செஞ்சுரி
இது எனது 100வது பதிவு. ஆரம்பத்தில் சுபாங்கன் அண்ணாவின் பதிவுகளில் தொடங்கிஅவரின் வலைப்பூ மூலம் பலரின் வலைப்பூக்களையும் வாசிக்கத்தொடங்கி நான் ஏன் எனக்கென்று ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாதென்று ஒருவாறு சுபாங்கன் அண்ணாவின் வழிகாட்டலுடன் பதிவுலகில் பிரவேசித்தவன் நான். அதன் பின்னர் மீ த பர்ஸ்ட் கன்கொன், வந்தியண்ணா, லோசன் அண்ணா, கெளபாய் மது அண்ணா, கீர்த்தி அக்கா பாலா அண்ணா, வரோ அண்ணா, கமல் அண்ணா, புல்லட் அண்ணா, சதீஸ் அண்ணாஈ வானம்பாடிகள் சார் ,ஆதிரை அண்ணா, உட்பட்ட பலர் (பெயர் குறிப்பிட மறந்தவர்கள் மன்னிக்கவும் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டால் பதிவு ரொம்ப நீண்டுவிடும்.) பின்னூட்டங்களில் எனக்கு அளித்த ஊக்கமும், தன்னம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் போட்டோ கமண்ட் என்பது நான் மிகவும் விரும்பி வெளியிடும் பதிவு. பதிவுலகில் காலடியெடுத்து வைத்து சில பதிவுகள் இட்ட பிறகு என்ன பதிவு இடுவது என்று குழம்பி யோசித்து எனது குரு(:P) சுபாங்கன் அண்ணாவிடம் கேட்டபோது வலைமனை என்ற வலைப்பூவின் சுட்டியைத்தந்து இப்படி ஏதாவது ட்ரை பண்ணுடா என்றார். இப்படி ஆரம்பித்ததுதான் போட்டோ கமண்ட்ஸ். எனவே இதுவரை ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.
36 - கும்மிக்கு சிங்களம் என்ன?
நேற்று மூஞ்சிப்புத்தகத்தில் கண்ட ஒரு போட்டோ கமண்ட்நோட்டை (NOTE) கன்கொன், ஆதிரை அண்ணா சுபா அண்ணா உட்பட சில பதிவுலக நண்பர்கள் சிலருக்கு PM அனுப்பியிருந்தேன். அதன்பின்னர் அது ஒரு வலைப்பதிவிலிருந்து பிரதி பண்ணப்பட்ட நோட் எனக்கு கூறி மூஞ்சிப்புத்தகத்தில் கும்மியை இனிதே ஆரம்பித்து வைத்தார் மீத பர்ஸ்ட் கன்கொன் மன்னிக்கவும் கிரிஷ்.(தனது பெயரை கன்கொன் என்பதிலிருந்து கிரிஷ் என மாற்றிப் போட்டால் வெளிநாட்டுக்கண்டோஸ் தருவதாக உறுதியளித்திருக்கிறார்). அதன்பின்னர் களத்தில் ஆதிரை அண்ணாவும் குதிக்க கும்மி களைகட்டியது.
இங்கு கும்மி ஓருபுறம் களை கட்டி ஒரு 7 PrivateMsgகளைக்கடந்திருக்கும்,
"நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி...."
என் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.
ஹலோ
மறுமுனையில் சுபா அண்ணா புல்டோசரின் டயருக்குப்பின்னால் இருந்து- என்னடா நடக்குது பேஸ்புக்கில?
ஒண்டுமில்ல சும்மா கும்மிறம் ஏன்?
டேய் படுபாவி, கீஈஈஈஈக்..... கீஈஈஈஈக் (கெட்டவார்த்தை) என்று காதில் ரத்தம் வரும் அளவுக்குத்திட்டிவிட்டு இங்கிலீஸ்ல கும்முங்கடா மொபைல்ல தமிழ் வராதில்ல என்றுவிட்டு போஃனை கட் பண்ணினார்..:p
8.30க்கு ஆரம்பித்த கும்மி தற்போது 12 மணியை அண்மிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பொங்கியெழுந்த ஆதிரை அண்ணா..
