Related Posts with Thumbnails

தனுஷின் 3 படத்திலில் வெளிவரவிருக்கும் Why this kolaiveri di என்ற பாட்டு எத்தனை தடவை கேட்டிருப்பேன், ங்கொய்யால எங்கடா கேக்காம இருக்க விட்டீங்க.. இந்தப் பாட்டைக் கேட்கும் போது பாதத்திலிருந்து கொலைவெறி அப்பிடியே மேலே ஏறி கபாலத்திலிருக்கும் முடியெல்லாம் கத்தி போல் எழுந்து நின்று யாரையாவது குத்திக் கொல்லும் அளவுக்கு கொலைவெறியை தூண்டிவிடுகிறது.
yo boys i am singing song

soup song

flop song
தனுஷின் கரகரப்பான இனிமையான குரலில் அருமையான ஆரம்பிக்கும் பாடலில், பாடல் கேட்பவர்கள் குழம்பிவிடாமல் இருக்க தான் என்ன செய்யப்போகிறேன் என்று தனுஷ் முதலிலேயே கூறிவிடுவது சிறப்பு.

distance la மூணு மூணு
மூணு  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u
அதன் பிறகு வரும் இந்த அர்த்தமுள்ள வரிகளைக் கேட்டுக் கேட்டு இன்னும் வியந்து கொண்டிருக்கிறேன். இந்த சின்ன உருவத்துக்குள் இத்தனை அபாரமான கற்பனையா என்று. அதாவது வரப்போகும் தனது 3 என்ற திரைப்படம் கறுப்பு வெள்ளைப் படம், அதாவது வரலாற்றுக் கதையைச் சொல்லப்போகும் படம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

white skin-u girl-u கேளு
கேளு hear-tu black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark
பக்கத்தில் நின்ற சுருதி ஹாசனின் பெயர் திடீரென மறந்து போனதும் உடனே அதையும் பாடல் வரிகளாக மாற்றி white skin-u girl-u கேளு என்று சமயோசிதமாக செயற்படுவதும் அவருக்கு அது கேட்காமல் போகவே ஆங்கிலத்தில் hear-tu என்று அழைக்கும் லாவகமும் black-u eyes-u என்று கண்ணில் கறுப்பு லென்ஸ் அணிந்திருப்பதால் பாட்டு வரி எழுதின பேப்பர்ல எழுத்து விளங்கல என்று சுருதிஹாசனிடம் சொல்வதும் சிறப்பு.

empty life-u
கேளு கம்மு
life reverse gear-u
அதன் பிறகு பாட்டுப் பாடும் போது மறுபுறம் கதைத்துக் கொண்டிருந்தவர்களை ஏய் வெத்து வேட்டுகளா, கம்முன்னு கேளுங்க எல்லாரும் இல்லாட்டி பாட்டை reverceல பாடுவேன் என்று பயமுறுத்துவதும் அதன் பின்னர்
this song for soup boys-u
we dont have choice-u
பாடலைக் கேட்டுக் கொண்டுடிருந்த பெண்களை கடுப்பாக்கும் விதமாக boysக்கு மட்டுமே இந்தப் பாட்டு உங்களுக்கில்லை என்று பிம்பிலிக்கி பிலாப்பி காட்டுவதும்

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
அதன் பின்னர் அவர்கள் அனைவரும் தனுஷை கொலை வெறியுடன் துரத்த தனுஷ் Why this kolaiveri kolaiveri kolaiveri di என்று அதற்கும் பாடிக் கொண்டே எஸ்கேப்பாகி ஓடுவதும் போல பாடலை அமைத்திருப்பது தனுஷ் என்ற on the spot கவிஞரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. 

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. வை திஸ் கொலவெறி???

  1. ஹா..ஹா.. ஏன்பா உங்களுக்கு இந்தக் கொலைவெறி? பாவம் தனுசு.

  1. வித்தியாசமான நோக்கு!

  1. ஏன் இந்த கொலைவெறி பவன்?

  1. கொயாலே எங்கடா? பவன் கொலைவெறி வரலையே எண்டு பார்த்தன்???

    கலக்கல் மச்சான்

  1. Bavan Says:

    @யோ அண்ணா - ஹிஹி ஆரம்பமே கொலைவெறியா இருக்கணும் என்றுதான் :P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))

    ***

    @Mayooresan - ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))

    ***

    @Eelavan - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))

    ***

    @தர்ஷன் - இந்த வருடம் கொலைவெறி வருடமாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது :P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-))

    ***

    @அனு - நன்றி மச்சான் வருகைக்கும் கருத்துக்கும் :-))

  1. sinmajan Says:

    இந்தப் பாட்டுக்குள் இவ்வளவு உட்கருத்துக்களா..?? அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டீர்கள் குருவே ;-)

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (2) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (4) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (3) tweets (10) twitter (10) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (46) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (4) இசை (5) இதயம் (1) இலங்கை (19) உண்மை (13) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (6) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (104) காம்பீர் (1) கிரிக்கெட் (57) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (5) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (2) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (3) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (38) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (53) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (88) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (5) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்