Related Posts with Thumbnails


ஓரே இருள், எங்கே இருக்கிறேன்? ஒன்றுமே புரியவில்லை. எழலாம் என்று எத்தனிக்கிறேன் முடியவில்லை. ஏதொ ஒரு பாரம், முதுகுப்பக்கத்தில் நரம்புகளுக்கு கைவிலங்கிட்டது போல இருக்கிறது. ஆ.... முடியவில்லை வலிக்கிறது எழும்ப முடியவில்லை. ம்... கட்டாயம் எழுந்தே ஆக வேண்டும், ஆம் இதோ இப்போது எழும்பிவிடுவேன், ம்ம்... ஆஹ்.... ஆ.... ஐயோ என்ன வலி முதுகு உடைந்து விட்டதா... வலியை பொறுத்துக்கொண்டு கற்குவியலுக்குள்ளிருந்து எழுந்து விட்டேன், அப்பாடா. 

கண்கள் கூசுகிறது, சற்று குளிர்வது போல உணர்கிறேன்.கண்களைத்திறந்து பார்க்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. கட்டடங்கள் கூட இல்லை. என்ன நடந்தது கொஞ்சநேரத்துக்கு முதல் ஆம் ஹாஹாஹா.... நான் பிழைத்துவிட்டேனா? பூமியைத்தாக்கிய விண்கல் என்னைத்தாக்கவில்லை, எல்லோரும் இறந்து விட்டனரா, நான் மட்டும் பிழைத்துவிட்டேனா? இனம்புரியாத மகிழ்ச்சி. 2012ஆம் ஆண்டு உலக அழிவிலிருந்து தப்பிவிட்டேன், நான் மட்டும்தான் தப்பியவனா? இந்த உலகிற்கே நான்தான் இப்போது சொந்தக்காரனா? 

"அடச்சீ என்ன மனிதனடா நீ உலகத்தில் உள்ள அனைவருமே அழிந்து விட்டனர், நீ பிழைத்தது உனக்கு மகிழ்ச்சியா?" மனச்சாட்சி எனக்குள் குமுறுகிறது. சரி முடிந்தது முடிந்து விட்டது.  கணனிக்கு முன் உட்கார்ந்து கார்பிளாக்ஸ் சாப்பிட்ட எனக்கு இன்று பழங்குடியினர் போல மரங்களில் உள்ள பழங்கள், இலைகளைச் சாப்பிட்டு பசியாற்ற வேண்டிய நிலை. சிலநாட்கள் இப்படியே கடந்தது. முதுகு வலியும் சற்றுக்குறைய எழுந்து நடக்கத்தொடங்கினேன். கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் வழியெங்கும் பிணங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் கடக்கும் வாகனங்கள் செத்துப்போன கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்து கிடக்கிறது. 

யாரது? அவரா அது? அவனுக்கென்ன மரியாதை அது அவனா? அங்கே கொட்டில் அமைத்து என்னசெய்கிறான்? அட இங்கு குட்டிக் குட்டி உருவங்கள் வேறு இருக்கின்றனவே? ஆம் அந்தக் குட்டி உருவங்கள் இதுவரை செய்திகளிலும் படங்களிலும் பார்த்த ஏலியன்கள்தான், அவை எப்படி இவனுடன், அட யாரிந்த இவன் என்கிறீர்களா? காவி உடை, கையில் கமண்டலம் ஆம் இவன் அந்தப்போலிச்சாமியே தான். ஏலியன்களுடன் என்ன செய்கிறான், சற்றுகிட்டப்போய்ப்பார்க்கலாம் என்று போகிறேன், மனம் படபடக்கிறது.ஏதோ மந்திரம் சொல்கிறான், அவையும் (ஏலியன்களும்) சொல்கின்றன, அவனின் காலில் விழுந்து வணங்குகின்றன. 

திடீரென டிஜிட்டல் பதாகைகளுடன் மைக் போட்டுக் கத்தியபடி ஒரு ஏலியன்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. நடுவில் ஒருத்தர் மட்டும் வித்தியாசமாகக் காணப்படுகிறார், ஆம் அந்த அரசியல்வாதிதான், இவனும் பிழைத்துக் கொண்டானா? என்ன கொடுமை இது, நல்லவர்கள் யாருமே பிழைக்கவில்லையா? மீண்டும் மனச்சாட்சி குமுறுகிறது, கவலை தொற்றிக்கொள்கிறது. மீண்டும் இப்படியொரு சமூகத்தில் வாழவேண்டுமா? 

