
அன்று கல்வி திணைகளத்தில் இருந்து மேற்பர்வை செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தகவல்
இவர் தான்இப்படி என்றால் எமது வர்த்தக ஆசிரியை ஒருநாள் கூட நாம் அவரை ஒழுங்காக கற்பிக்க விட்டதில்லை(அவரை சற்று கோபப்படுதினால் போதும் அன்றைய பாடங்களுக்கு கோவிந்தா போட்டு விடலாம்), அவரும் ஒரு நாளும் தான் வைத்திருக்கும் புத்தகத்துக்கு மீறி எங்களுக்கு ஒரு விடயமும் அளித்ததில்லை. ஆனால் அன்று ஒரு நீண்ட தாளில் சில கிறுக்கல்களுடன் வந்திருந்தார். அன்று அவரின் குரலிலும் ஒரு நடுக்கம்.
பரிட்சை என்றால் நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் ஒரு நடுக்கம் தான் என்று எனக்கு அன்றுதான் புரிந்தது.
என்னதான் இருந்தாலும் ஆசான்கள் பரீட்சை நேரத்தில் எமக்கு புரிந்த உதவிகளுக்கு நாம் மிகவும் நன்றி கூற கடமைபட்டு இருக்கிறோம்.
ஆசிரியர்களின் தொடரை இத்துடன் முடித்துக்கொண்டு, அடுத்து பாடசாலை நாட்களில் நடந்த இனிய நினைவுகளின் சுவடியுடன் வருகிறேன்.
Tweet
ithuvum super inithan ne kavanama eluthanum moka poduvam ila