ஊரின் விளிம்பில்
அதோ நானும் என் நண்பனும்
அழுதுகொண்டே சந்தித்த முதல்
பள்ளி
பள்ளிக்குப் போகமாட்டேன்
என்று கட்டிப்பிடித்துக் கொண்ட
மரம்
ஒன்றாய் உட்கார்ந்து
அரட்டை போட்ட மரத்தடி
பாறை
அடிவாங்கி
முழங்காலின் நின்ற
வகுப்பறை வாசல்
கரஇடி வாங்கி
மகிழ்ச்சியாய் நின்ற
மேடை
பாடசாலை கீதம்
தினமொலிக்கும்
ஸ்பீக்கர்
கரண்ட் இல்லாத நேரத்தில்
பாவிக்கப்படும்
மணி
நண்பனுக்காக
சண்டை போட்ட
ரகசிய இடம்
சமயத்தில்
தப்பியோட உதவிய
கழிவுக் கால்வாய்
மாணவத்தலைவனால்
பெப்சி கிறிக்கெட் கார்ட்
பறிக்கப்பட்ட
இடம்
முடிவெட்டாமல்
வந்து அடி வாங்கிய
இடம்
நீயும் பெயிலா
நானும் பெயில்டா
என்று அகமகிழ்ந்த
இடம்
வாசல் கேற்
பஸ் தரிப்பு நோக்கி
நீளும் நெடும் பாதை
பிரதான வீதி
பஸ் தரிப்பிடம்
பெண்கள் பாடசாலை
மாங்காய்க் கடை
ஐஸ் விக்கும் சைக்கிள்
ஐஸ் பால் கடை
கொய்யாப் பழக்கடை
தினம் செல்லும்
சாப்பாட்டுக் கடை
அங்கும் நட்பு
இங்கும் நட்பு
அதிலும் நட்பு
இதிலும் நட்பு
அவற்றில் நட்பு
இவற்றில் நட்பு
பக்கத்தில் நட்பு
தற்போது என் எதிரிலும்
புன்னகைத்தபடி
நட்பு!
-பப்புமுத்து
பப்பு முத்து எங்கள் நட்பு முத்து. கவிதையும் உன்னைப் போல அழகு(????)