முதலில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்சால் வெற்றியீட்டியது அனைவரும் அறிந்ததே, அதில் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜனுக்கு என் வாழ்த்துக்கள். நேற்றைய போட்டியை பார்த்தவர்கள் கடைசிக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை காணத்தவறியிருக்கமாட்டீர்கள்.
சச்சினின் வீசிய பந்தை OFF திசையில் அடித்த அம்லாவின் பந்தைப்பிடிக்க முயற்சி எடுக்காத சேவாக் மெதுவாக ஓடிச் சென்றார், அப்பந்து அவர் எதிர்பார்த்தது போல பவுண்டரியை கடக்காமல் போகவே அதை காலால் பவுண்டரிக்குள் தட்டிவிட்டு நடுவருக்கு 4 ஓட்டம் எனச்சைகை காட்டினார், இச்சம்பவம் நகைப்பை ஏற்படுத்தினாலும் இவ்வாறு பல பவுண்டரிகளை கடைசி நேரத்தில் இந்திய வீரர்கள் சட்டை செய்யாமல் போகட்டும் என்று விட்டுக்கொடுத்ததையும் காணக்கூடியதபக இருந்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் கடைசிவரை ஒரு கம்பீரத்துடன் இதுமாதிரியான விரும்பத்தகாத விடயங்களை இனியாவது இவர்கள் திருத்திக்கொள்ளலாம்.
இதை அவதானித்த நடுவர் தண்டனையாக 5 ஓட்டங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
***********************************************************************************************
அம்லா - சிங்கமே!!!
நேற்றைய போட்டியில் சிங்கமாக என் கண்ணில் பட்டவர் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா , என்ன ஒரு ஆட்டம் அதுவும் விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்து கொண்டு போக அவர் கடைசிவரை மைதானத்தில் காத்த பொறுமை, நிதானம் பதிவை எழுதும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இவர் அதிகமாக பந்துகளை டொட் பண்ணும் போது எரிச்சல்ப் பட்டிருக்கிறேன் நேற்று தான் ஏன் அப்படி என்று காட்டிவிட்டார் மனுசன்.
இரண்டு போட்டிகளில் மற்றும் தொடரில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற இவரை சிங்கம் என்று பாராட்டலாம், ஏனென்றால் சிங்கம் சிங்கிள் தான் அடிக்கும் அதுவும் சிங்கிளா நின்றுதான் அடிக்கும்.
கோவா
நேற்று முன்தினம்கோவா படம் பார்த்தேன், அதிகம் இரட்டை அர்த்த வசனங்கள். 100% இளைஞர்களுக்கான படம். கட்டுப்பாடான கிராமத்தலிருந்து ஓடிப்போகும் இளைஞர்கள் பற்றிய கதை. படம் முழுவதும் காணப்படும் கவர்ச்சி சற்று நேரத்தில் பழகிப்போய் முகம் சுளிப்புக்குபெரிதாக இடம் கொடுக்கவில்லை. ஆனால் சென்னை 600028 போல எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மற்றது பிரேம் ஜீ அமரனுக்கு சுப்பிரமணியபுரம் பின்னணி இசை, வைபவ் ரெட்டிக்கு பழங்கப்படும் பின்னணி இசை என இசையில் கலக்கலையும், காமடியையும் இணைத்திருப்பது நன்றாக இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது, கடைசியில் சிம்பு வருவதுதான். அடஅடஅட என்னமா யோசிச்சிருக்காங்க, அதுவும் சிம்பு வந்த அந்த கடைசி சீன் கலக்கல்.
*********************************************************
சுஜா(ஆ)தா
இப்போதுதான் புத்தகங்கள் பல படிக்கத்தொடங்கியிருக்கிறேன். முதலில் படித்தது சுஜாதாவின் "ஆ" குரல்கள் பற்றிய கதை, என்ன ஒரு எழுத்தாளர். ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் அடுத்த அத்தியாயத்தைப் படிக்கத்தூண்டும் வகையில் இருக்கிறது. அடுத்து சுஜாதாவின் கொலையுதிர்காலம் படிக்க ஆசை, ஆனால் தேடிக்களைத்துவிட்டேன். யாராவது படிப்பதற்கு லிங் இருந்தால் பின்னூட்டத்தில் தந்துவிட்டுப்போங்கள்.
வழமைபோல் கலக்கல் பவன்.
ஷேவாக் நான் மதித்த ஒரு வீரர். இப்போ நான் அந்தளவிற்கு அவரை மதிக்கவில்லை. காரணம் அவர் சச்சின் அளவிற்கு கண்ணியம் இல்லை.
ஹம்லா கலக்கிட்டார், கடைசி வரை போராடிய தென்னாபிரிக்க வீரர்களை நம்மவர்கள் படிப்பினை ஆக கொள்ள வேண்டும். காரணம் 5 அல்லது 6 விக்கட் போனால் நம்மவாகள் விட்டு கொடுத்து விடுவார்கள்.
கோவா பார்க்கலாம் ஆனால் சென்னை 28 அல்லது சரோஜா அளவிற்கு இல்லை.
சுஜாதா வாசியுங்கள், மனுஷன் அலுக்க்வே மாட்டார், கதை படிக்க வேண்டுமானால் என் இனிய இயந்திரா, பிரிவோம் சந்திப்போம் வாசியுங்கள். என்னிடம் ஈபுத்தகங்கள் இருக்கலாம் இருந்தால் அனுப்புகிறேன். அவரது கற்றதும் பெற்றதும் வாசிக்க ஆனந்த விகடன் வாங்கிய நான் இப்போ ஆ.வி வாங்குவில்லை.
இந்த கற்றதும் பெற்றதும் ஸ்டைல்தான் இன்று பலரது மசாலா பதிவுகள். நூடில்ஸ், சூப், கொத்து பரொட்டா என பலவிடயங்களை ஒரே பதிவில் சொல்லும் வித்தையை காட்டியவர் சுஜாதா என்னும் மனிதர்தான். அவரை பற்றி எழுதி கொண்டே போகலாம்