கேள்விகள் இருக்கிறது.


புரியாத மொழிப் படத்தை தியெட்டரில பார்க்கும் போது எல்லாரும் கைதட்டும் போது நாங்களும் கை தட்டுகிற மாதிரி Examல Definition, Advantage,Disadvantage எல்லாம் எதுக்குக் கேக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, ஆனாக்கேக்கிறார்கள். Examக்குப் பிறகு அதை நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ளப் போவதே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.
 வேலைக்குப் போய் Definitionஐ பாக்காம எழுதி சம்பளம் வாங்குற யாரையும் நான் இதுவரைக்கும் பாத்ததில்ல. Google பண்ணினா 2 செக்கன்ல வாற விசயத்தை அரைமணிநேரம் பாடமாக்கி எழுதணுமா? 
ப்படிக்கு 
ப்பாவி மாணவர்களுள் ஒருவன் =)
உண்மையில் நடந்தது என்ன?
அன்று அதிகாலை 9 மணிக்கு 'ஈடா ஈடா ஈடா..' என்று ஃபோன் அடிக்க யார்ரா அது காலக்காத்தாலயே கொசுத்தொல்லை என்று சலித்துக் கொண்டே கண்ணை மூடிய படியே ஹலோ என்றேன். மறுமுனையில்

"மச்சி நான்தான்டா, இப்ப TRINCOல தான் வந்து நிக்குறன், Main Street Nation trust Bankல நிக்கிறன் வாறியாடா செட் ஆவம்" என்று ஒரு குரல்.

"சும்மா போ மச்சி, தூங்குற நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு. நீ எங்க வீட்டுக்கு வாடா, என்றேன்

"டேய் எனக்கு இடம் எல்லாம் தெரியாதுடா, நீ வாடா. என்றான் நண்பன் மறுபடியும்.

இன்னாடாது வம்பாப் போச்சுன்னு சரி பத்து நிமிஷம் என்று ஃபோனைக் கட் பண்ணினேன்.

*******

10 நிமிடங்களின் பின்னர் (அதாவது 35 நிமிடங்களின் பின்)

இது திருகோணமலையில் நேஷன் ட்ரஸ்ட் வங்கி திறப்புவிழாவாம், அதற்குத்தன்னை அழைத்ததாகவும், அதனாலேதான் தான் வந்ததாகவும், நண்பன் சொன்னான். ஓகே மச்சான் அப்பறம் கை எப்பிடி இருக்கு என்று கேட்டேன், உடனே கடுப்பாகி, என்ன இருந்தாலும் நீ அவ்வளவு ஃபாஸ்டா போலிங் செய்திருக்கக் கூடாதுடா, என்று திட்ட ஆரம்பிக்க, நான் சண்டைல கிழிகாத சட்டை எங்க இருக்கு விடு மச்சி என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

அதன் பிறகு விவிஎஸ் லக்ஸ்மன் ஓய்வு அறிவிக்கப் போவதாக சொன்னான், எப்ப அறிவிக்கப் போறானோ தெரியல முதல் அசாட் ராஃப், ஆன்ரியா வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். அதன் பிறகு "இண்டைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு மச்சி, கோவிக்காத அடுத்த முறை வீட்டுக்கு இன்வைட் பண்ணுறன்" எண்டு சொல்லிட்டு நான் விடைபெற்று வந்திட்டேன்.

கற்பனையில் நடந்தது என்ன?

அன்று சங்கா Nations trust Bank திறப்பு விழாவுக்கு வருவதாக கேள்விப்பட்ட உடனேயே அடித்துப் பிடித்து ஓடிப்போய் Bank வாசலில் நின்று கொண்டோம். ஆனால் அங்கே ஏற்கனவே கூட்டம் அலை மோதியது. வெளியெ நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து உள்ளே முட்டி மோதி நுழைந்தால் சங்கா சாப்பிடப் போய்விட்டார்  என்றார்கள்.

காத்திருந்து பார்க்கலாம் என்று பார்த்தால் பாங்க் ஊழியர்கள் ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனே Account திறக்க வேண்டும் என்று சொல்லி form வாங்கி கையில் வைத்துக் கொண்டோம். சங்கா வர அரைமணி நேரத்துக்கு மே ஆகும் போல் தெரியவே, Account formமில் பின் பக்கத்தில் பின்வருமாறு எழுதி வைத்திருந்தோம்.

சங்கா வந்ததும் உடனடியாக அதைத் தூக்கிக் காட்டி போட்டோ எடுக்க வேண்டும் சங்கா என்று கேட்க உடனடியாக கட்டாயம் எடுப்போம் வெளியே வாருங்கள் என்று எங்களை அழைத்துக் போய் ரசிகர்கள் அனைவரையும் நான்கு நான்கு பேராக அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டோம். அப்போதுதாக் புரிந்தது சங்கா எப்பயுமே 4க்கு ட்ரை பண்ணுவதால் தான் அடிக்கடி 100, 200 என்று அடிக்கிறார் என்று...

