இன்று அசலுக்கு முதல் காட்சியை பார்த்துவிடுவது என்று நேற்று இரவே முடிவெடுத்துவிட்டேன். அது என்னவோ தெரியவில்லை அஜித் படத்துக்கு எங்கள் ஏரியாவில் பெரிதாகக்கூட்டமே இல்லை. ரொம்பக்கஷ்டப்படாமல் இலகுவாக டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டோம். சரி இனிக்கதைக்கு வருவோம்.
ஆரம்பத்திலேயே சமீரா ரெட்டியுடன் சூடாக ஆரம்பிக்குது கதை. அப்படியே அப்பா அஜித், மகன் அஜித் மற்றும் அவர்கள் செய்யும் ஆயுத வியாபாரம் என்று வேகமாக செல்கிறது. அப்பா அஜித்தின் மரணத்துக்குப்பிறகு கதை சூடு பிடிக்கிறது. அப்பா அஜித் மரணிக்கும் போது சிங்கம் என்றால் என்ற பாடல் ஒலித்தது. அப்போது அருகிலிருந்த நண்பன் சொன்னது "சிங்கம் செய்த அசிங்கமான வேலையப்பாத்தியா?". மகன் அஜித் உண்மையில் அப்பா அஜித்தின் செட்டப்பின் மகனாம். அதனாலேயே அஜித்தின் மற்ற இரு அசலான மகன்களுக்கும் இந்த மகன் அஜித்தைப்பிடிக்காமல் போகிறது.
அஜித்தின் சகோதரரை எதிரிகள் கடத்தி இந்தியாக்க கொண்டு வருகிறார்கள், அவரைக்காப்பாற்றப்போகும் இடத்தில்தான் பாவனா என்டராகிறார். ஆரம்பத்திலேயே நகைச்சுவையும் சுட்டித்தனமும் நிறைந்த பெண்ணாகக்காட்டப்படும் பாவனா அனைவரையும் இரசிக்க வைக்கிறார். படம் முதல்பாதியில் விறுவிறுப்பாகச்சென்றாலும் இடைவேளைக்குப்பிறகு சற்றுத்தொய்வடைவது போல காணப்படுகிறது. ஆனால் டொன் சமோசா என்ற பெயரில் வரும் யூகிசேது காமடி பின்னியிருக்கிறார். அதுவும் மொட்டை முண்டம் போன்ற காமடிகள் ரசிக்கும்படியாகவும், சிரிக்கும்படியாகவும் இருக்கிறது. படம் தொய்வடையும் இடங்களில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் யூகிசேது.
இப்படத்தில் குறிப்பிட வேண்டிய அடுத்த விடயம் பாவனா, அஜித் ஆடும் டொட்டடொய்ங்.... என்ற பாடல். படம் பார்த்தவர்கள் அனைவருமே வெளியில் வந்து முதலில் சொன்ன வார்த்தை அதுதான். "டொட்டடொய்ய்ய்ங்...". அந்தப்பாடலை கலக்கலாகப்படமாக்கியிருக்கிறார்கள். என்னதான் சமீரா கவர்ச்சியில் போட்டுத்தாக்கியிருந்தாலும் பாவனா படத்தில் அழகாகவும், சுட்டியாகவும் மனதைக் கொள்ளை கொள்கிறார்.
அஜித்தின் ஹெயார் ஸ்டைல் அதுதான் அடுத்து சொல்ல வேண்டியது. இனி இந்த ஹெயார் ஸ்டைலையும் நிறையப்பேரின் தலைகளில் பார்க்கமுடியும். தவிர பில்லா ஸ்டைலில் கோட்சூட்டுடன் அஜித் படம்முழுவதும் வலம்வருகிறார். பில்லா போன்ற சாயலுள்ள ஒரு கதை. எடிட்டிங் கிராபிக்ஸ் அருமை. அதில் குறை என்று ஒன்றுமில்லை.
அசல் ஒருதடவை பார்க்கக்கூடிய படம். நகைச்சுவையின் துணையுடன்தான் படம் நகருகிறது. ஆங்கிலப்படங்கள் போல சண்டைக்காட்சிகளும் சிறப்பாக உள்ளது. அஜித்தின் மற்ற சகோதரர்களால் கப்பலில் வைத்து சுடப்பட்டு கடலிற்குள் விழும் அஜித் பிழைக்கிறாரா? சமீராவையா? பாவனாவையா கடைசியில் கைப்பிடிக்கிறார் என்பதே கதை.
பார்க்ககூடிய படம். அடடா தலைப்பில் ஒரு வார்த்தையை சொல்ல மறந்துவிட்டேன். இப்படி வந்திருக்கவேண்டும்.அசல் உண்மையில் நசல் இல்லை. ஹீஹீ Tweet
அடேய்.... கிராதகா....
(இது தலைப்பிற்கு)
அப்ப பாக்கலாம் எண்டுறீங்களா பவன்?
குறைகள் ஏதும் இல்லையா?
விமர்சனம் செய்கையில் குறைகளையும் குறிப்பிட மறக்க வேண்டாம்.
அடுத்தது,
இன்னொருமுறை இப்படித் தலைப்பு இடுவதைத் தவிர்க்கவும் பவன்.
எதிர்மறையாக பின்னூட்டுகிறேன் என்று கோவிக்க வேண்டாம், ஆனால் இவற்றைத் தவிர்த்துக் கொள்வது நலம்.
எனது பின்னூட்டத்தை நேர்விதமாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.