
வளைந்த பாதைக்கெல்லாம்
வாய்க்கரிசி போட்டு விட்டு
நுழைந்து நுழைந்து நான்
உன்னருகில் வந்து விட்டேன்
முட்டிய மூச்சு சென்று
ஒட்சிசனை எட்டும் முன்னர்
காதலை சொல்லி விட
காற்றிலே கவி படித்தேன்
உன்
கண்கள் எங்கோ உருள
விரல்கள் ஏனோ மிரள
கோபமா சாந்தமா என
தெரியாமல் நான் தவிக்க
உன் கண்கள்
நான் கண்டேன்
என்னை நீ
காணவில்லை
ஆத்திரமோ விரக்தியோ
வெட்கமோ பயமோ
மகிழ்ச்சியோ கவலையோ
அனைத்தும் சேர்ந்த
ஒரு அழகியலின் உச்சமோ!
கடுகளவும் சிதறாமல்
என் காதல் சேர்ந்திருக்கும்
கட்டாயம்...