டிஸ்கி: பதிவில் SUBTITLE எல்லாம் சரியாகத்தான் போடப்பட்டுள்ளது =P
வாய மூடி சும்மா இருடா!
ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை சலிக்கும் வரை திரும்பத் திரும்பக் கேட்க ஆரம்பித்துவிடுவேன். அந்த வகையில் சமீபகாலமாக கேட்கும் பாடல் முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா..."

வாய மூடி சும்மா இருடா என்று ஆரம்பிக்க இது ஏதோ வை திஸ் கொலைவெறி மாதிரிப் பாடல் என்று நினைத்துக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் அதற்குப்பிறகு ஆலாப் ராஜுவின் குரவில் வரும் மதன் கார்க்கியின் வரிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொண்டு அப்பிடியே கண்ணை மூடி வேறு உலகத்துக்குத் தூக்கிப் போய்விடுகிறது.

"கடிகாரம் தலைகீழாய் ஓடும்  - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!"
 என்பதில் தொடங்கி நேற்று இன்று நாளை என்று காதலைப் பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம். அதுவும் ஆலாப் ராஜுவின் குரலில் கோர்வையாக வந்து விழும் வரிகள் மனதுக்க இதம்.

"என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?"

என்னமோ ஏதோவிலிருந்து மதன் கார்க்கியின் வரிகளுக்கு ரசிகனாகிப் போனேன். இன்னும் புதிதுபுதிதாய் ரசிக்க வைக்கிறார். இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்
"கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!"
தலைவா யு ஆர் கிரேட்!!!

*************
விதி (குறும்படம்)


எனது நண்பர்களின் முயற்சியில் உருவான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறுந்திரைப்படம். பார்த்து உங்கள் கருத்துங்களை அவர்களுப்பு வழங்குங்கள்.

No Comments =P









-01-
சோகமாக இருப்பவர்களை மகிழ்ச்சியாகப் பார்ப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பவர்களை சோகமாகப்பார்ப்பதே பிறருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது

-02-
"உனக்கு என்ன வரலாறு? உண்மை சொன்னாத் தகராறு"
யாருக்கோ! :P

-03-
வாழ்க்கையில் தனக்குக் கவலை or பிரச்சினை வரும் போது அதை சமூகவலைத்தளங்களில் எவன் உளறாமல் இருக்கிறானோ அவன் பாதிபக்குவப்பட்ட மனிதன் ஆகிறான்

-04-
"கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே" Wake up with niz song ;-)) || Maybe situation song 4 this month :P

-05-
அதிகாலை 5 மணிக்கு எழும்பும்போதுதான் தெரியுது, உலகத்தை விட நாம எவ்வளவு பின்னால இருந்திருக்கிறோம் என்று.. #ஞானோதயம் :P

-06-
"இது போல் வரும் லிங்கை கிளிக் பண்ண வேண்டாம்" எண்டு போட்டு தெரிஞ்சே Timelineஐ spam பண்றாய்ங்களே.. அவ்வ்வ். #கடுப்பேத்திறார்மைலாட்

-07-
அறிவுகெட்ட Computer! D Driveல space இல்லைன்னா E,F எதுலயாச்சும் போடவேண்டியதுதானே.. இரவு போட்டுட்டு தூங்கப் போன download எல்லாம் :@

-08-
வரப்போகும் 2012ம் ஆண்டு 2006ம் ஆண்டு மாதிரி அமைய வேண்டும் :-)) #எதிர்பார்ப்பு 

-09-
மழை கொஞ்சம் அதிகமாப் பெய்தால் சுனாமி எண்டு வதந்தியக் கிளப்பிறாங்களே.. #திருகோணமலை(எ)வதந்திஊர் :P

-10-
நான் இப்பிடித்தான் என்று 100% தெரியாது. ஆனால் ஓரளவு தெரியும் சி(ப)ல விடயங்களில் விரும்பியது நடக்காவிட்டாலும் இசைவாகிப்போகத் தெரியும்,ஆனால் ஒரு சில விடயங்களை நான் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்ல
உன்னைப் பற்றி நீ எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய் என்று வெற்றிFMமில் கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய பதில்.

-11-
"Life இது உன்னோட காரு இஷ்டப்படி நீ ஓட்டிப்பாரு.." 

