நான் கொழும்பில்தான் கிறிக்கற்ரை விளையாட ஆரம்பித்தேன், எனது பிட்ச் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இரு சுவர்களுக்கிடையே ஒரு 7, 7.5 அடி இருக்கும். விளையாடுபவ்களின் எண்ணிக்கை - 1 (நான் மட்டும்தான்).
பந்தை சுவருக்கு எறிவதும் அது திரும்பி வருவதற்குள்எறிந்த கை சீக்கிரமாக BATஐ பிடிக்க வேண்டும், பிடித்த மாத்திரத்தில் பந்து வந்துவிடும் அதை அடிக்க வேண்டும். என்ன ஒரு கலை அதுவும் பயிற்சியில் நேரம் செல்லச்செல்ல பந்து எறியும் வேகம், நாம் அடிக்கும் வேகம் ஆகியன அதிகரித்துக்கொண்டே போகும். முதல்நாள் பார்த்த போட்டியின் ஸ்கோர் அடிக்க வேண்டிய ஓவர் பந்து வீச்சாளர் பெயர் என்பவற்றையும் மனது கணக்குப்போட்டுக்கொண்டிருக்கும்.
இப்படி ஒரு நாள் மாலை கடைசிப்பந்துக்கு ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, மின்னொளியில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடித்த அடியில் அது ஆறு ஓட்டமா இல்லையா எண்டது வேறு கதை நான் ஒரே ஓட்டம் மேல்மாடிக்கு. ஆம் அடித்த அடியில் எதிரே உள்ள சுவரில் பட்ட பந்து நியூட்டனின் மூன்றாம் விதியுடன் திரும்ப வந்து என் தலைக்கு மே லே ஒளிர்ந்து கொண்டிருந்த டியூப் லைட்டைத் தாக்கியது. எனக்கு ஏதோ பூமாரிப்பொழிந்தது போல இருந்தது.ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பயத்தில் அடியேன் எஸ்கேப். இங்கு எல்லாருக்கும் போல எனக்கும் விதிதான் விளையாடியது. (நியூட்டனின் 3ஆம் விதி..ஹிஹி)
அன்றுமுதல் இடம் மாற்றப்பட்டது. அடுத்த பிட்ச் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு அடி அகலம், உண்மையான் பிட்களின் அளவில் கால்வாசி அளவு வரும், இது வழக்கமாக பந்து வீச்சுப்பயிற்சிக்கு நான் பயன்படுத்தும் இடம், நியூட்டனின் சியால் இங்கு BATTINGகும் மாற்றப்பட்டது. இங்கும் விதி விளையாடியது (நியூட்டனல்ல) அது கொழும்பில் மின்வெட்டுக்காலம். எனவே எரிந்த சிமிலியை கழுவி எனது சிக்ஸ் எல்லையில் இருந்த ஒரு மேசையில் காயவைத்திருந்தார்கள். ஆனால் அன்று ஜயசூரிய நிலைத்து நின்று ஆடும் ஆட்டம். எனவே அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கவேண்டும் அப்படி அடித்து ஒரு அரைச்சதமும் போட்டாச்சு, அடுத்து அடித்த அடியில் "கிளிங் கொழுங் கிங்" என்று ஒரு சத்தம். என்னடா சத்தம்? ஏதோ உடைந்து விட்டது என்று மட்டும் தெரிந்தது. ஓடிப்போய்ப்பார்த்தால் கழுவிவைத்த சிமிலி சுக்குநூறாகக்கிடந்தது.
நான் கொழும்பில் படிக்கும் போது விடுமுறைக்க திருமலைக்கு வருவது வழக்கம். அப்போது ஒரு சமயம் எனது மச்சானும் திருமலைக்கு வந்திருந்தார். அங்கு பரந்து விரிந்த இடம் இருக்கும். கிறிக்கற், புட்பால் என எல்லாம் விளையாடலாம். அப்படித்தான் ஒரு நாள் கிறிக்கற் அது இது என்று விளையாடிக்களைத்து, புதிய விளையாட்டுத் தேடிய நேரம், மச்சான் சொன்னான் டேய் கிணறு கிண்டி விளையாடலாம் என்றான். சரியென்று ஓர் இடத்தில் கிண்டத் தொடங்கினோம். ஆனால் அந்த இடத்தில் வெயிலில் இருந்து கிணறு கிண்டியதைப் பார்த்து போய் நிழல்ல இருந்து விளையாடுங்கடா என்று அதட்டல் கேட்டது. சரியென, இடத்தை மாற்றி வீட்டுக்கருகில் ஒரு இடத்தில் கிண்டத்தொடங்கினோம்.
ஆனால் அங்கு கிண்டுவது கடினமாக இருந்ததால். கிண்டுவதற்கு ஆயுதம் தேட, கண்ணில் ஒரு அலவாங்கு பட்டது. அதை எடுத்து ஒரு குத்துதடதான் குத்தினேன். மெதுமெதுவாக தண்ணி வர ஆரம்பித்தது. ஆஹா... ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. என்று கத்தியபடி இருவரும். பெரியவர்களிடம் எதையோ சாதித்தது போல ஓட, ஓடி வந்து பார்த்தவர்கள் தண்ணி பைப் உடைந்துதான் தண்ணீர் வருகிறது எண்ட விடயம் அதுக்குப்பிறகுதான் எங்கள் கூர்மையான புத்திக்கு எட்டியது. இப்படி எங்களின் தீராத விளையாட்டுக்கள் ஏராளம். Tweet
//ஆஹா.. ஊற்று வருகிறது, ஊற்று வருகிறது. //
நீயுமா?
எங்கள் வீட்டிலும் இது நடந்ததாம்.
அக்கா நீர்க் குழாயை உடைத்துவிட்டு தண்ணீர் வர புதுமை புதுமை என்று கத்தியதாம்.
அதுசரி,
அடப்படுபாவி மக்கா...
சனத் ஜெயசூரியா தன்ர கிறிக்கற் அனுபவத்தச் சொல்ற மாதிரி என்னா பில்ட் அப். (பில்ட் அப் இற்கு தமிழ் கண்டுபிடிக்கோணும்)
//உலகக்கிண்ண வெற்றியைப்பார்த்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ அநேகமான கிறிக்கற் பைத்தியங்கள் போல //
தலைவா... உண்மையைச் சொன்னால் நானந்த வெற்றியைப் பார்க்கவே இல்லை.
ஆனால் எப்படியோ கிறிக்கற் மீது ஒரு காதல்.
நடக்கட்டும் நடக்கட்டும்...
அனுபவங்களை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறாய்...
வாழ்த்துக்கள்..