இது நல்ல கதையா என்று கேட்காதீர்கள், ஆனால் படமாக்கப்பட்ட விதம் அந்த தனுசின் கதாபாத்திரம் அதில் அவர் நடித்திருக்கும் விதமும்தான் இந்தப்படம்.ஆரம்பத்தில் ஸ்ரேயாவின் கொலுசு கடலுக்குள் விழுவதுடனே ஆரம்பிக்குது கதை. இந்த ஸ்ரேயா ஏன்தான் இப்பிடி இருக்கிறாரோ தெரியவில்லை. முன்பும் ஒரு முறை மோதிரத்தை கடலுக்குள் போட்டுவிட தனுஸ்தான் குதித்து எடுத்துக் கொடுத்தார் (திருவிளையாடல் ஆரம்பத்தில்) இப்போது கொலுசையும் போட்டுட்டார். ஏன் அதுக்குப்பிறகு தோட்டைக்கூட (தோடு) அவர் தொலைத்துவிட தனுஸ்தான் தேடிக் கொடுத்தார் என்றால் பாருங்களேன்.
ஸ்ரேயாவை தனுசும் இன்னொருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் தனுஸ் ஸ்ரேயாவை கல்லூரில் சந்திப்பதே மற்றவருக்கு ஐ லவ் யூ சொல்லும்போதுதான். ஆனால் அதுக்குப்பிறகும் தனுஸ் ஸ்ரேயாவை காதலிக்கிறார் கடைசியில் ஸ்ரேயா யாருடன் சேர்கிறார்? இதுதான் கதை. தனுஸ் தனது வழக்கமான அப்பாவித்தனமான நடிப்பை இப்படத்திலும் வெளிக்காட்டியிருக்கிறார். தவிர சிறுவர்களுடன் தானும் சேர்ந்து தனுஸ் நடித்திருப்பது தானும் பெரியமனிதர் என்று காட்டத்தானா.
என்னதான் பெயர் குட்டி என்று இருந்தாலும் தனது கராத்தே அடிகளை சண்டைகளில் காட்டி மிரட்டியும் இருக்கிறார். பேசிப்பேசியே கொல்லும் குட்டிக்கு ஆர்த்தியை நண்பனாக்கி (நண்பன்தான்) நகைச்சுவை பின்னியிருக்கிறார்கள். படம் முழுக்க நகைச்சுவை தூக்கல்.
இந்தப்படத்தில் கற்பனைக்கதாப்பாத்திரம்தான் குட்டி, இப்படியும் ஒரு கதாபாத்திரம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை OVER ACTINGகும் இல்லாமல், இந்தக்குட்டி ஒரு லூசு என்றும் நாங்க நினைத்துவிடாமல் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இங்கு கதாபாத்திரம்தான் கதையே.
மொத்தத்தில் குட்டி குழந்தைக்குட்டிகள் முதல் பாட்டிகள் வரை ஒருதடவையாவது பார்க்கவேண்டிய படம். Tweet
உலக சினிமா எதிர்பார்க்கிறவங்க பார்க்க முடியாது.
படத்தில கதை எண்டு எதுவுமெ பெருசா இல்ல...
ஆனா ஆபாசமேதும் இல்லாம, விரசங்களில்லாம படமாக்கியிருக்கிறார்கள்.
சும்மா நேரக் கழிப்பிற்கு பார்க்கலாம்.
இரசித்துவிட்டு வரலாம்..... :)
ம்... என் கருத்துத் தான் பவனுக்கும்.... ம்... :)