பதிவெழுதும் நோக்கத்தோடு பிறக்கும் குழந்தைகளை அழிக்க வேண்டும் என்பது பதிவுக்காரன்பட்டி நாட்டாமையின் உத்தரவு. அந்த வகையில் பதிவுக்காரன் பட்டியில் பதிவெழுதும் நோக்கத்தோட பிறக்குது ஒரு குழந்தை. அதுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லப்பார்க்கிறார் பரவைப்பாட்டி. அதுக்கு தனது ஐந்தறைப்பெட்டியிலிருந்து கள்ளிப்பாலை எடுத்து குழந்தைக்கு கொடுக்க முயல. உடனே குழந்தை என்னை ஏன் கொல்லுறா? பாட்டி என்னைக்கூடைல வச்சு கடல்லையோ ஏரிலயோ அனுப்பு என்று குழந்தை தனது உளறல்களைக்கொட்டுது. உடனே பாட்டி குழந்தையைத்தூக்கிட்டு பதிவுக்காரன் பட்டிய விட்டு ஓடிப்போகிறார்.
அப்புறம் பால்குடிக்குழந்தையாக இருக்கிற குழந்தை நாட்டில நடக்கிற போலிச்சாமி, அரசியல் கொடுமைகள், விளையாட்டில் பந்தைக்கடித்தல் போன்ற பல அநியாயங்களைப்பார்த்து உடனே பாட்டியிடம் வந்து நான் எப்ப இந்த அநியாயத்தைப்பற்றி எல்லாம் எழுதி பெரிய பதிவராகிறது என்று கேட்கிறது. அதுக்கு இன்னும் வயசிருக்கு நீ போய் பேசாம டைப் பண்ணுடா என்று பாட்டி சொல்லுறார். அந்தப்பையனும் போய் டைப்பண்ணத்தொடங்கிறான்.
என்னடா சம்பந்தமில்லாம ஒரு படம் என்று பார்க்கிறீங்களா? அட காலச்சக்கரம் சுழலுதுங்க. ஆம் நம்ம பதிவுஹீரோ பதிவு எழுத ஆரம்பிக்கிறார் அப்பபோகுது இந்தப்பாட்டு "பச்சை, மஞ்சள், நீல டீசேட் போட்ட பதிவன் நான் பதிவுலகைக்கலக்க வந்த மொக்கைப்பதிவர்நான்...."அதுக்குப்பிறகு சிந்தனைச்சிறகினிலே சிறகடிச்சுப்பறக்கவிரும்பும் நம்ம பதிவு ஹீரோவுக்கு புல்லட் போட்ட துப்பாக்கியால சுட்டா வாறதுமாதிரி பெயரிலிகளிடமிருந்து பின்னூட்டங்கள் மற்றும் மறை வாக்குகள் வர ஆரம்பிக்குது. அது ஹீரோக்கு ஆரம்பத்தில வருத்தமளித்தாலும் எத்தனை தடவை சுட்டாலும் எரிந்தும் எரியாம நிக்கணும் என்று களத்தில் இறங்குகிறார் நம்ம ஹீரோ. இப்படி பல சமூக சீர்கேடுகளைப்பற்றிய பதிவுகளை போட்டுத்தள்ளி பதிவுலகில் பரபரப்பான பெரிய பதிவராகிரார். ஆனா தனது பதிவுகளைப்பார்த்து அவரின் எமுத்துக்களில் மயங்கி அவரைக்காதலிக்கிறார் ஒரு பெண்பதிவர். அந்தக்காதலால் தனது மனமகழ்ச்சியில் திழைக்கும் ஹீரோ காதலியை இன்ரோல் செய்யவேண்டிய தேவையில்லாததால் களிப்பில் சிறகடித்துப்பறக்கிறார்.
