
முதலில் எங்கள் வகுப்பறையின் அமைவிடம் பற்றி கூற வேண்டும். எங்கள் வகுப்பறைக்குள் ஒரு சிறு அறை இருக்கிறது, அதக்குள் பழைய புத்தக குவியல்கள் காணப்படும், அதுமட்டும் அன்றி எமது பாடசாலைக்கு அருகில் திருமணமண்டபம் ஒன்று உண்டு. அது எமது வகுப்பறையில் இருந்து பார்த்தால் மிகவும் அருகில் தெரியும்.
எமது ஆசிரியர்கள் paper correction இற்காக செல்வது வழக்கம், அன்றும் அப்படித்தான் சில நாட்களாகவே பாடங்கள் இடம்பெறாத தைரியத்தில் நாமும் வழமையான நடவடிக்கைகளை தொடங்கினோம். அன்று இடைவேளை வரை ஆங்கில புத்தகத்தை துடுப்பாக பாவித்து கிரிக்கெட் விளையாடிவிட்டு சற்று ஓய்வாக இருந்த வேளை.
அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அன்று திருமணம் போலும் மேளசத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தது, அடடா சொல்ல மறந்து விட்டேன், அங்கு திருமணம் நடக்கும் போது நாங்கள் site அடிப்பது வழக்கம். அன்றும் அப்படிதான் ஒரு ஆசிரியரும் வரவில்லை என்ற வதந்தியை நம்பி நாமும் சற்று கவனயீனமாக இருந்து விட்டோம்.
எம் கவனம் அனைத்தும் திருமணத்தில் இருந்த வேளை, அவர் paper correction முடிந்து வரவில்லை என்று அவரின் வீட்டில் நாங்கள் வைத்திருந்த ஒற்றன் கூட கூறி இருந்தான்.. ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார். (ACC ஆசிரியர்) ,அவர் வந்து ஐந்தாறு நிமிடங்கள் ஆகியிருக்கும் போலும் அவர் வந்ததை நாம் கவனிக்கவில்லை. சரி அடுத்த கட்டம் என்ன அடி விழப்போகிறது என்று அடி வாங்க தயாரானோம், ஆனால் அனைவரையும் மேசையின் மேலே முழங்காலில் நிக்க சொன்னார்.

அவர் அப்படி சொன்னதக்கு பதிலாக அடித்திருக்கலாம், எமது வகுப்பறையை தாண்டிதான் அனைவரும் நூலகத்துக்கு செல்லவேண்டும், அரை காற்சட்டை போட்ட மாணவர்கள் தொடங்கி ஆசிரியர்கள் வரை அனைவரும் பார்த்து விட்டுதான் செல்வார்கள், ச்சா.. ச்சா.. என்ன அவமானம்!!!
முன்று பாடவேளை 2 மணிநேரம் முழங்காலில் நின்றோம்.அன்று பாடம் நடாத்தப்படவில்லை, பதிலாக அந்த ஆசிரியரின் திட்டுக்கள் இடைஇடையே சில பொன்மொழிகளுடன்..
அவரின் பாடவேளை முடிந்து அவர் சென்றதும் ஒருவரை ஒருவர் பார்த்து why blood? same blood. என்று கூறி விட்டு ஜென்னலை நோக்கி விரைந்தோம்
MACHAN CLIMAXa SOLA MA POITIYEDA>>>>>>>>>>>>>>