Related Posts with Thumbnails
ஏற்கனவே நான் பதிவிட்ட இந்தப்பதிவை மீள்பதிவிட்டிருக்கிறேன், ஆசாமி நித்தியானந்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். தன்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பராசக்தி பாணியில் பதிலளிக்கிறார்


நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..  

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை... 

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....




கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்




ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

****************************************************








நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. கலக்கல் பவன்....

    சாட்டையடி, உந்தக் கள்ளன்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தான்...

    // என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?//

    //கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?//

    இனியாவது கேனைத்தனமான பக்கதர்கள் திருந்துவார்களா என்றால் இல்லைப் போலிருக்கிறது.
    யூரியூப் இல் உந்தக் கள்ளனுக்கு ஆதரவா கருத்துப் போடுது சனம்.



    //இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.//

    ஓரெ வழி இப்போதிருக்கும் கள்ளன்களை ஒழிப்பது தான்....


    வழமையைப் போல நகைச்சுவை இருந்தாலும் இதிலிருந்த சீரிய=ான கருத்துக்களை அவற்றை விட நிறையவே இரசித்தேன்....

    வாழ்த்துக்கள் பவன்...

  1. Subankan Says:

    :))

    //நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்//

    இது எதுக்குப்பா?

  1. போட்டோ கொமன்ற்ஸ்கள் வழமையைப் போல அருமை....

    அதுவும் திருமதி விஜயகுமார் 'குத்துவிளக்கு' பாடல் பாடுவது அருமை...

  1. Bavan Says:

    கன்கொன் அண்ணா,

    //யூரியூப் இல் உந்தக் கள்ளனுக்கு ஆதரவா கருத்துப் போடுது சனம்.//

    திருந்த வேண்டும் என்று நம்புவோம்... பார்க்கலாம் இவனைத் திருத்தமுடியாது.. படுபாவி..

    நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)

    ******

    சுபா அண்ணா,


    //இது எதுக்குப்பா?//

    ஏதாவது தப்பாக சொல்லிவிட்டேனா??

    நன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்...;)

  1. கலக்கல் பவன். வாய்விட்டுச்சிரித்தேன். நானும் நித்தியானந்தரை வைச்சு பதிவா்களை ஒரு வழி பண்ணுவம் எண்டு யோசிக்கிறன். பாா்ப்பம்..

  1. Subankan Says:

    //நானும் நித்தியானந்தரை வைச்சு பதிவா்களை ஒரு வழி பண்ணுவம் எண்டு யோசிக்கிறன். பாா்ப்பம்//

    அடப்பாவி, இதுவேறயா?

  1. அருமை!
    மாக்கள் என்னத்தால் அடித்தும் திருந்துமாப்போல் இல்லை.
    சங்காராச்சாரி போல் நித்தியானந்தா சில வருடங்களில் பிரமாண்டமான பிறந்த நாள் தேரில் சிரித்துக் கொண்டு வரலாம்.மாக்கள் கன்னத்தில் போட்டு மகிழும்.

    சங்கராச்சாரி மேல் எத்தனை பெண்களின் நேரடிக் குற்றச்சாட்டு அசைக்க முடிந்ததா?

  1. நண்பரே இந்த பதிவுக்கு பிறகு பவன் என் நண்பன் என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்.

    அருமை மச்சான்..... இந்த பதிவு போலி சாமிகளுக்கு மட்டுமில்லை....! அவர்களை நம்பும் நமது கேனைகளுக்கும்தான்!!!!

    இந்த பதிவின் பின்பாவது திருந்தட்டும் இந்த சமுகம்.....!!!