-12-
மச்சி + மாமு + சித்தப்பு + தலைவா=நண்பேன்டா :D

-13-
Self Confidence கொஞ்சம் (நிறையவே) அதிகரிச்சிருக்கு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ஒரு சக்தி வந்திருக்கு :P
2011ம் ஆண்டு பற்றி கேட்டதுக்கு எனது பதில்

-14-
"மழை கேட்கிறேன், எனை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன், விழிகளை பறிக்கிறாய்"|| யின் பாடல் வரிகள் மிகவும் பிடிச்சுப்போச்சு:-))
-15-
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்,பயந்து விட்டான் பாவம் என்றது;மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்,விளங்கி விட்டதா மிருகம் என்றது by

2011ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறப் போகிறது. இந்த வருடம் பலருக்கும் பல வித்தியாசமான அனுபவங்களையும் கவலைகள், மகிழ்ச்சிகளையும் தந்திருக்கும். இந்த வருடம் எனக்குப் பல புதிய விடயங்களை, நண்பர்களை, அனுபவங்களை தந்திருக்கிறது. முக்கியமாக 2009ல் பாடசாலைக் காலத்துக்குப் பிறகு வேலைவெட்டியில்லாம் எதிர்காலம் பற்றி சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போன 2010ஐ ஊதித்தள்ளிவிட்டு புதிய பாதையைக் காட்டிய ஆண்டு 2011.

இந்த ஆண்டு எனக்கு தன்னம்பிக்கையை அதிகம் தந்திருக்கிறது. சில பிடிக்காத விடயங்களுக்கு இசைவாகிப் போகவும், கிடைக்கும் என நினைத்து கிடைக்காமல் போன விடயங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும் தந்த ஒரு ஆண்டு.


கூடுதலாக இதுதான் எனது இந்த ஆண்டின் கடைசிப் பதிவாக இருக்கும், எனவே எனவே அடுத்த மலரப் போகும் 2012 இதை விட சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையை மனதில் நிறுத்தி அனைவருக்கும் முற்கூட்டிய சிசுபாலனின் பிறந்த தின மற்றும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி மீண்டும் அடுத்த ஆண்டு சந்திப்போம்!








இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...
 ஸ்ஸ்ஸ்சப்பா... 
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.

இனிமேல் எல்லாரும் சங்கத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் படிதான் நடக்கோணும். ங்கொய்யால இல்லாட்டி கும்பீபாகத்தில கம்பி எண்ணவேண்டியிருக்கும் சொல்லிட்டன்.


  • முதலாவது ரூல்ஸ், சங்கத்து ரூல்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கணும். இதுதான் முதலாவது முக்கிய ரூல்ஸ்.

  • அடுத்து எல்லாருக்கும் பதிவர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும், நீங்க அண்டைக்கு சாப்பிட்டீங்களோ, வேலைக்குப் போனீங்களோ, பல்லுவிளக்கினீங்களோ எண்டெல்லாம் எங்களுக்கு கவலையில்ல, வாக்குப் போட்டே ஆகணும். போடத்தவறினால் 3 நாள் போட்டித்தடை மாதிரி ஏதாவது 3 நாள் பதிவுத்தடை வழங்கப்படும்..:P

  • மூன்றாவது, எல்லாரும் கட்டாயம் பின்னூ(ஊ)ட்டம் ஊட்டியே ஆகணும். டெய்லி மில்க் சொக்கலேட்டில இருந்து, வடை வாழைப்பழம், முறுக்கு, வடை, அதிரசம், ஆப்பம், புட்டு, இடியப்பம், பிட்சா, பர்கர் சமோசா, ரோல்ஸ் எண்டு எதையாவது ஊட்டி ஊட்டச்சத்தை வழங்காமப் போகவே கூடாது..:P

  • நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P

  • ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.

  • கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.

  • கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.

சின்னமாமா..!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:43 PM | 9 பின்னூட்டங்கள்

அன்புள்ள சுபாங்கா,
இதுவரை உனக்கு நான்
எந்தCALLலும் எடுத்ததில்லை.
MISSED CALL மட்டுந்தான்


MISSED CALL என்பது

செல்லில் காசில்லாதவனின்
தன்னை அழைக்கச்சொல்லிக்
கொடுக்கும் சிக்னல்

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்



பொதுவாக வாழ்த்துக்கள்
அதிகாலையில்தான்
சொல்லப்பட்டிருக்குமே தவிர
இப்படி காரிரவில் இல்லை


பரிசு மழைகளால்
களித்துக் களைத்த உனக்கு
நிம்மதியான காரிருள் சூள்

நள்ளிரவில் இவ் வாழ்த்து மடல்

உணர்ச்சியின் உறுமல்களும்
கீழே கொஞ்சம் காதலும் நிறைந்த
உன் சிறுகதைகள் எங்கே?

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை!
அதனால் ஆபத்தானவை!

உன் ஆபத்துக்கள் எங்கே?

