உள்ளே காவல்த்துறை தன் செக்கிங் பணியை செய்துகொண்டிருந்தது, என்னைக்கண்டவுடன் "சேர் யூ கன் கோ" என்றனர்,( ஹீஹீ நம்புங்கப்பா). ஒருவழியாக உள்ளே நுழைந்தால் முதலதவதாக கண்டது ஒரு சுத்தியலால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தில் அடிக்க வேண்டும் அதிகம் பலத்துடன் அடித்தால் பரிசு, அடேய் பவன் உன் வீரத்துக்கு வேலை வந்திட்டுதுடா என்று நானும் கிளம்பிச்சென்று சுத்தியலை வாங்கமுயல, தம்பி இது சின்னப்பிள்ளைகளுக்கு உங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டான் படுபாவி, நான் பச்சிளம் பாலகன் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் விடவில்லை அவன்.
ச்சா.. என்ன கொடுமை ஆரம்பமே ஆப்பாகிவிட்டதே என்று அடுத்த இடத்தில் பார்த்தால் இலவச கோப்பி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது, அங்கும் சென்று அவமானப்படுத்தி விட்டால் மனம் ஒருகணம் யோசித்தது ஆனால் இலவசம் என்பதற்கு முன்னால் மானமா முக்கியம் ஓசியில் கொடுத்தால் சோப்பையும் தின்னுவமுல்ல என்று மார்தட்டிக்கொண்டு நண்பன் அடித்துப்பிடித்து வாங்கிவந்த(இலவசமாகத்தான்) கோப்பியை குடித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறினோம்.
அங்கே ஒரு லொறியில் சில பெண்கள் சில பெண்களைக் கதிரையில் உட்கார வைத்து தலைமுடி, முகமென என்னென்னமோ செய்துகொண்டிருந்தார்கள், அது என்னமோ அவர்களை அழகுகாக்கும் இடமாம்.(நண்பன் ஒருவன் அங்கு முகத்தில் வெள்ளையாக எதையோ பூசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைப்பார்த்து பேய் என்று கூறி மயங்கி விழுந்தது வேறு கதை)
அடுத்து அங்கே பாட்டுச்சத்தமும் கூட்டமும் சலசலப்புமாகக்காணப்பட்ட ஒரு இடத்தை அடைந்தோம் அட..அட..அட... என்ன ஆட்டம், சேறு குவிக்கப்பட்ட திடலில் ஆட்டம் போட வேண்டும் அதில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டு பரிசு கொடுப்பார்களாம், அங்கே எட்டு அண்ணன்கள் ஆடிக்கொண்டிருந்தனர், அட சூப்பரா ஆடுறாங்களே என்று சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் ஆடியவர்களில் ஒருவன் திடீரென பல்டி அடித்தான் படுபாவி எனது புதுவெள்ளை ரீ-சேட்டுக்கு FREEயா டிசைன் போட்டுவிட்டுட்டான்(சேற்றை அள்ளி வீசிட்டானப்பா) உடனடியாக அவனுக்கு அர்ச்சனை செய்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
மீண்டும் அந்தச்சேற்றுத்திடலுக்குப்சற்றுத்தள்ளிஓரிடத்தில் ஒரே பெண்கள் கூட்டம் உடனடியாக கால்கள் அந்த இடத்துக்கு விரைந்தது, ஆஹா அற்புதமான ஒரு நிகழ்வு, கண்கொள்ளாக்காட்சி. துணிதுவைக்கும் போட்டி அங்கு சேற்றில் புதைக்கப்பட்ட துணி கொடுக்கப்படும், அதை சேர்ப் எக்செலில் கழுவவேண்டும் அதுவும் வேகமாக, அவர்களின் வேகத்துக்கு ஈடுகுடுக்க முடியாமல் படமெடுக்க நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும், கழுவிய துணிகளில் மிகவும் சுத்தமாக இருக்கும் துணிக்கு அதாவது துணி துவைத்தவருக்கு பரிசு வழங்கப்படும்.
அடுத்து அங்கு ஒருத்தன் கோல்கேட் டூத் பேஸ்ட் மூன்று, AXE body spray, மற்றும் மூன்று விளையாட்டுக்களுக்கான டிக்கெட்டுகளுடன் வந்தான், என்னடா என்று விசாரித்தால் 100 ருபாவுக்கு இவ்வளவும் கிடைக்குது என்றான், கொழும்பிலிருந்து வந்த நண்பன் எதுக்கு இருக்கிறான், அவனைக்கூட்டிக்கொண்டுபோய் 100ருபாவுக்கு அந்த பொருட்களை வாங்கினோம், பிறகு கிடைத்த விளையாட்டுக்கான டிக்கெட்டுகளில் மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது, 1-பல் பரிசோதனை, 2-துண்டங்களைப்பொருத்தும் விளையாட்டு(PUZZLE), 3- GOOD HABIT என்று போட்டிருந்தார்கள் அது(good habit) என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை எனவே எஞ்சியிருந்த துண்டம் பொருத்தல் மற்றும் பல்பரிசோதனை இரண்டில் எதுவென தெரிவு செய்ய வேண்டிய சூழ்நிலை, சரி பேசாமல் பல் பரிசோதனை செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டு கடைசியாக அங்கு செல்லலாம் என்று சாப்பாட்டுக்கடைப்பக்கம் நடையைக்கட்டினோம்.
அங்கே சாப்பாட்டுக்கடையிலே விதவிதமான சாப்பாடகள், வாசனை மூக்கை உறுத்தியது, விலைவிசாரித்தால் 200, 300 ருபா என்றார்கள் விலை ரொம்பக்குறைவாக இருந்ததால் அவ்விடத்தைக்காலி பண்ணிவிட்டு ஐஸ் கிறீம் கடையில் 20ருபா அதிக விலைக்கு ஐஸ்கிறீம் குடித்துத்தபடி பல்பரிசோதனை நிலையத்தைத்தேடிப்போனோம், என்ன கொடுமை இது அங்கே போனால் பல்பரிசோதனை நிலையத்தை மூடிக்கொண்டிருந்தார்கள், உடனே கடுப்பாகிய நாங்கள் அந்தப்பல் பரிசோதனை நிலையத்தை ஒன்றுமே செய்யாது கானிவெல்லிலிருந்து விடைபெற்றோம், மீண்டும் வாசலில் காவல்ப்படை சல்யூட்டடித்து வழியனுப்பியது...ஹீஹீ
இதுதவிர ராட்டினம், பாதாள சைக்கிளோட்டம், ரக்டர், மொட்டார் வண்டி சகிதம் ஒருவர் செய்யும் வீர தீரச்செயல்கள், சுற்றி ஓடும் பிளேன் என விளையாட்டுகள் ஏராளம், விளையாட்டுகளைவிட இரவில் பாட்டுக்கச்சேரியும் களைகட்டும், திருமலை களியாட்டத்தில் களிப்பாக இருக்கிறது.
இன்னொரு முறை போக வேண்டும் யாராவது ஸ்பொன்சர் செய்கிறீர்களா?
பி.கு - புகைப்படம் எடுத்து உதவிய நண்பன் சுஜீனுக்கு நன்றிகள். Tweet
ஓசிப்பணியாரம்.....
யாராவது உள்ளீர்களா?
இன்று பவனை பிரித்து மேய நான் தயார்.....