ஆனால் சிறீலங்கா பங்குச்சந்தையில் வேலைசெய்யும் பெண்ணின் அப்பாவால் வருகிறது பிரச்சினை. வெட்டியா சீரியஸ் என்ற பெயரில மொக்கைரைட்டிங் செய்யும் உன்னை நம்பி எப்பிடிப் பெண்தருவது ஒரு வருடம் டைம் தாரன் அதுக்குள்ள என்னைவிட ஒரு பதிவு கூடப்போடு நான் என் பெண்ணை உனக்குத்தாறன் என்று கட்டளை விதிக்கிறார். பசி உறக்கம் இல்லாமல் தனது பதிவு எழுதும் வேலையைத்தொடர்கிறார் நம்மஹீரோ. அவர் இட்லிவடையைக்கூடக்கண்ணில் பார்க்காமல் பதிவுகளை எழுதுகிறார். இவரின் முயற்சியைப்பார்த்து ஆடிப்போன இவரின் காதலியில் அப்பா இவரின் காதலுக்கு பச்சைக்கொடிகாட்ட வானம்பாடிகளாக டூயட் பாட வேண்டிய நேரத்திலதான் வருது ஒரு அதிர்ச்சி.
அவருக்கு ஒரு மிரட்டல் பின்னூட்டம் வருது. "இனி பதிவு என்ற பெயரில ஏதாவது எழுதின மவனே சங்குதான் உனக்கு" என்று. அந்தப்பின்னூட்டம் போட்டவனைக்கண்டு பிடிச்சிட்டுத்தான் எனக்குக் கல்யாணம் என்று சபதமெடுத்து உடனே பல சக பதிவர்களின் உதவியுடன் அந்தப்பின்னூட்டம் போட்டது யார் என்று கண்டுபிடிக்க கடும் முயற்சியில் இறங்கிறார் நம்ம ஹீரோ. எத்தனையோ IP Tracerகளையும் பயன்படுத்திப்பார்க்கும் நம்ம ஹீரோவால் கண்டு பிடிக்கமுடியவில்லை. கடைசியில் ஒரு தொழிநுட்பப்பதிவரின் உதவியுடன் அந்த IP இருக்கும் ஏரியாவைக் கண்டு பிடிக்கிறார் ஹீரோ. அது நம்ம ஹீரோவின் வீட்டுக்கணணியின் IP தான். உடனே கடுப்பான ஹீரோ யாருக்கும் தெரியாமல் யார் கணணினைப்பாவிக்கிறார்கள் எனப்பார்க்க ஒரு கமெரா பூட்டிவிட்டு ஒரு மொக்கைப்பதிவையும் எழுதிவிட்டுப்போகிறார். அடுத்தநாள் அங்கு வந்து கமெராவில் பதிவான வீடியோவைப்பார்த்தவருக்கு அதிர்ச்சி. அந்த அனானிப்பின்னூட்டம், மறைவாக்குப்போட்டது எல்லாம் அவரின் பாட்டிதான்.
கடமையா உறவா என்று ஹீரோவுக்கு குழப்பம் வருகிறது. பாட்டி கடமைதான் உனக்கு முக்கியம் உன்னை ஒரு பிரபல பதிவராக்கத்தான் நான் அப்படிச்செய்தேன் என்று ருவிட்டரில் ஹீரோவுக்குச்சொல்ல, ஹீரோ அடுத்த பதிவு எழுதுகிறார், "மாட்டிய பெயரிலி பின்னூட்டக்காரி" என்ற தலைப்பில்.
மு.கு - இது முழுக்க முழுக்க மொக்கை மொக்கை மொக்கை மட்டுமே. Tweet
நடக்கட்டும் நடக்கட்டும்...
//அவரைக்காதலிக்கிறார் ஒரு பெண்பதிவர். //
இங்கு ஏதோ உள்குத்து இருப்பதாக உணர்கிறேன்.
அன்பார்ந்தவர்களே எனக்கு உண்மையைச் சொல்லிவிடுங்கள்... என்ன நடக்குது இந்த உலகத்தில?
//உன்னை ஒரு பிரபல பதிவராக்கத்தான் நான் அப்படிச்செய்தேன் என்று ருவிட்டரில் ஹீரோவுக்குச்சொல்ல, //
lol....
பதிவு கும்முவதற்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் அன்பர்களை அழைக்கிறேன்....
வாருங்கள்...