வடிவேலுவுடன் சேர்ந்த

பார்த்தீபன் போல்
கவுண்டருடன் சேர்ந்த
செந்தில் போல் 
மரணச்சிரிப்புக்குரிய 
உன் மொக்கைகள் எங்கே?

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிடும் காதல் மன்னன் நீயாம்

சாவகச்சேரி சாட்சி சொல்கிறது

பரீட்சைக்குப் படித்திருப்பாயோ 

தெரியாது ஆனால் 
சுஜாதாவின் கதைகளை பாடமாக்கி 
வைத்திருக்கும் நடமாடும் லைபிரரி நீ

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி 

போல்உன் பயன்படுத்தான மணிப்பர்சு
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது

ஆமர்வீதி சந்தியை
விட்டுவெளியே வா.
உன் ATM கார்ட்டை
வெளியேற்று
உன் பார்ட்டிக்காக காத்துக்கிடக்கும்

எமக்கு பிட்சாவை ஓடர் செய்

வழக்கம் போல் இதுக்கும்

சிமைலி போட்டு ஏமாற்றி விடாதே
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
சின்னமாமா..!


-பப்புமுத்து



WC4SL 


ஆசியக்கரையோரம்
அலையடிக்கும் வேளையில
கலர் கலராக் கொடி புடிச்சுக்
கப்பெடுக்க போனீரு

எதிரிக்கு கை நடுங்க
அப்புறமா தொட நடுங்க
வேர்ல்ட்டு கப்பு ஒங்கையில்
விறைச்சுப்போயி நிக்குதையா

நீரடிச்ச சிக்ஸரும்
பொறகடிச்ச பவுண்டரியும்
எல்லைதாண்டிப் போகும்முன்னே
எங்ககோசம் எழும்புதையா

நீலநிற சீருடையில்
நிமிந்து நின்னு சிக்ஸடிக்க
கங்காருக் குட்டியெல்லாம்
கதிகலங்கி போகுதய்யா

போகிறபோக்கில் நீரு
போட்டுச்செல்லும் யோக்கரிலே
வேரோடு புடுங்கி விக்கெட்
வெறுந்தரையில் கிடக்குதையா

பவுன்சர் பந்து ஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத பொன்டிங் மனசு
தண்ணிபட்ட கண்ணாடி

Batடு ஒடஞ்சிரிச்சு
Pad, gloveசும் பிஞ்சிரிச்சு
முரளியோட ஸ்பின்னு பாத்து
முதுகெலும்பு முறிஞ்சிரிச்சு

கடைசி பாட்ஸ்மனும்
களமிறங்கும் வேளையிலும்
நாம வச்ச டார்கட்டு
நாலுபங்கும் தாண்டலய்யா

மறுபடியும் கோப்பை தூக்க
வாய்ப்பொண்ணு வருகுதையா
அழகா! நம்ம டீமு
ஆட்டத்தைப் பாருமய்யா

குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சிறீலங்கா டீம் புகுந்து
கிறவுண்டில கலக்குதய்யா

யோக்கர்தான் போட்டும்
விக்கெட்டு போகலியே
பார்ட் டைம் பெளலர்சும்
பயனளிக்க நினைக்கலயே

ஒரு மட்ச்சும் தோக்கலயே
ஊருலகம் நம்பலயே
சேவாக்கு ரன் கூட
சிங்கிளத் தாண்டலயே

டில்சான் ஸ்கூப்படிக்க
சங்கா சுவீப்படிக்க
மத்தியூஸ் மளமளன்னு
நின்னு பந்தை சிதறடிக்க

குலாவின் இன்சுவிங்கும்
முரளியின் தூஸ்ராவும்
மலிங்காவின் யோக்கரும்
சேர்ந்து பயமுறுத்த

நானோ நகம் கடிக்க
நீயோ சிக்ஸடிக்க
வெளியே வெடிவெடிக்க
உடம்பெல்லாம் சிலிர்க்குதையா

வேல்டு கப்ப நீ தூக்க
வெடவெடன்னு வருகுதையா
பதினைந்து வருஷக்கனவு
கண்முன்னே பலிக்குதையா

-பப்புமுத்து

மலிங்க

 

டில்சான்

 

டோனி

 

ஹர்பஜன்

 

பில்லி பெளடன்

 

கெவின் பீட்டர்சன்

 

சேவாக்

 

சகிப் அல் ஹசன்

கீழே உள்ள பதிவுர் கிறிக்கட் பற்றிய காணொலியில் உள்ள பின்னணி இசையையும் படங்களையும் நீங்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது...:P

இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பதிவர் சந்திப்பு
பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை

  • பதிவர்கள் அறிமுகம்

  • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.

  • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.

  • இடைவேளையில் இன்னிசை.

  • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.

  • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.

