மூஞ்சிப்புத்தகத்தில் தனது அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடடிருந்த அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனுடன் நான் போட்ட அரட்டையின் தொகுப்பு இதோ....
நான்:வணக்கம் ஐயா..
அ.நெ:ம்..வணக்கம்
அநேகரின் வேண்டு கோளிட்கிணங்க அவதரித்து விட்டான் அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள் அனைவரும்
நான்:நீங்கள் அரசியலில் குதிக்க காரணம்?
அ.நெ:இன்றைய அரசியலில் படிச்சவங்களே இல்ல அதுதான்
நான்:ஓ..அப்போ நீங்க நிறைய படிச்சிருக்கீங்க, அப்படித்தானே?
அ.நெ:நிச்சயமாக..
நான்:நீங்க என்ன படிச்சிருக்கீங்க?
அ.நெ:இப்போ அரசியல்ல இருக்கிறவங்க எல்லாம் மூணாங்கிளாஸ்தான் படிச்சிருக்காங்க...
நான்:அப்ப நீங்க?
அ.நெ:ஹா..ஹா..நான் நாலாங்கிளாஸ்.
நான்:அடடே பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்களே..
அ.நெ:இயஸ்..இயஸ்..
நான்:நீங்க எந்த தேர்தல்ல போட்டிபோட்டு உங்கள், திருட்டை.. ச்சீ...திட்டங்களை நிறைவேற்றப்போறீங்க?
அ.நெ:நான் நேரடியா ஜனாதிபதி தேர்தல்லதான்..
நான்:அப்படியா? அப்ப உங்கள் திட்டங்கள் என்ன?
அ.நெ:இலவச மின்சாரம்,
நான்:எப்படி அத குடுப்பீங்க?
அ.நெ:நீர் மின்சாரம்தான்...
நான்:புரியல?
அ.நெ:அதான் நம்ம நாட்ட சுத்தி கடல் இருக்கே...
நான்:ஓ....நல்ல திட்டம், அடுத்த உங்கள் திட்டம்?
அ.நெ:திமிலை வலப்பேன்?
நான்:அப்படின்னா?.....
அ.நெ:திமில்...திமில்...
நான்:அட...தமிழா?
அ.நெ:ஆமாம் அதே..அதே
நான்:திமிலை...ச்சா...தமிழை எப்படி வளர்க்கப்போறீங்க?
அ.நெ:திமில் ஆலாத்தி எலுதப்போகிறேன்,
நான்:ம்ம்.....தமிழ் அகராதியா?
அ.நெ:இல்லை, திமில் ஆலாத்தி, என் திமில் ஆலாத்தியின்படிதான் எல்லா அரச கறுமங்களும் நடக்கும்.
நான்:சரி ஐயா அது என்ன கருடபுராணபடபடி தண்டனை?விளக்கமா சொல்லுங்கள்?
அ.நெ:உதாரணமாக ஒரு 4 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் 4 பேரையும் ஆளுக்கு ஒரு கருடனுடன் ஒரு அறையில் சண்டைபோடவிட்டு உயிர்பிழைப்பவர் குற்றவாளி எனக்கண்டு பிடிப்போம்.
நான்:என்ன ஒரு இராஜதந்திரம்...
அ.நெ:நண்டி...நண்டி......
நான்:உங்களின் வேறு திட்டங்கள்?
அ.நெ:எக்குசாம் என்பதே மாணவர்களுக்கு இல்லை
நான்:ஐயோ அது எக்ஸாம் சேர்..
அ.நெ:ம்ம்....
நான்:அடுத்து?
அ.நெ:மேலும் பல அபிவிருத்தித்திட்டங்கள்
1-பிரதான தொழில்- பிச்சையெடுத்தல்
2-யாரும் வேலை வெட்டி செய்தால் உடனே மரணதண்டனை
3-சூரிய ஒழிப்புத்திட்டம்- நாடு முழுவதும் கூரை போடப்படும்
4-ஓய்வூதியத்திட்டம்- பஸ்ஸே வராத அரச பஸ்த்தரிப்பு நிலையங்களில் ஓய்வெடுக்கும் வாலிபர்களுக்கு ஓய்வூதியம்
மற்றும் நாட்டுமக்களை ஊக்குவிக்க-நித்திரைப்போட்டி, மூலிகைப்பெற்றோல் என்று 60 திட்டங்கள். திட்டம் பற்றிய மேலதிக விபரம் "அஞ்சாநெஞ்சனின் 60 திருட்டுக்கள்" என்ற புத்தகத்தில் இருக்கு
நான்:உங்கள் கடசி சின்னம் என்ன?
அ.நெ: கோவிந்தா..கோவிந்தா..
நான்:நீங்க நாட்டுமக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?
அ.நெ:என் கட்டி பன்ணிகளை முன் எடுக்க நிதி தேவை பாடுகிறது அன்புல்லம் கொண்டவர்கள் அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனின் கைகளை பளபடுத்துங்கள்.
நான்:நீங்க தேர்தல்ல ஜெயிப்பீங்க எண்டு நம்புறீங்களா?
அ.நெ:நிச்சயமாக, நீங்கள் இந்த அஞ்சாநெஞ்சனை அஞ்சுடா என்று சொல்லி நெஞ்சிலே மிதித்தாலும் ஆலமரமாகத்தான் இருப்பேன் என் விழுதில் நீங்கள் ஆடி விளையாடலாம்
நான்:நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
அ.நெ:நண்டி...
பி.கு:நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, யார் மனதையும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்கவும்.
**********************************************************************************
!!!!!பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
கஞ்சாக் கோப்பியே
கருத்து சுரங்கமே
கடி மன்னனே
கலையரசனே
பதிவுலகில் தவழ்ந்துவரும் பச்சிளம் பாலகனே
பகுத்தறிவுச்சிங்கமே
புரட்சிப்புயலே
ட்விட்டரையே களமாக்கி கிரிக்கட் ஆடும் ரசிக சிகாமணி
பதிவுலக தாதா..ச்சீ....தாத்தா
அதிரடிப் பதிவர்
சிரிப்பு மனிதன்
பதிவுலக ஜோக்கர்
மகா தைரியசாலி
பச்சிளம் பாலகன்
கனககோபி அண்ணாவுக்கு இனிய ___வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தம்பி வீட்டுக்கு வெள்ளை வான் வரப்போகின்றது. உண்மையை எழுதியிருக்கின்றீர்கள்.
கோபிக்கு வாழ்த்துகள்