
வானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ!
அழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ!
ஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்
குழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்
குளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்
இளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்
மயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது
என்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்
அழகே!
அழகில் வழிந்த சிலை அழகே!
மலரே!
என் உயிரில் மலரும் பனிமலரே!
மலரே உன்னைக் காணாதிருந்தால்
விழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்
அன்போடு...