Related Posts with Thumbnails
போலிச்சாமிகளின் பற்றிய பல பதிவுகள் செய்திகள் வந்து அவர்களின் பெயர்கள் நாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்? அது அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் ராதையும் போல விளையாடினார்கள் அப்படி இப்படி பல கதைகள் அதை மக்களும் நம்பி நித்தியானந்தா நல்லவர் தெய்வம் என்று இன்றுவரை நம்பும்கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.


போலிகள் பிழைத்துக்கொள்வதற்கான காரணம்?
இந்தப்போலிச்சாமிகளுக்குப்பின்னால் ஒவ்வொரு ஊடகம் இருப்பது போல தோன்றுகிறது. அண்மையில் போதை கொடுத்து மாட்டிய கல்கிபகவான், நித்தியானந்தா உட்பட இருவர் ஒரே தினத்தில் மாட்டுப்பட்டனர். ஆனால் நித்தியானந்தாவின் வீடியோவை மட்டும் அரைமணிக்கொருதடவை போட்டுக்காட்டிய ஊடகங்கள், அதைவிடப்பாரதூரமான விடயத்தில் மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? 


வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு போதை கொடுத்து அவர்களை வெறியாட்டம் ஆடவிட்டு ரசித்த பகவானை ஏன் காட்டவில்லை. மாறாக அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. பத்திரிகைகளில் கூட அவர்கள் மாட்டுப்படும் வரை முழுப்பக்கத்தில் வந்த விளம்பரங்கள் மாட்டிய பின்னர் அவர் கெட்டவர் என்ற செய்தி அரைப்பக்கம் கூட பிடிக்கவில்லை.


மக்கள் ஏமாறக்காரணம்?
பிரச்சினைகள் இல்லாத யாரும் உலகத்தில் இருக்கமுடியாது. பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும் உடனே அங்கு போகிறவன் அவர்களின் மாடமாளிகைகள், அமைதியான சூழல் ஆகியவற்றைப் பார்த்து சுருக்கமாகச் சொன்னால் மூழளச்சலவை (BRAIN WASH) பண்ணப்படுகிறான். புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியவனிடம் சென்று உடனே அதை விடு என்றால் விடமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விடவைக்க வேண்டும். அது போலதான் மக்களையும் மாற்ற வேண்டும். 


வலைப்பதிவெழுதுவதால் என்ன செய்ய முடியும்?
தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்ய முடியாத எதையும் நாம் பெரிதாக சாதித்துவிடப் போவதில்லை ஆனால் நண்பனை விட எதிரி எம்மை அவதானித்துக்கொண்டிருப்பான், எனவே நமது வலைப்பதிவை நித்தியானந்தாவையோ, பகவானையோ பின்பற்றும் ஒருவன் படித்துத் திருந்தத்தேவையில்லை, படித்தால் மட்டும் போதும் அதுவே அவன் மனதில் மக்கள் நமக்கு எதிரிகளாகிவிட்டனர் என்று ஒரு பயத்தை உருவாக்கும்.


ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். 


ஒரு சிறுவன் அம்மா அங்கே சுனாமியடித்து 1000 பேர் பலியாம் என்கிறான், அதற்கு அம்மா போடா பொய் சொல்லாதே, இல்லை அம்மா பேப்பரில் போட்டிருக்கிறார்கள் என்கிறான். பத்திரிகை மக்களிடையே பிரபல்யம் அடைந்த அளவுக்கு வலைப்பதிவு இன்னும் பிரபல்யம் அடையவில்லை. தொலைக்காட்சியில் அழுகை நாடகங்களையும் குடும்பநாடகங்களையும் போடும் நாடகங்கள்தொலைக்காட்சி சேவைகள் இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.


நினைத்தவுடம் மாறு என்றால் மாறமாட்டார்கள் கொஞ்சம் கோஞ்சமாக மாற்ற வேண்டும், அதற்கு ஊடகங்கள் அனைத்தும் உதவவேண்டும். 

