
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாடசாலை அல்லது கல்லூரி என்ற காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை கிட்டத்தட்ட இயந்திரமயமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாகவோ என்னமோ எத்தனையோ சின்னச்சின்ன சந்தோஷங்களை அல்லது எம்மை அறியாமலேயே பிறருக்குச் செய்த உதவிகளை அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை என்று எவையுமே ஞாபகத்தில் நிற்பதில்லை.
அதே நேரத்தில் படிக்கும் போது ஆசிரியர்கள் எம்மை திட்டியும் அதிக பட்சமாக அடித்தும் யார் எம்மை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு...