Heart Breakers Entertainment தயாரிப்பில் இன்று இதயத்தின் துடிப்பினில் Video பாடல் வெளியாகியுள்ளது.
- Music Composer: Vidushan
- Vocal: CV Laksh, FT R-jith Streets
- Mixing & Mastering: Thinesh Na
- Lyrics: Bavananthan
- Director of Photography and Editing: Bavananthan
- Dance Choreography: Manoshanthan & Prasanthan (KP)
- Cast: Manoshanthan , Praveena, Mast. Sabinesh
- Dancers: Jegatheepon(JK), Deva Mayuran
- Creative Head: Mathunicaa
- Creative Consultancy: Ahilan, Vergin
- Lights: Jaya Studio
இதயத்தின் துடிப்பினில் புதுவித உணர்வு
அழகிய கவிதையை ரசிக்கிற பொழுது
அவளது அதரத்தில் லயிக்குது மனசு
விழிவழி எனக்குள்ளே நுழைகிற பொழுது
கண்ணில் உந்தன் விம்பம் பார்த்து
காதலியென்றே மனக் கரம்பிடித்தேன்
உந்தன் சிரிப்பின் இசையை எடுத்தே
இதயத் துடிப்பினில் மெட்டமைத்தேன்
(இதயத்தின் )
மனமெல்லாம் நொருங்குதே
விழியில் நீ வந்து விழுகிற பொழுது
கனமெல்லாம் தொலையுதே
கவலை இல்லாத குழுந்தையின் மனசு
ஓரக்கண்ணால் எனைப் பார்த்தாயே பெண்ணே
மனமெங்கும் மழை பொழிகிறதே
தூரத்தில் நீ விடும் மூச்சின் காற்று
தென்றலாய் எனை தழுவுறதே
(இதயத்தின்)
உன் மௌனம் கொல்லுதே
ஊழித்தீயில் மனம் எரிந்தே போச்சு
என் தூக்கம் தொலையுதே
ஏகாந்த இரவுகள் எனக்காய் ஆச்சு
அழகிய பூவே நீ ஒரு வார்த்தை பேசு
பூவுக்குள் வண்டாய் நான் தொலைவேனே
கண்ணே நீ கொஞ்சம் உன் கண்ஜாடை காட்டு
காத்திருப்பேன் காலம் முழுவதுமே
(இதயத்தின்)