  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

  • நன்றியுரை.

பதிவர்கள், சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பதிவுல வாசகர்கள் அனைவரும் உங்கள் வருகையை முற்கூட்டியே ஏற்பாட்டுக்குழுவினரிடம் மின்னஞ்சல் முலம் தெரிவிக்கவும்.
இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர்
நிரூஜா, வதீஸ், அனுதினன், அஷ்வின், பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..:)
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்

ட்ரோ மட்ச்

பதிவிட்டவர் Bavan | நேரம் 5:50 PM | 19 பின்னூட்டங்கள்

1 2 3 4 5 no


 உள்நாட்டுச் செய்திகள்
ஆடுகளத்தில் அனுதினமும் விளையாடிவந்த இவர் தற்போது விளையாடவே மறந்துவிட்டார். படிக்கும் இடத்தில் ஏதோ வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை ஒன்றை, அதுவும் எதிர்கால வாழ்க்கைக்கு துணையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அது அங்குள்ள புரோபசர்கள் முதல் புள்ளப்பூச்சிவரை அனைவரின் கபாலத்தில் உள்ள முடியையும் கம்பிபோல் எழுந்து நிற்க வைத்திருப்பதால். அதை புத்தகமாக வெளியிட அவரின் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. எனவே இந்த எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கைக்கு துணையாக அமையவிருக்கும் இந்த மாபெரும் காப்பிய நூலை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.
 
அண்மையில் இலக்கியப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தனது வலைப்பூவின் பெயரையும் அண்மையில் அழகு தமிழில் மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இவர் நண்பர்களுக்காக எழுதிய கவிதையைப் பாராட்டி வைரமுத்து முதல் பப்புமுத்து வரை பலர் பாராட்டியதாகவும், அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. மேலும் இவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் பஸ்சில் பயணிகளோடு பயணிகளாக மாறுவேடத்தில் பயணித்தபோது இவரின் புலமை அறியாத ஒரு பித்தன் இவரின் இலக்கிய கவிதை நூல்கள் அடங்கிய பையை காலால் உதைந்ததாகவும், ஆனால் இரக்க குணம் படைத்த இவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து தனது இலக்கியச்சுமையை தோளில் சுமந்தபடி அரிசி மூட்டைன் வந்த மனிதனுக்கு இடம் கொடுத்ததாகவும், அந்த மனிதன் கொண்டுவந்த நாய்க்குட்டிக்கு தனது 350 ருபா புக்கிங் இருக்கையை தானம் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட உடல்வலி காரணமாக பதிவுலகில் சஞ்சரிக்க முடியாமல் இருப்பதாகவும் ஸ்கொட்லான்ட் யார்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
 
வெளிநாட்டுச் செய்திகள்
இலங்கையில் இருக்கும் போது அடிக்கடி சூப் வாங்கித்தந்த இவர் இப்பொது சின்ன டொபி கூடத்தருவதில்லை, அதற்குக் காரணம் இவரது முகத்தை மூடி வளர்ந்திருக்கும் அந்நியன் முடிதான் என்று சொல்லி சமாளித்து வந்த இவர் கடந்தவாரம் இலங்கை ருபா 3000க்கு முகத்தை மூடிய முடியை குணா கமல் ஸ்டைலில் வெட்டியதாகவும் அதை தனது சமூக வலைத்தளங்களில் புரொபைஃல் படமாகப் போட்ட மறுநோடி பலர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விளையாட்டுச் செய்திகள்
கிறிக்கட் அனலைசுக்கு கோனாக, அரசனாக, பிதாமகனாக, குட்டி கிறிக் இன்போவாக, கிறிக்கட்டின் தேயாத நிலாவாக விளங்குகின்ற இவர் இந்திய அவுஸ் தொடரில் இந்தியா வெல்லக் காரணமான விக்கிரமாதித்தனை பழி தீர்க்கும் நோக்கில், அவரின் அணியை வெற்றிபெறச் செய்யாமல் இருக்கும் நோக்கில் தற்போது அவரின் அணியில் விளையாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது பற்றிச் செய்தி கேள்விப்பட்ட விக்கிரமாதித்தன் களத்தில் வைத்து இவரிடம் விளக்கம் கோரியதாகவும் அதற்கு தனது அனலைஸ் ரிப்போர்ட்டை சமர்ப்பித்து இதன்படி நீங்கள் போட்டி ஆரம்பிக்க முன்னர் நீங்கள் சொன்ன “We will win” என்ற வாக்கியமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
வானிலை அறிக்கை
அண்மையில் தான் படித்த பல்கலைக் கழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில்நீல வானத்திலேயே கருமுகில்களில்லாமல் கவி மழையை அடித்து ஊற்றிய கடவுச் சொல் காவலனுக்கு யாழ்ப்பாணத்தில் விளைந்த ”கறுப்புத்தங்கம்” என்று பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதாக பதிவர்கள் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
 