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. // மாட்டிய கல்கி பகவானின் வீடியோவை ஏன் காட்டவில்லை? //

    மு.க.அழகிரி ஒரு அம்மா பகவான் பக்தராம் என்று நண்பரொருவர் சொன்ன ஞாபகம்... :)


    //அவருக்கு அண்மையில் வேறொரு தனியார் தொலைக்காட்சியில் அவருக்கு விளம்பரம் போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகு மாலை நித்தியானந்தா செய்தது என்ன என்று ஆராயும் நிகழ்ச்சி. //

    எம் நிலையை நிலைத்துச் சிரிப்பது தான் எம்மால் செய்யக்கூடிய ஒன்று என்று நினைக்கிறேன்..


    // பிரச்சினை ஏற்படும் சமயத்தில் இப்படியானவர்களை நம்பாதவனுக்குக்கூட போய்ப்பார்த்தால் என்ன? என்ற எண்ணம் மனதில் உதிக்கும்//

    எனக்குத் தெரிந்து வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் அனுபவிக்காத பிரச்சினைகள் இல்லை, ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்காக பகவான்களிடமும் ஆனந்தாக்களிடமும், பாபாக்களிடமும் சென்றிரந்தால் வடக்கு கிழக்கு முழுதும் போலிகளின் பக்தர்களாகவல்லாவா இருக்க வேண்டும்?
    இது பிரச்சினை என்பதையும் தாண்டிய ஒரு பிரச்சினை போலிருக்கிறதே?



    //இவர்கள் பற்றிஆராய்ந்து ஒரு நிகழ்ச்சியையோ? ஏன் ஒரு நாடகத்தையோ ஒளிபரப்பினால் மக்களை மாற்றமுடியும்.//

    முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை, முயற்சி எடுத்து அது கைகூடாமல் போயிருந்தால் பரவாயில்லை...

    நல்ல பதிவு பவன்...
    நாங்களும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், பார்ப்போம்....

  1. Ramesh Says:

    நல்ல பகிர்வு
    அவசியமான நல்ல விடயங்கள் பவன்

  1. //ஆனால் சன் டிவியில் வீடியோவை அரைமணிக்கொருமுறை காட்டி எத்தனைபேர் திருந்தினார்கள்?//

    //வீட்டில் பல குழந்தைகள் இருக்கும் என்பதை உணராமல் முன்னறிவித்தலின்றி இருவரும்கட்டிப் பிடித்துக்கொள்ளும் காட்சிகளை காட்டிய ஊடகம்//

    பவன்,
    நீ இட்ட தலைப்பு எனக்கு உடன்பாடு. உனது பதிவிலேயே இரண்டு விடயங்களை குறிப்பிட்டிருக்கிறாய். ஆனாலும் கல்கியை ஒழிப்பதில் தீவிரமாக இருக்கின்றாய், நான் எந்த சாமியையும் நம்புவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை உடையவன்.
    உண்மையை ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்காக சன் டி வி செய்ததை சரி என்கிறாயா?
    வயது வந்தவர்கள் ஆபாச படங்களை நேரடியாக பார்பதாலோ.. அல்லது அதை போன்ற காட்சிகள் சினிமாவில் வருவதால் விரும்பியோ விரும்பாமலோ பார்பதாலோ "ரஞ்சிதா" சம்பந்தப்பட்ட காட்சி பெரிதாக தோன்றியிருக்காது.. சிறுவர்கள் மனநிலையை யோசித்தார்களா?

    பொருத்தமான தலைப்பில் அந்த விடயங்களையும் ஆராய்ந்திருக்கலாம்.

  1. பவன் பதிவு அருமை...! எல்லோர் போல இருக்கும் ஆதங்கங்களின் வடிவமே உன் எழுத்துக்கள்!

    இந்த கருத்துகளுக்கு யாரேனும் செவிசாய்த்தால் நமக்கு அது ஒரு முன்னேற்றம்தான்!!!