தம்பிங்களா...........
உந்தளவு மெசேஜ்ஜும் என் மொபைலுக்கு வருகுதப்பா... போதுமப்பா.
பக்கத்திலே இருக்கிறவன்... GF ஓ என்று கேட்கிறான்.
Feel பண்ண வையாதீங்கப்பா
என்று கவலையாகச்சொல்ல நாம் எமது ஆய்வுக்குழுவை ஆதிரை அண்ணாவின் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அங்கே அலுவலகத்திலே ஆதிரை அண்ணா எழுந்து அலுவலகத்துக்கு வெளியே வந்து எதிரில் இருந்த ஒரு கடையில் கடைக்காரரை கெஞ்சிக்கூத்தாடி இரு தடிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் அலுவலகம் திரும்பினார். அதன் பிறகு பார்த்தால் திடிரேன அந்தத்தடிகளை ஒன்றோடு ஒன்று தட்டி மேலும் கீழும் குனிந்து நிமிர்ந்து காலைக் கையைத்தூக்கி ஆடத்தொடங்கினார். எதிரில் அவரின் சிங்கள நண்பர் அமர்ந்து மண்டையைப்பிய்த்துக்கொண்டிருந்தார்.
என்னடா இது என்று எமது ஆய்வுக்குழுவும் மண்டையைப்பிய்த்துக் கொண்டிருக்க ஆதிரை அண்ணாவின் மொபைலுக்கு வந்த செய்திகளைப்பார்த்து GIRL FRIENDடா? என்று கேட்ட நண்பருக்கு இல்லை அது கும்மி என்று விளங்கப்படுத்த ஆதிரைஅண்ணாக்கு கும்மிக்கு சிங்களம் தெரியாததால் அவர் ஆடி செயன்முறை விளக்கம் கொடுத்தாக ஆய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு 29 மசேஜ்களை கும்மி கடந்த நிலையில் 30வது வெற்றி மசேஜை சுபாங்கன் அண்ணா மனமுடைந்து போய் காலை 8.30 மணியிலிருந்து என்ன நடக்குதென்றே தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாக ஆதங்கத்தை தெரிவிக்க இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி கன்கொன் சீச்சீ கிரிஷ் தான் ஒபாமாவுடன் கதைத்து இதற்கு சிறந்த தீர்வைப் பெற்றுத்தருகிறேன் என்று மீண்டும் கும்மியை ஆரம்பிக்க முயல..
சொல்லிப்போட்டேன்...
வீட்ட போக வெளிக்கிட்டு விட்டேன்.
என்ன எதுவாக இருந்தாலும் Gmail ஐப் பாவிக்கவும்.
பஸ் கொண்டக்டர் அந்தக் கேள்வியைக் கேட்டால், நான் தற்கொலைதான் பண்னனும்
என்ற ஆதிரை அண்ணாவின் 36வது PMமுடன் ஆதிரை அண்ணாவின் உயிருக்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் கும்மி சடாரென நிறுத்தப்பட்டது.
பி.கு - யாராவது கும்மிக்கு சிங்களம் என்ன என்று தெரிந்தால் சொல்லிட்டுப்போங்க? ஆதிரை அண்ணா அடிக்கடி ஆடிக்காட்டமுடியாதில்ல..
நூறுக்கு முதலில் வந்தது நான் தான். வாழ்த்துக்கள் என்னையும் உங்களுக்கு பின்நூடியவர் வரிசையில் சேர்த்ததுக்கு நன்றி. உங்கள் போட்டோ கொமன்ட் பார்த்து தான் நான் போட்டோ கொமன்ட் போட தொடங்கினான். வாழ்த்துக்கள்.