    பவன் உன் சேவை தொடரட்டும்

  1. //இனியாவது கேனைத்தனமான பக்கதர்கள் திருந்துவார்களா என்றால் இல்லைப் போலிருக்கிறது.
    யூரியூப் இல் உந்தக் கள்ளனுக்கு ஆதரவா கருத்துப் போடுது சனம்.//

    அண்ணா எல்லாம் திட்டமிட்ட வகையில் அவருக்கு ஆதரவு திரட்ட படுகிறது போல

  1. சூப்பர்
    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள்

  1. Bavan Says:

    VARO,

    //கலக்கல் பவன். வாய்விட்டுச்சிரித்தேன். நானும் நித்தியானந்தரை வைச்சு பதிவா்களை ஒரு வழி பண்ணுவம் எண்டு யோசிக்கிறன். பாா்ப்பம்..//

    என்னாதுதுதுதுதுது???? மறுபடியுமா?

    ஹீஹீ ஓகே ஓகே கும்முறதுக்கு ரெடியா இருடா எண்டுறீங்க.. ok.. ok..:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கம்...;)


    ******
    // Subankan said...
    //நானும் நித்தியானந்தரை வைச்சு பதிவா்களை ஒரு வழி பண்ணுவம் எண்டு யோசிக்கிறன். பாா்ப்பம்//

    அடப்பாவி, இதுவேறயா?//

    I just, can't believe this..:p

    ******

    யோகன் பாரிஸ்

    //சங்கராச்சாரி மேல் எத்தனை பெண்களின் நேரடிக் குற்றச்சாட்டு அசைக்க முடிந்ததா?//

    இன்று நித்தியும் ஏதோ தான் சுத்தமானவன் என்னை நம்புங்கள் எண்டு வீடியோ வெளியிட்டிருக்கிறாராம்... அதுக்கு சனம் ஆதரவு வேற.. கொடுமை

    மக்கள் திருந்தினால் அது உலக அதிசயம்தான்..

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


    ******
    அனுதினன்

    நாங்க என்னத்த சொன்னாலும் திருந்துபவர்கள் திருந்த வேண்டும் .. ஹிம்மம்....

    நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    தர்ஷன்அண்ணா,

    //சூப்பர்
    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள்//

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Unknown Says:

    நல்ல பதிவு.

    அடுத்து ஒரு சாமியார் வருவான்.. கதவை மூடு லட்சுமி உள்ளேயே இருக்கட்டும் அப்பிடின்னு.. அதையும் வாயப் பொளந்துக்கிட்டு கேட்டுட்டு வரும் நம்ம ஜனம்.

    என்னிக்கு சாயிபாபா மாட்டப் போறானோ தெரியலை. அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்.. :)))

  1. எல்லாம் சூப்பர் பவன்...

  1. Sri Says:

    oh my கடவுளே! lol. குத்து விளக்கு is the best.

  1. கலக்கல்... போட்டோ கமெண்ட் அதை விட கலக்கல்...

  1. சூப்பர்...வாழ்த்துகள். படித்து ரசித்து சிரித்தேன். :)

  1. வழமைபோல் கலக்கல் பவன். சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறீர்கள்.

    கள்ள ஓட்டு போட்டாவது இந்த பதிவை எல்லா திரட்டிகளிலும் முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

    கோபி கள்ள ஓட்டு போடுவோமா?

  1. ச்சும்மா நச்


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

  1. Bavan Says:

    முகிலன்,

    //அடுத்து ஒரு சாமியார் வருவான்.. கதவை மூடு லட்சுமி உள்ளேயே இருக்கட்டும் அப்பிடின்னு.. அதையும் வாயப் பொளந்துக்கிட்டு கேட்டுட்டு வரும் நம்ம ஜனம்.//

    அதே நம்மளால என்ன செய்யமுடியும்? மக்களா பார்த்து திருந்தணும்

    //என்னிக்கு சாயிபாபா மாட்டப் போறானோ தெரியலை. அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்.. :)))//

    ஹாஹா நானும் அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன் கட்டாயம் மாட்டுவான்...