நீண்ட நேர நடைப்பயணம், கால்கள் கடுக்கிறது நிலத்தில் அமர்ந்து விட்டேன், களைப்பு மிகுதியால் கையை நில்த்தில் ஊன்றுகிறேன், அங்கே கையில் தட்டுப்பட்டது ஒரு மடிக்கணனி எடுத்துப்பார்க்கிறேன் வேலை செய்கிறது, அட வயர்லஸ் இன்டர் நெட் கூட வேலை செய்கிறது. அட உடனடியாக மடிக்கணனியில் அந்தப்போலிச்சாமி, அரசியல் போன்ற விடயங்களைப்பதிவிடவேண்டும் ஆனால் அந்த ஏலியன்களுக்கு எந்தமொழி தெரியுமோ? உடனடியாக யோசனை தோன்றுகிறது அவர்கள் பற்றிய வீடியோககளை பதிவிடுகிறேன், ஆம் என்னதான் உலகம் அழிவு ஏற்பட்டாலும் இப்படி ஒருசிலர் தப்பித்துக்கொண்டால் மனிதனென்ன எந்த உயிரினமும்,ஏலியன்களும் கூட அடிமையாகும் அவர்களுக்கு.

பி.கு - உலகம் அழியுதோ இல்லையோ அழிக்கப்பட வேண்டிய மூட நம்பிக்கையை அழிப்போம்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அடேயப்பா! சாமி. கையக்குடு.:)

  1. புரியுது! ஆனாப் புரியல… வித்தியாசமான பதிவு.

    //கண்களைத்திறந்து பார்க்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. கட்டடங்கள் கூட இல்லை. என்ன நடந்தது கொஞ்சநேரத்துக்கு முதல் ஆம் ஹாஹாஹா.... நான் பிழைத்துவிட்டேனா? பூமியைத்தாக்கிய விண்கல் என்னைத்தாக்கவில்லை, எல்லோரும் இறந்து விட்டனரா, நான் மட்டும் பிழைத்துவிட்டேனா? இனம்புரியாத மகிழ்ச்சி.//

    நானும் இப்பிடியான ஒரு சிற்றிவேஷனிலை மாட்டுப்பட்டன், அந்தக் காரில வந்திறங்கினது யார் எண்டு குற்றுயிரும் குலையுயிருமா இருந்த நான் எட்டிப்பார்த்தன், அதே புல்லட் டுமீல் தான் ‘இனி இவன் இருக்கிற இடத்தில எனக்கு வேலையில்லை’ என மனசுக்குள் நினைத்துக் கொண்டு (பிறகென்ன பொம்பிளைப் பிள்ளையள் புல்லட்டுக்கு பின்னால போனால் நான் என்ன செய்யுறது) பக்கத்தில இருந்த ஆத்துல குதிக்கிற மாதிரி ஒரு கனவு.

  1. கையக்குடு பாஸ்.. ஏலியன்களும் கள்ளச்சாமியை கும்பிடும்கிற கொன்செப்டை என்னால பாாராட்டாம இருக்கமுடியல..ஹிஹி.. நல்ல கற்பனை.. அதுசரி உங்க ஊர்ப்பக்கம் ஏலியன்லாம் திரியுமாமே? அங்கனய ஆச்சிரமத்துக்கு வந்திருக்குமோ?

    அப்பன் வரோ? நான் உனக்கு என்னப்பா செஞ்சென்.. பிள்ளைகள் எனக்கு பின்னால வருதெண்டு யாரப்பா சொன்னது? எல்லாம் அண்ணா என்ற ரீதியல்தான் அன்புசெலத்துது.. ஆகுவே எல்லாரக்கும் சான்ஸ் இருக்கு.. அவசரப்பட்டு குதிச்சிடாயப்பன் ஆத்துக்க..
    பாவம் அதுக்க இருக்கிற ஏலிய்ன மீன்கள்.. :P

    மக்களே தற்பொது சடுதியாக கிளம்பியிருக்கும் புல்லட் பெண்களை கவர்வதான குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையுமில்லை.. நான் அப்பாவி..:(