 
கடந்த இரண்டு நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். கதிரை நுனியிலிருந்து டெஸ்ட் மட்ச் பார்த்த இரண்டு நாட்கள். முரளி 800 எடுப்பாரா இல்லையா? இதுதான் பலரின் கேள்வியாக இருந்தது. முரளி அதற்கு இன்று எம்மை டென்சனின் உச்சத்துக்கொண்டு போய் மலிங்க தொடக்கம் சங்கக்கார வரை அனைவருக்கு திட்டிவிட்டேன். ஆனால் கடைசியாக இந்தியாவின் கடைவி விக்கற்றை வீழ்த்தி முரளி 800வது விக்கற்றை வீழ்த்திய போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முரளி பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக...



  • முரளிதரன் 1972ம் ஆண்டு இலங்கையிலே கண்டிக்கு அருகில் இருக்கும் நட்டரம் பொத்த என்ற ஊரில் பிறந்தார்.
  • தனது 9வது வயதில் கண்டி சென் அன்டனில் கல்லூரியில் சேர்ந்த இவர் தனது கிறிக்கற் வாழ்க்கையை மிதவேகப்பந்துவீச்சாளராக ஆரம்பித்தார்.
  • ஆனால் சுனில் பெர்ணான்டோ என்ற இவரது பாடசாலை கிறிக்கற் பயிற்றுனரின் வழிகாட்டலினால் தனது 14வது வயதில் சுழற்பந்து வீச்சில் தடம் பதித்தார்.
  • ஆரம்பம் முதலே பாடசாலைக் கிறிக்கற்றில் பிரகாசித்த முரளி 4 வருடங்கள் தொடர்ச்சியாக பாடசாலை அணியில் நிரந்தர இடம் பெற்றிருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பாடசாலைப்பருவத்தில் இவர் சகலதுறை வீரராகத்தான் பாடசாலை அணியில் இடம் பெற்றிருந்தார், அணியின் இடைநிலைத்துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
  • அவரது பாடசாலைக் கிறிக்கற்றின் இறுதிப்பருவகாலத்தில் அதாவது 1990/91 பருவகாலத்தில் முரளி பாடசாலைப் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கற்றுகளைக் கைப்பற்றினார். இதனால் இவர் பாடசாலையில் "Bata Schoolboy Cricketer of the Year" என்று அழைக்கப்பட்டார்.


  • பாடசாலைக் காலத்துக்குப் பின்னர் தமிழ் யூனியன் கிறிக்கற் கழகத்தில் விளையாடிவந்தார்.
  • அதன் பிறகு 1991ம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிராக இலங்கை A அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் ஐந்து போட்டிகள் விளையாடி ஒரு போட்டியிலும் முரளி ஒரு விக்கற்றைக்கூட சாய்க்கவில்லை.
  • ஆனால் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான ஒரு பயிற்சியாட்டத்தில் பிரகாசித்ததைத் தொடர்ந்து பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓகஸ்ட் 28ம் திகதி 1992ம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார்.
  • முரளியின் சுழலுக்கு முதலாவதாக ஆட்டமிழந்தவர் CRAIG MCDERMOTTஆவார்.


  • இந்தத் தொடருக்கு பின் போட்டி மத்தியஸ்தரால் முரளியின் தூஸ்ரா பற்றி உத்தியோகபூர்வமாக கேள்வியெழுப்பப்பட்டது.
  • முரளி 67 தடவைகள் 5 விக்கற்றுகளையும் 22 தடவைகள் 10 விக்கற்றுகளையும் கைப்பற்றியுள்ளார்.
  • தொடர்ச்சியாக 10 விக்கற்களை 4 தடவை கைப்பற்றியிருக்கிறார்.
  • அதிக CAUGHT and BOWL விகக்கற்றுகளைச்சரித்த வீரர் (35 தடவைகள்)
  • அதிக ஸ்டம்ப் முறையிலான விக்கற்றுகளை எடுத்த வீரர். (47 தடவைகள்)
  • இவர் 72 டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கற்றுகளைக் கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • முரளிதரனின் பந்து வீச்சில் ஜயவர்த்தன 77 பிடிகளை எடுத்துள்ளார்.
  • முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான சான்று
அடுத்து முரளியின் முக்கிய விக்கற்களும் ஆட்டமிழந்தவர்களும்





