Music: ArunPrasathLyrics: Bavananthan
Vocal:
விழியோரம் துளி நீரும்
விரல் மோதி விழுகிறதே
கலைத்தாயின் கருவறையில்
புது மொட்டு தவழ்கிறதே
கனவுகள் பல கொண்டு
பிறக்கின்ற சிறு வண்டு
கடலில் போய் கலந்திடுமே
வானிலே உயிர்கொண்டு
மலையிலே நிலை கொண்டு
திரை மோதி இறந்திடுமே
இருப்பது சில காலம்
இயற்கையின் விதி கூறும்
இறப்பில் போய் இணைந்திடுமே
இருக்கிற வரை நீளும்
இறுதியில் நிலை மாறும்
மண்ணில் போய் மடிந்திடுமே
பூக்களும் ஒரு நாளில்
பிறக்குது மறு நாளில்
மண் மேல் உரமாகிடுமே
நம்பிக்கை வேரூன்று
தெளிவுடன் காலூன்று
உன் வெற்றி நிச்சயமே
கதைகள் பல சொல்லி
விதைகள் பல...