  1. அடடே...
    பின்நவீனத்துவமா? :P

    நல்ல எழுதிறாயப்பு...
    அதுவும் அந்த தொடக்கத்தில //ஓரே இருள், எங்கே இருக்கிறேன்? ஒன்றுமே புரியவில்லை. எழலாம் என்று எத்தனிக்கிறேன் முடியவில்லை. ஏதொ ஒரு பாரம், முதுகுப்பக்கத்தில் நரம்புகளுக்கு கைவிலங்கிட்டது போல இருக்கிறது. ஆ.... முடியவில்லை வலிக்கிறது எழும்ப முடியவில்லை. ம்... கட்டாயம் எழுந்தே ஆக வேண்டும், ஆம் இதோ இப்போது எழும்பிவிடுவேன், ம்ம்... ஆஹ்.... ஆ.... ஐயோ என்ன வலி முதுகு உடைந்து விட்டதா... வலியை பொறுத்துக்கொண்டு கற்குவியலுக்குள்ளிருந்து எழுந்து விட்டேன், அப்பாடா. //
    எண்டது சம்பவத்தை நேரில பாத்தது மாதிரி இருந்திச்சு...

    நடக்கட்டும் நடக்கட்டும்... :)

  1. உண்மைதான் நண்பா.

  1. பவன் பதிவு சூப்பர் நண்பா!

    நீ சொன்னவை மாற்றபடவேண்டிய மாற்றபடாதவைகள்.... அல்லது மாற்ற முடியாதவை.....

    ஆனாலும் உனக்கு ஏன் இந்த சமுக அக்கறை...

  1. என்னால முடியல தலையை பிச்சிகிறேன்

  1. Bavan Says:

    வானம்பாடிகள்,

    //அடேயப்பா! சாமி. கையக்குடு.:)//

    என்னாதுது? சாமியா? அது நானில்ல..:p

    நன்றி வானம்பாடி சார் வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ******

    வரோ அண்ணா,

    //புரியுது! ஆனாப் புரியல//

    அவரா நீங்க..அவ்வ்வ...:p

    //நானும் இப்பிடியான ஒரு சிற்றிவேஷனிலை மாட்டுப்பட்டன்//

    ஹாஹா பினிசிங் நான் சொன்னது மாதிரி பொழைச்சுட்டீங்களா..LOL

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ******

    புல்லட்,

    //கையக்குடு பாஸ்.. //

    இந்தாங்க..:p

    //நல்ல கற்பனை.. அதுசரி உங்க ஊர்ப்பக்கம் ஏலியன்லாம் திரியுமாமே? அங்கனய ஆச்சிரமத்துக்கு வந்திருக்குமோ?//

    ஹாஹா இந்தப்பக்கம் இன்னும் வரேல..(ஏலியன்), ஆனா போலிச்சாமி ஏலியன்கள் இப்ப கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சிருக்குது..:(

    //மக்களே தற்பொது சடுதியாக கிளம்பியிருக்கும் புல்லட் பெண்களை கவர்வதான குற்றச்சாட்டில் எவ்விதமான உண்மையுமில்லை.. நான் அப்பாவி..:(//

    உங்களிட்ட பிடிச்சதே இந்தத்தன்னடக்கம்தான்...:p

    அழகான ஆண்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் அண்ணே..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    கன்கொன்,

    //அடடே...
    பின்நவீனத்துவமா? :P//

    ஓ.. இதுதான் பின்னவீனத்துவமா..:p

    //நல்ல எழுதிறாயப்பு..//

    ஓ... ஹிஹி நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    சுபா அண்ணா,

    :)))) நன்றி வருகைக்கம் கருத்துக்கும்..;)

    ******

    முனைவர்.இரா.குணசீலன்

    //உண்மைதான் நண்பா//

    நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    அனுதினன் said...

    //பவன் பதிவு சூப்பர் நண்பா!//

    நன்றி நண்பா..!

    //ஆனாலும் உனக்கு ஏன் இந்த சமுக அக்கறை//

    சுயநலத்துக்காக புகைவண்டியில் பயணம் செய்வதை விட இது பரவாயில்ல அப்பன்..:p

    நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ******

  1. Bavan Says:

    யோ அண்ணா,

    //என்னால முடியல தலையை பிச்சிகிறேன்//

    ஐயோ வேணாம் வேணாம்..

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. ம'...

  1. very good,

  1. Bavan Says:

    இலங்கன்,

    நன்றி இலங்கன் அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    S.M.S.ரமேஷ்,

    நன்றி ரமேஷ் அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. வித்தியாசமான நல்ல பதிவு.சூப்பர் பின்குறிப்பு அதனினும் சூப்பர்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்