இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களை யார் கண்டுபிடிப்பது? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா?
கட்டாயம் இல்லை, இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான், இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான், இன்னொருத்தன் மஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புகிறார்கள், காசை வாரி இறைப்பார்கள். அவன் ஏன் கதவைத்திறக்கச் சொல்லுறான் உங்களிடமிருந்து அப்பதானே கொள்ளையடிக்கலாம். இவர்களை மக்கள் நம்பக்காரணம் ஒன்றே ஒன்று இவர்களின் பேச்சு, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். ஆனந்தம் என்பான், வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.
புத்தர், யுசு, நபிகள் இப்படியும் மகான்கள் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை,மாலைபோடும் நிகழ்வு நடத்தவில்லை, ஏன் தாங்கள் அவதாரம் என்றோ கூறவோ மஜிக்கோ ஒன்றுமே செய்யவில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள்.
அவர்களின் வழியில் வருகிறேன், நான் சாமி என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது. இப்படி எத்தனையோ பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளை சனம் போகத்தானே செய்யுது. அரசாங்கம் இருக்குத்தானே போலீஸ் இருக்குத்தானே அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாத படி மேலிடத்து அதிகாரிகள் போலீசின் கைகளை கட்டிப்போடுகிறார்கள், அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடும் என்ற பயம்.
இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல, மக்களே தயவு செய்து இனி பிள்ளையார் முருகன் என்று கோயிலில் இருக்கிற சாமிகளை கும்பிடுங்கள். மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்கள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல...
Tweet





எவ்வளவுக்கெவ்வளவு இவர்கள் பிழையானவர்களோ அதேயளவு மக்களும் குற்றவாளிகள், பிழையானவர்கள் தான்...
இவர்கள் பிழை செய்வதை அறிந்தும் அறியாமல் இருக்கும் மக்களுக்கு இனியாவது உறைக்கிறதா பார்ப்போம்.
எனக்கு இந்தச் சம்பவம் பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை.
இது உங்கெல்லாம் வழமையென்று நான் அறிவேன்.
இனி யாராவது கொம்மா பகவான், கொக்கா பகவான் ஆத்தா பகவான் என்று கிளம்பி வரட்டும் பார்த்துக் கொள்கிறேன்...