    "வாள் முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்ததுதான்"

    பவன் ஒரு விடயம்
    //ஆனால் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த சாமியார் என்ற பெயரில் ஏமாற்றிப்பிழைப்பவர்களுக்காக விளம்பரம் செய்யாதீர்கள். காசு கிடைக்கிறது என்பதற்காக போதைச்சாமியாரிடமும் வன்புணர்வு கொண்ட சாமியாரிடமும் மக்களை மாட்டிவிடாதீர்கள். //

    சாமியார் என்று சொல்லும் அவர்கள் விளம்பரம் செயும் போது அவர்கள் நீங்கள் சொல்லும் சாமியார்களாக இருப்பது இல்லை. அதுதான் ஊடகங்கள் விளம்பரத்தை ஏற்று கொல்ல்கின்றனோவோ என்னவோ???

  1. Bavan Says:

    கன்கொன்,

    //மு.க.அழகிரி ஒரு அம்மா பகவான் பக்தராம் என்று நண்பரொருவர் சொன்ன ஞாபகம்... :) //

    ஆம் கேள்விப்பட்டேன்..

    //முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை, முயற்சி எடுத்து அது கைகூடாமல் போயிருந்தால் பரவாயில்லை//

    அதே அதே

    //நாங்களும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், பார்ப்போம்//

    ம்... பார்ப்போம் நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    றமேஸ் அண்ணா,

    //நல்ல பகிர்வு
    அவசியமான நல்ல விடயங்கள் பவன்//

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    வரோ அண்ணா,

    //உண்மையை ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்காக சன் டி வி செய்ததை சரி என்கிறாயா? //

    இல்லை, ஆனால் நித்தியானந்தாவைக்காட்டிய அவர்கள் ஏன் கல்கியைக் காட்டவில்லை, நித்தியை விட கல்கி பாரதூரமான குற்றவாளி, TV9சனலின் வீடியோ பார்த்தீர்களோ தெரியாது... அந்த வீடியோ பார்த்த ஒவ்வொருவதுக்கும் நித்தியை விட கல்கி மீது கடுப்பு அதிகரிக்கும்

    சன்டிவி செய்தது பிழைதான் ஆனால் போலிச்சாமிகள் பற்றி ஊடகங்கள் அக்கறையெடுத்து மக்களுக்கு அதைப்பற்றி புரியவைக்க வேண்டுமென்பதே எனது வாதம்

  1. நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  1. Bavan Says:

    @வரோ அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ******
    அனுதினன்,

    //சாமியார் என்று சொல்லும் அவர்கள் விளம்பரம் செயும் போது அவர்கள் நீங்கள் சொல்லும் சாமியார்களாக இருப்பது இல்லை. அதுதான் ஊடகங்கள் விளம்பரத்தை ஏற்று கொல்ல்கின்றனோவோ என்னவோ??///

    ஆம் அப்போது விளம்பரம் செய்தால் பரவாயில்லை, அந்தச்சாமியார் மாட்டுப்பட்ட பிறகு விளம்பரம் செய்வதுதான் கொடுமை.

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்


    ******

    சசிகுமார்,

    //நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. நல்லாயிருக்கு பவன், ஊடகங்கள் காசுக்காக இல்லாமல் சமூகத்திற்காக என இருக்க வேண்டும்

  1. நல்லா சொன்னிங்க ..

  1. Subankan Says:

    நல்ல பதிவு பவன்...
    கோபியும் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறான், பார்ப்போம்...

  1. Bavan Says:

    யோ அண்ணா,

    //நல்லாயிருக்கு பவன், ஊடகங்கள் காசுக்காக இல்லாமல் சமூகத்திற்காக என இருக்க வேண்டும்//

    அதே..

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ******

    மந்திரன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    சுபா அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. பவனுக்கு வில்லங்கம் வெளிநாட்டுல இருந்து வருகுது

  1. Bavan Says:

    //பவனுக்கு வில்லங்கம் வெளிநாட்டுல இருந்து வருகுது//

    என்னாதுதுதுது????

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்