
ஆயிரந்தான் மொக்கை போட்டேன்
அழகழகாப் படம் போட்டேன்
செத்தவனே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலயே
நேத்தெல்லாம் மொக்க போஸ்ட்டு
போட்டோவுக்கும் கமண்ட்ஸ் போட்டும்
ஆரூடம் சொல்லி வந்த
ஆக்டோபர்ச மறந்தேனே
எழும்பவோ நிக்கவோ
ஏலாத PAUL பத்தி
எழுதியென்ன லாமமுன்னு
எழுதாமப் போனேனோ?
போல்பாதர் பெத்தெடுத்த
பொன்னே குலமகனே
கோல் போட்ட கணக்குச் சொல்லி
கோமகனாய் ஆனீரே!
பப்புமுத்து பிறப்பான்னு
மனசில நீ நெனச்சதில்ல
மொக்கை போட்டுத் திரிஞ்ச ஒண்ணு
பப்புமுத்து ஆகிரிச்சு
ஒன்லைனில்...