
தாழமுக்கம் தந்த மழை
பருவக் காற்றால் வந்த மழை
சூறாவளி தந்த மழை
மண்வாசனை தந்த மழை
இப்படிப் பல மழை கண்டு
துளிர்த்தன பல மரங்கள்
அதனிடம் அடித்துப் பறிக்க
முளைத்தன சில களைகள்
மழைவிட்ட பின்னர் அங்கே
முளைவிட்ட களைகளை - தன்
கையடங்கும் கத்தியுடன்
கச்சிதமாய் பிடுங்கிடுவார்
முனை வளைந்த வில்லுக் கத்திப்
பிடியதனை அவர் பிடித்து
மண்ணைத் துளாவிக் கொண்டே
களை வேர் பிடித்து அறுத்தெறிவார்
களை பிடுங்கி கந்தையா
வந்து விட்டார் என்று சொன்னால்...