
நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு கட்டத்தில் நகைச்சுவையாக "உன்னைக் காலில் விழ வைக்கிறன் பாருடா" என்று சொன்னார். அந்த நேரத்தில் மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதை அவர்களால் திடீரென ஏன் விட்டுவிட முடியாமல் இருக்கிறது? என்ன காரணம்? என்று ஒரு விடயம் மனதில் தோன்றியது.
அதாவது பிறக்கும் போது கடவுள் என்றோ, மூடநம்பிக்கைகளுடனோ, சாதி வெறியுடனோ ஒரு குழந்தையும் பிறப்பதில்லை. பிறந்த பின்னர் அது வளரும் சூழல்தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே....