Related Posts with Thumbnails

vetti

காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே  மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால் வெட்டி ஒபீசர் என்று பீத்திக்கொள்வது.

 

இப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கீங்களா? கவலை வேண்டாம். வெட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 

காலை 9, 10 மணிக்கு எழுந்து காபி கூட குடிக்காம கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து கலைஞர் என்ன சொன்னாரு, கமல் என்ன சொன்னாரு, டாக்டர்(விஜய்..:P) என்ன சொன்னாரு, டாட்டா ஓனர் என்ன சொன்னாரு, ஏன் பில்கேட்ஸ் என்ன சொன்னாரு வரைக்கும் அத்தனையையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சுக்கிட்டு, அப்பிடியே கிறிக்கட் பக்கம் போய் யாருக்காவது மொக்கை போடலாமானடனு பாத்து சூதாட்டத்தில மாட்டிக்கிட்வனை தூக்கு மாட்டிக்கிற அளவுக்கு கமண்ட் அடிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு, கஷ்டப்பட்டு யோசிச்சு மூளைய முழுசாப் பாவிச்சு மொக்கையா பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டச போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா எவனாச்சும் வந்து கமண்ட் அடிப்பான். உடனே அவன் மனசு நோகக்கூடாதுன்னு அவனுக்கும் ரிப்ளை பண்ணிட்டு ஆஃப்லைன்ன ஒன்லைன் போனா பத்து வருசத்துக்கு முன்னாடி படிச்ச பால்பாண்டி படக்குன்னு வந்து ஹாய் சொல்லுவான். சரி அவனையும் போர்மாலிட்டிக்கு விசாரிச்சு பழைய கதையெல்லாம் பேசி முடிச்சுப்பார்த்தா மணி 1.30 ஆகிரும்.

 

எல்லாத்தையும் அப்பிடியே போட்டு 5 நிமிசம் செலவழிச்சு அரைகுறையா சாப்பிட்டு அடிச்சுப்புடிச்சு ஓடோடி வந்தா பால்பாண்டி பாசாகிப் போயிருப்பான். சரி என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது எவனாச்சும் வந்து

 

“பன்றிக்கு நன்றிசொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை அது என்ன?..:P”

 

அப்பிடின்னு ஒரு கேள்வியக்கேக்க கூகிள்ல தேடுதேடுன்னு தேடி விடையே கிடைக்காம இருக்கும் போது மறுபடியும் நம்ம அறிவைப் பாவிச்சு(நம்புங்கப்பா) கேள்விக்கு விடையக் கண்டுபிடிச்சுக்கொடுத்தா, THANKSன்னு சொல்லிட்டு ஒரு ஸ்மைலி போடுவான் பாருங்க அதுதாங்க சந்தோஷம்.:P

 

இம்புட்டு வேலையையும் முடிச்சுட்டு பார்த்தா நேரம் 5 மணி ஆத்தாடி 5 மணியாகிரிச்சேன்னு ஒரு TEAயக்குடிச்சிட்டு மல்லாக்கபடுத்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அதுக்கப்புறம் 9 மணிக்கு ஒன்லைன் வந்து 2, 3 மணிவரைக்கும் அதே வேலைய செய்திட்டு ஒண்ணுமெ செய்யாத வெட்டிப்பயன்னு தன்னைத்தானே சொல்லிக்கிறான் பாருங்க, அந்தப்பெருந்தன்மை யாருக்கு வரும்.

 

நோ.. நோ.. என்னைப்பார்த்து நீங்க இந்தப்பாட்ட பாடுறது புரியுது.. பட் இதுக்கெல்லாம் அழக்கூடாது..:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. Subankan Says:

    தகவலுக்கு நன்றி :)

  1. ஹா ஹா எழுத்துநடை சூப்பர்... வாசித்து சிரித்தேன்

  1. super pa super

  1. super pa super

  1. Ramesh Says:

    சுயசரிதை சோகத்த ஏற்படுத்துது எனக்கு. மற்றப்படி எழுத்து ரசனை. வன்மையாக உன்னைக்கண்டிக்கிறேன். உன்னை சந்தித்தபோது நான் சிலகேள்விகள் கேட்டேன் ஞாபகம் இருக்கும் என்று நெனைக்கிறேன்
    :(

  1. வெட்டியா இருகாது எவ்வளவு கஷ்டம்னு இப்ப புரிஞ்சி கிட்டேன் பாஸ்

  1. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    நான் இவ்வளவு கஷ்ரப்படுறன் எண்டு எனக்கே இண்டைக்குத்தான் தெரியும்.
    நன்றி பவன். ;-)

  1. // உன்னை சந்தித்தபோது நான் சிலகேள்விகள் கேட்டேன் ஞாபகம் இருக்கும் என்று நெனைக்கிறேன் //

    இது எப்ப?
    குழுமத்துக்கு அறிவிக்காமல் பதிவர் சந்திப்புகள் நடத்துவதை மென்மையாகக் கண்டிக்கிறேன்.

  1. வை பிளட்...சேம் பிளட் பவன்.

  1. Unknown Says:

    mmmmm.. nadakkattum

  1. நானும் எவ்வளவு கஷ்டப்படுறேன் எண்டதை இண்டைக்குத் தான் உணர்ச்சி பூர்வமா உணர்ந்தன்...:P
    நன்றி தம்பி பவன்.........

  1. பவன் உன்னுடையதையும் உன் நண்பர்களின் கதையையும் இப்படியா பொது இடத்தில் போட்டு உடைப்பது. அனுபவம் எழுதிய நடை கலக்கல்.

  1. சோகத்தை நகைச்சு வையாக் சொல்லியிருகிரீங்க தம்பி . சோகத்திலும் ஒருசுவை.

  1. இது வெட்டியா இருக்கும்போது யோசிச்சதா, வேலையா இருக்கும்போது தோணினதா:))

  1. நன்றி பவன் !!!! இளம் உள்ளங்கள் எங்களின் கஷ்டங்களை இந்த உலகுக்கு எடுத்து சொல்லும் இந்த பதிவுக்கு எனது மனமார்ந்த ஆதரவுகள்!!!

  1. velji Says:

    perfect!

  1. இப்படி நாட்டுக்கு ஒருவர் போதும்.... இன்று முதல் எம்மைப்போல் குமர்ப் பொடியளின் ஊடகப் பேச்சாளராக தங்களை நான் நியமித்திருக்கிறேன்...

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    ங்கொய்யால.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வதீஸ் அண்ணா,

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    R.D,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***
    றமேஸ் அண்ணா,

    அவ்வ்வ்.. நோ சிரியஸ்.. நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    யோ அண்ணா,

    புரிஞ்சுக்கிட்டீங்கில்ல.. அது போதும்..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கன்கொன்,

    நன்றி தலிவா(:P) வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ஜாவா கணேஷ்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    அஸ்பர்-இ-சீக்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

    தர்ஷாயணி அக்கா,

    ஹீஹீ.. நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வந்தியண்ணா,

    ஹீஹீ.. நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    நிலாமதி,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வானம்பாடிகள்,

    ஆங்.. வெட்டியா இருக்கும் போது..:P
    இந்தக்கேள்வி உங்களுக்கு வெட்டியா இருக்கும் போது தோணினதா, வேலையா இருக்கும் போது தோணினதா..:P

    நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    அனு,

    நன்றி நணபா வருகைக்கும் கருத்துக்கும்.;)

    ***

    velji,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ம.தி.சுதா,

    ஓ.. நன்றி நன்றி..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Tharshy Says:

    Ha ha ha ha.... good one too

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்