பதிவிட்டவர்
Bavan
Saturday, August 20, 2011
-01-
காதலிக்கிறவன், காதில ஹெட்செட் மாட்டினவன், தண்ணியடிச்சவன் இந்த மூன்று பேருடனும் அவதானமாகத்தான் இருக்கணும் #அனுபவம்
-02-
இலங்கை நாடே கிறீஸ் டெவில் பீதியால் பற்றி எரிவதை கூட பொருட்படுத்தாது அவுஸ்ரேலியாவை இன்றைய போட்டியில் வென்றதானது இலங்கை அணியின் சுயநலப்போக்கை காட்டுகின்றது. -அவுஸ்ரேலிய ரசிகர்கள் (படித்துப் பிடித்துப் போய் உல்டா பண்ணியது) :P
-03-
சோகமாக இருப்பவர்களை பார்த்து சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளலாம்,ஆனால்
சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்து சோகமாயிருக்க கற்றுக்கொள்ளமுடியாது
-04-
"நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பார்கள்." சில்_பிடித்தது
-05-
யாராவது எனக்கு கடிச்ச அப்பிள் ஒன்று வாங்கித்த்தாருங்கள், நான் கடிக்காத அப்பிள் வாங்கித்தர்றேன்..:P #டீலிங்கு
-06-
"தவறு செய்தவர்களுக்கே EGO இருக்கும் போது தவறே செய்யாதவர்களுக்கு EGO இருப்பதில் தவறே இல்லை"
-07-
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை நீ மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி இருக்கும் #படித்ததில்பிடித்தது
-08-
கோபத்தைக் குறைப்பதற்கு இலகுவான வழி, "எனக்கு கோபம் வராது" என்று அடிக்கடி சொல்லிச் கொள்வதுதான்.
-09-
எலிகளும் காதலிக்குமாம், அதனாலதானோ என்னமோ அதையும் வீடுகளில் எலிமருந்து வைத்துக் கொல்கிறார்கள்..:p
-10-
அட போங்கையா.. தத்துவங்கள் படிக்க/கேட்க வேணும்னா நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைப்படத்துவது கடினம்
-11-
மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்கிறது நல்ல விடயம்தானே, SO சில விடயங்கள் வெளிப்படையாக பேசாமலிருப்பதே நல்லது
-12-
நடக்கும் போது straight fowardடாகத்தான் இருக்கணும், இல்லைன்னா accident ஆகிடும் #பிடரியில் கண் இல்லைத்தானே..:P
-13-
புரொஜெக்டரை தொடர்ந்து சிலமணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணீர் வருவதுண்டு,ஆனால் உடல்சிலிர்த்து அழுதது இன்றுதான்
-14-
உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit
பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்
-15-
ஞாபகங்கள் முரண்பாடானவை. நீங்கள் மகிழ்வாயிருந்த தருணங்களை நினைக்கும்
போது கண்ணீரையும், அழுத நேரங்களை நினைக்கும் போது மகிழ்வையும் தருகின்றன
-16-
பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P
//ருவீட்ஸ்// ஏதோ சுவீட்ஸ் எனச் சொல்வது போல இருக்கு
//-16- பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P//
அதைத்தான் இன்னொரு பாம்பிடம் வினவி பதிலைக் கண்டறியுமாறு இந்த பழமொழி அறிவுறுத்துவதாக புரிந்து கொள்ள வேண்டும்! #இங்கொய்யால-முதலெழுத்து-மெய்யொற்றாகா ;>)