
நண்பா!
போனவை போகட்டும்
விட்டுத் தள்ளு
புதியதாய் மலர்வதாய்
எண்ணிக் கொள்ளு
கால் தொடும் நுரைகளில்
நிலைத்ததேது
தளம்பல்கள் தழும்பல்ல
முட்டித் தள்ளு
மனமெங்கும் உருக்கும்
கனம் கொண்டு அமுக்கும்
கவலைகள் சிதைக்கும்
கதை வந்து புதைக்கும்
காரிருள் கருமையாய்
ஒட்டிக் கொள்ளும்
இடி வீழ்ந்து மனமெல்லாம்
நொருக்கித் தள்ளும்
விதியென்று எண்ணியே
விடச் சொல்லுவார்
சதியென்று சொல்லியும்
தொடச் சொல்லுவார்
நம்பகமானதை
கனவென்னுவாய்...