பிறக்கும் போது BORN என்றாய்
பெற்ற தாயை MOM என்றாய்
அப்பாவைப்பார்த்து DAD என்றாய்
விளையாட்டைப் PLAY என்றாய்
புத்தகத்தை BOOK என்றாய்
எழுதுகோலை PEN என்றாய்
பாடசாலை SCHOOL என்றாய்
பேரூந்தை பஸ் என்றாய்
ஆசானை சேர் என்றாய்
சந்தியை JUNCTION என்றாய்
பாட்டை SONG என்றாய்
வீட்டை HOME என்றாய்
படத்தை FILM என்றாய்
குடத்தை POT என்றாய்
படுக்கையை BED என்றாய்
நித்திரையை SLEEP என்றாய்
இருமலைக் COUGH என்றாய்
காய்ச்சலை FEVER என்றாய்
கதைப்பதை CHAT என்றாய்
குளிப்பதை BATH என்றாய்
மழையை RAIN என்றாய்
காற்றை WIND என்றாய்
கடிதத்தை LETTER என்றாய்
எழுத்துக்களை LETTERS என்றாய்
பெண்ணை GIRL என்றாய்
ஆணை BOY என்றாய்
காதலை LOVE என்றாய்
கல்யாணத்தை MARRIAGE என்றாய்
நண்பனை FRIEND என்றாய்
பணத்தை MONEY என்றாய்
மகிழ்ச்சியை HAPPY என்றாய்
சோகத்தை SAD என்றாய்
சொர்க்கத்தை HEAVEN என்றாய்
நரகத்தை HELL என்றாய்
சாவை DEATH என்றாய்
பெயரைக்கேட்டேன் ட(த)மிலரசு என்றாய் Tweet
இது 'பா'வா? (கவிதை என்பது திசைச்சொல்லாம். ) :P
என்றாலும் நாங்கள் கதைத்துப் பழகிவிட்ட சொற்கள்.
தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும், தவிர்த்தல் அவ்வளவு கடினமும் இல்லை....
முடிந்தால் முடியும்.
வாழ்த்துக்கள் பவன்... :)