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


    ******

    சம்பத்,

    நன்றி சம்பத் வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    Srithanya

    //oh my கடவுளே! lol. குத்து விளக்கு is the best.//

    நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    மாயன்,

    //கலக்கல்... போட்டோ கமெண்ட் அதை விட கலக்கல்...//

    நன்றி மாயன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    ரகுநாதன்,

    //சூப்பர்...வாழ்த்துகள். படித்து ரசித்து சிரித்தேன். :)//

    நன்றி ரகுநாதன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    யோ அண்ணா,

    //வழமைபோல் கலக்கல் பவன். சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறீர்கள்.//

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    //கள்ள ஓட்டு போட்டாவது இந்த பதிவை எல்லா திரட்டிகளிலும் முன்னுக்கு கொண்டு வர வேண்டும்.

    கோபி கள்ள ஓட்டு போடுவோமா?//

    என்னாதுது??... ஹீஹீ.... :D:D:D

    ******

    ஜிஎஸ்ஆர்,

    //ச்சும்மா நச்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்//

    நன்றி ஞானசேகரன் வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. tsekar Says:

    Super....

  1. Unknown Says:

    நச்னு இருக்கு.

    http://vanakkamnanbaa.blogspot.com

  1. Anbu Says:

    :-))

  1. // என்னிக்கு சாயிபாபா மாட்டப் போறானோ தெரியலை. அந்த நாளுக்காக காத்துட்டு இருக்கேன்.. :))) //

    என்னாது காந்தி செத்துட்டாரா?

  1. சூப்பர் :))))

  1. நல்ல கற்பனை வளம் நிறைந்த எழுத்துக்கள்

  1. பவன் கலக்கல்... நான் இந்த சாமியார் தொடர்பான நிறைய பதிவுகள் வாசித்து இயலாத கட்டத்தில் இனி சாமியார் பதிவுகள் பார்ப்பதில்லை என முடிவெடுத்திருந்தேன்.. பிறகு திரட்டியில் தேடும் போது நம்ம சங்கத்து ஆள் ஒரு பதிவு போட்டிருக்கானே.. என்னதான் என பாக்க வந்தேன்.. ஆகா.. ஓகோ... பேஸ்.. பேஸ் ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.. என சொல்லத்தோணுது... அருமை நான் இரண்டு கள்ளவோட்டு குத்துறேன்... இனியாவது கதவுகளை மூடி வைப்போமாக.. அசுத்த காற்றுகள் வரலாம்...

  1. dai bhavan nee ena thulukana

  1. dai bhavan nee ena thulukana

  1. dai bhavan nee ena thulukana

  1. நல்லாகீதுப்பா!

  1. Bavan Says:

    rouse,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    தமிழ் மைந்தன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    Anbu,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    வேந்தன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    சொல்லச் சொல்ல,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    இலங்கன்,

    //நம்ம சங்கத்து ஆள் ஒரு பதிவு போட்டிருக்கானே.. என்னதான் என பாக்க வந்தேன்.. ஆகா.. ஓகோ... பேஸ்.. பேஸ் ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.. என சொல்லத்தோணுது... அருமை நான் இரண்டு கள்ளவோட்டு குத்துறேன்...//

    ஹாஹா சங்கத்தலைவா...:p

    //இனியாவது கதவுகளை மூடி வைப்போமாக.. அசுத்த காற்றுகள் வரலாம்..//

    ஹாஹா... நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    thirukkannapurathaan,

    //dai bhavan nee ena thulukana//

    நன்றி முதல் வருகையிலே மரியாதையாக அழைத்தமைக்கு..

    மற்றது நீங்கள் கூறிய துலுக்கன் என்ற வார்த்தை ஏதோ மதத்தை குறிக்கும் வார்த்தை என்று தேடி அறிந்தேன்...

    மதத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லை எனவே பதிலளிக்க விரும்பவில்லை

    வருகைக்கு நன்றி..


    ******

    PRINCENRSAMA

    நன்றி வருகைக்கும் கருத்துக்கம்..;)

  1. nithyanantha vs parasakthi court scene and dialogue very superp!!!

  1. nithyanantha vs parasakthi court scene and dialogue very superp!!!

    vg.selvakumar
    by/vg.selvakumar@gmail.com

  1. Riyas Says:

    பவன் சூப்பர்...

  1. Riyas Says:

    பவன் சூப்பர்...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்