
அந்த நாளுக்காக
நாம் அனைவரும்
காத்துக்கொண்டிருந்தோம்
அது கறுப்பு சரித்திரத்தில்
எழுதப்பட்ட வெள்ளை வரலாறு
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வழங்கப்படும் ஒரே வாய்ப்பு
மரணத்தின் வாயில் வரை
வரையப்பட்ட அடிமை சாசனத்தில்
விடுதலையை சுவாசிக்கக் கிடைத்த
ஒரேயொரு சந்தர்ப்பம்
பச்சை பச்சையாய் வார்க்கப்பட்ட
வயல் வெளிகள் - அதன்
இடைவெளிகளில் ஊடுருவும்
சூரியக் கதிர்கள்
காக்கையின் கூட்டில்
முட்டையிடக் காத்திருக்கும் குயில்
அந்நிய ஊடுருவலை அறிவிக்க
விடாது...