  • 1வது: Craig McDermott 9 vs அவுஸ்திரேலியா
  • 50வது: Navjot Sidhu 43 vs இந்தியா
  • 100வது: Stephen Fleming 59 vs நியூசிலாந்து
  • 150வது: Guy Whittall 17 vs சிம்பாபே 
  • 200வது: Ben Hollioake 0 vs இங்கிலாந்து
  • 250வது: Naved Ashraf 27 vs பாகிஸ்தான்
  • 300வது: Shaun Pollock 11 vs தென்னாபிரிக்கா
  • 350வது: Mohammad Sharif 19 vs பங்களாதேஸ்
  • 400வது: Henry Olonga 0 vs சிம்பாபே 
  • 450வது: Daryl Tuffey 1 vs நியூசிலாந்து
  • 500வது: Michael Kasprowicz 0 vs அவுஸ்திரேலியா
  • 520வது: Mluleki Nkala 24 vs சிம்பாபே 
  • ஸ்கொட்னி வோல்சின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
  • 550வது: Khaled Mashud 2 vs பங்களாதேஸ்
  • 600வது: Khaled Mashud 6 vs பங்களாதேஸ்
  • 650வது: Makhaya Ntini 13 vs தென்னாபிரிக்கா
  • 700வது: Syed Rasel 4 vs பங்களாதேஸ்
  • 709வது: Paul Collingwood 45 vs இங்கிலாந்து
  • சேன் வோர்னின் உலகசாதனை முரளியால் முறையடிக்கப்பட்டது.
  • 750வது: Sourav Ganguly 16 vs இந்தியா
  • 800வது Pragyan Ojha 3 VS இந்தியா


முரளி 800 எடுத்துவிட்டார், இனி அவர் 801வது விக்கற் எடுப்பது சாத்தியமே இல்லை என்றாகிவிட்டது. "நான் முரளி" என்று சொல்லி சின்ன வயதில் விளையாடும் போது பந்து வீசாதவர்களே இருந்திருக்க முடியாது. அந்தவகையில் முரளி பிறந்த இலங்கைத்திருநாட்டில் நானும் பிறந்ததை பெருமையாக நினைக்கிறேன். ஸ்பின் பந்து வீச்சின் கடவுள் முரளிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் 800வது விக்கற் எடுத்த போது இருந்த சந்தோஷம் இப்போது மீண்டும் டெஸ்டில் பந்து வீசுவதை பார்க்க முடியாத வருத்தமாகிப்போய்விட்டது. 


இதுவரை OFF SPIN ஆகவே போய்க்கொண்டிருக்கும் முரளியின் முடிவு அவரின் தூஸ்ரா போல மறுபக்கம் திரும்பாதா???


நன்றி - விக்கிப்பீடியா, கிறிக்இன்ஃபோ &கூகிளாண்டவர்
we miss you murali
ஒரு மனிதனுக்குவாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனா சோதனையே வாழ்க்கையா அமைந்துவிட்டால்? நாம் ஒரு விடயத்தைச் செய்கிறோம், அது பிழைத்துவிடுகிறது அல்லது பிறரால் அது பிழை எனக்கருதப்படுகிறது. அதற்காக நாம் செய்வது பிழை என்று ஆகிவிடுமா? அதுதான் முரளிதரன் என்ற மாமனிதனுக்கும் நடந்தது. அவர் இன்று ஒரு சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாது சிறந்த மனிதராக திகழ்கிறார். நேற்றைக்கு வந்த பந்துவீச்சாளர்களெல்லாம் ஒரு போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 2விக்கெற் எடுத்தாலே ஏதோ தாங்கள் பெரிய பந்துவீச்சாளர் என்று பெருமையில் துடுப்பாட்ட வீரருடன் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதும், ஒழுங்கமின்றி நடந்து கொள்வதும் அனைவரும் அறிந்ததே.


அதிக விடயம் தெரிந்தவன் அமைதியாகத்தான் இருப்பான் என்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் முரளிதரன். இதுவரை சர்வதேச கிறிக்கற் போட்டிகளில் மாத்திரம் 61928 பந்துகளை சுழற்றி வீசி 1320 விக்கற்டுகளையும் சாய்த்திருக்கும் சிங்கத்துக்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றுதான். ஆனால் இலங்கை அணி என்றால் முரளி விளையாடுகிறார் என்றால் எதிரணிக்கு பீதி போகும் எமக்கும் இலங்கை கட்டாயம் வெல்லும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கும். 


