ஒரு துறையில் சிறந்து அதில் உச்சத்தில் இருப்பவர்கள் அதிலிருந்து ஓய்வு பெறுவதில்லை மாறாக ஓய்வு பெற வைக்கப்படுகிறார்கள். ஒரு சிலரைத் தவிர பலருக்கு இந்த நிலைமைதான் ஏற்படுகிறது. உதாரணமாக கிறிக்கட்டில் துடுப்பாட்டத்தில் முதன்மை வீரராகத் திகழும் சச்சினையே ஓய்வு பெறவேண்டும் என்று கடந்த சில வருடங்களாகப் போராடி தற்போது அவர் ஒருநாள் போட்டிளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். சமிந்த வாஸ், மாவன் அத்தப்பத்து போன்ற வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.
இதற்கு என்ன காரணம் என்று மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டுடன் ஆராய்ந்து பார்க்கலாம்.
ஒரு சாதாரண மனிதனின் தேவைகள் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கிறார் மாஸ்லோ.
பௌதீகத் தேவைகள்
ஒரு சாதாரண மனிதனுக்கு முதலில் தேவை சுவாசிப்பதற்கு காற்று, உணவு, நீர், மற்றும் பாலியல் தேவைகள் போன்றன. இவை அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் போது அல்லது தடையின்றிக் கிடைக்கும் போது ஒரு மனிதன் அடுத்த கட்டம் நோக்கி நகருகிறான்.
பாதுகாப்புத் தேவைகள்
அடுத்த கட்டமாக மனிதன் தனது உடல், வேலை, குடும்பம் ஆகியவற்றுக்கும் பாதுகாப்புத் தேடுகிறான். இந்தத் தேவைகளும் தடையின்றிக் கிடைக்கும் போது சமூகத் தேவைகளை நோக்கி ஒரு மனிதன் நகருகிறான்.
சமூகத் தேவைகள்
சமூகத்தில் நண்பர்கள், குடும்பம் என தனக்கென ஒரு சமூகத்தைத் தேடுகிறான். இவையும் பூர்த்தி செய்யப்படும் போது கௌரவத் தேவைகளை நோக்கி நகருகிறான்.
கௌரவத் தேவைகள்
இந்த நிலையில் மனிதன் தான் சமூகத்தில் மதிக்கப்படவேண்டும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான். தான் தெரிவு செய்த துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயல்கிறான். சமூக மதிப்பு, சமூக அங்கீகாரம், சாதனைகள் என்பன கிடைக்கும் போது தன்னலத் தேவைகளை நோக்கி நகர்கிறான்.
தன்னலத் தேவைகள்
கௌரவத் தேவைகளில் சாதனைகள், சமூக அங்கீகாரங்கள் மூலம் குறித்த துறையில் சிறந்து விளங்கும் மனிதனால் அதற்கு மேல் அத்துறையில் சாதிக்க முடியாது. அதுதான் கடைசி நிலை. அதாவது அவன் தெரிவு செய்த துறையில் அதற்கு மேல் அவனிடம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை.
உதாரணமாக நாம் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கும் அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உபயோகித்துப் பார்த்த பின்னர் அதை விட்டு வேறு கையடக்கத் தொலைபேசி வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா?
இந்த நிலை வரும் போது அவன் அந்துறையிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரே விடயத்தை திரும்பத் திரும்பச் செய்வது போன்ற சலிப்புத் தன்மை எமக்கு ஏற்பட்டுவிடும்.
ஒரு துறையில் உச்சத்தில் இருப்பவர்கள் மாஸ்லோவின் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதோடு தமது நிலைகளையும் அடிக்கடி பரிசிலனை செய்து கொண்டால் அத்துறையிலிருந்து துரத்தியடிக்கப்படாத குறையாக வெளியேறாமல். கௌரவமாக வெளியேலாம் என்பது என் கருத்து.