முரளி பந்தை எறியவில்லை என்பதற்கான ஆதாரம் காட்டும் வீடியோ - ஒரு நினைவுக்காக

we miss you murali







சின்னத் தொழிலாளி
மாலைவேளைகளில் நண்பர்களுடன் கடற்கரைக்கு காற்று வாங்கச்செல்வது எனது நாளாந்தக்கடமைகளில் ஒன்று. அன்றும் அப்படித்தான் நானும் இன்னொரு நண்பனும் மற்ற நண்பர்கள் வரமுதலே கடற்கரைக்கு சென்றுவிட்டோம். ஒரு சிறுவன் கடலை விற்றுக்கொண்டு வந்தான். ஒரு 6 அல்லது 7 வயதுதான் இருக்கும். பாடசாலைச் சீருடை அரைக்காற்சட்டை அணித்திருந்தான். பாடசாலையில் படிப்பவன்தான் என்று முடிவு பண்ணிவிட்டோம். கடற்கரையில் நமக்கும் பொழுது போகாததால் அவனிடம் விசாரித்தோம்.
நாம் - எந்த ஸ்கூல்
சிறுவன் - சென்சேவியர்
நாம் - எத்தனையாம் வகுப்பு?
சி- 3ம் வகுப்பு
நா - வீடு எங்கே? அப்பா அம்மா?
சி - அப்பாவுக்கு சுகமில்லை, அம்மா வீடடில்.
நா - சகோதரர்கள்?
சி - 2 அண்ணா
பிறகு அவனிடம் கடலை வாங்கிவி்ட்டு காசைக்கொடுக்க அவன் போய்விட்டான். அதன் பிறகுதான் கவனித்தோம் கடலை விற்றுக்கொண்டிருந்தவர்களில் பலர் பாடசாலைச்சீருடைக் (நீல)காற்சட்டைதான் அணிந்திருந்தர்கள்.

இப்படி இன்னும் எத்தனை சிறுவர்கள் குடும்பப்பிரச்சினைக்காக இப்படி பாடசாலை முடிந்ததும் அப்படி ஒரு வேளைக்கஞ்சிக்காக உழைக்கிறார்கள். இவ்வாறான சிறுவர்கள் கூடுதலாக 9வது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிடுவதும் நான் கண்கூடாக்கண்ட உண்மை. 


EXAM








80 நிமிடம், தனி அறை, உங்களுடன் சேர்த்து 8 தேர்வாளர்கள், ஒரு காவலாளி, உங்களுக்கு மேசை,கதிரை வழங்கப்பட்டிருக்கிறது. மேசையில் ஒரு வினாத்தாள், தாளைப்பார்க்கிறீர்கள் வெறுமையாக இருக்கிறது. கேள்வியைக்கண்டுபிடித்து விடையளிக்க வேண்டும் என்ன செய்வீர்கள்? அதுதான் இந்தப்படம் - EXAM.



லொக்கேசன் மாற்றம் இல்லை, பாட்டு இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை,ரொமான்டிக் சீன் இல்லை பத்தடி உயரத்தில் பறந்து அடிக்கும் அக்சன் சீன் இல்லை ஆனால் ஒன்று மட்டும் இருக்கிறது. விறுவிறுப்பு. கட்டாயம் அனைவருமே பார்க்கவேண்டிய படம். உங்கள்முளைக்குத்தீனி போடும் சிறந்த படம். படம் முடிவடையும் போது நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நினைத்த அத்தனையும் தவிடுபொடியாகியிருக்கும். கட்டாயம் அனைவரும் ஒருமுறை பார்த்துத்தான் பாருங்களேன். படம் டவுன்லோடிங் லிங்கைப்பெற இங்கே சொடுக்குங்கள்.


ஆத்திரம், அன்பு
ஒரு மனிதர் தனது காரை திருத்திக்கொண்டிருந்தார். அவரது நான்கு வயது மகன் காரில் கல் ஒன்றினால் காரில் ஏதையோ வரைந்து கொண்டிருந்தான்.அதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர் மகனது கையைப்பிடித்து அடிஅடியென்று அடித்துவிட்டார். ஆனால் ஆத்திர மிகுதியால் கையில் திருத்தும் கருவி இருந்ததைக் கவனிக்கவில்லை.


மறுநாள் வைத்தியசாலையில் பையன் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த அப்பாவிடம் "என் கைவிரல்கள் எப்ப வளரும்?" என்று கேட்டான்.


உடனே தான் செய்த செயலை எண்ணிக் கவலையும் ஆத்திரமும் அடைந்த அவர் தனது கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்குச்சென்று காரை தன் ஆத்திர மிகுதியால் போட்டு அடிஅடியென அடித்தார். பிறகு சிறுவன் கிறுக்கிய இடத்தைப்பார்த்தார்.அங்கே



என அச்சிறுவன் எழுதியிருந்தான்.



ஆத்திரம் என்பது கொடிய அரக்கன் அதை, அன்பு என்பது இனிய அரக்கன், அன்பை வாரி வழங்கலாம், ஆனால் ஆத்திரத்தை அடியோடு அழிக்க வேண்டும்.


NO COMMENTS
பி.கு - இது தரம் 2 பயிற்சிப்புத்தகத்தில் காணப்பட்ட படம்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்