ரொம்பவே போரடிக்கும் பதிவு, சில நேரங்களில் சில மனிதர்களை சில அரசியல்களைப் பயன்படுத்தின்தான் டீல் பண்ண வேண்டும். அந்த சிலருக்கு மட்டும் =))
சில நேரங்களில் நாம் தினமும் காணுகின்ற சின்னச்சின்னப் பொருட்கள் கூட சில நேரத்தில் பெரிய தத்துவங்களை விளக்கிவிட்டுப் போய்விடும். அது நிறைய நாட்களாகவே அப்படித்தான் இருந்திருக்கும் ஆனால் சில அனுபவங்கள் கிடைக்கும் போது அது நமக்கு போதி மரமாகக்கூட மாறிவிடும்.
எங்கள் வகுப்பிலே சுவிட்ச் பெட்டி இருக்கிறது. எல்லா வகுப்பிலும் இருக்கிறதுதானே? அதுக்கென்ன இப்ப என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதில் இருக்கிற முக்கிய விடயம் என்னவென்றால் அதில் இரண்டு சுவிட்ச்சுகளைப் போடக்கூடாது மீறிப் போட்டால் அந்தக் கட்டடத்துக்கே மின்சாரம் போய் விடும். இது நாங்கள் படிக்கப் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறது. இடையில் திருத்துவதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்டாலும் சில நாட்களிலேயே பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. இது புதிதாக இருக்கும் போது இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏதோ இடையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத்தான் இப்படி மாறியிருக்க வேண்டும்.
இது அப்படி என்ன விடயத்தை விளக்கப் போகிறது?
இந்த சுவிட்சுகளை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
ஒன்று: நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும் காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பிர்கள், அல்லது மிகவும் கவலையாக இருந்த காலத்தில் சிலரை நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இதில் கவலையான நேரத்தில் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் கடைசிவரை எந்த விதமான திருத்தம் வந்தாலும் தங்கள் நிலையிலிருந்து மாறாமல் அப்படியேதான் இருப்பார்கள். அதாவது அந்த பழுதாய்ப் போன சுவிட்டகளைப் போல.
இதையே இன்னொரு விதமாகப் பார்த்தால்,
உங்களுக்கு சிலர் சந்தோஷமான கால கட்டத்தில் நல்ல நண்பர்களாகியிருப்பார்கள். ஆனால் நில காலங்களின் பின்னர் அவரின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும், வேண்டுமென்றே நடிப்பார்கள், என்ன பிரச்சினை என்று கேட்டாலும் சொல்லமாட்டார்கள், பின்னாலே போய் ஒரு சிலரிடம் அல்லது அவர்களின் மாற்றத்துக்குக் காரணமானவர்களிடம் எம்மைப்பற்றியே அவதூறாகப் பேசுவார்கள்.
உங்கள் அபரிமிதமான நட்பின் புனிதம் கெட்டுவிடக் கூடாது என்பதற்கான நீங்களும் ஏன்? எதற்கு? என்று எல்லாம் கேட்க மாட்டீர்கள். ஆனால் அவர்களை விட்டு விலகிவிட அல்லது அவர்களுடன் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவெடுப்பீர்கள். இதுதான் நாங்கள் எங்கள் வகுப்பில் இருக்கும் அந்த பழுதாய்ப் போன சுவிட்சுகளுக்கும் செய்தது. அந்த சுவிட்சுகளில் X அடையாளமிட்டு அதை இனி உபயோகிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். அவர் கவலைப்படுவார் அல்லது அவர் என்ன நினைப்பார் அபரிமிதமான நட்புக் கெட்டுவிடுமே என்றெல்லாம் யோசிக்கத்தேவையில்லை.
Tweet

ஒரு சுவிட்சு ஒரு கட்டடத்தின் நடவடிக்கைகளையே சீர்குலைக்கின்றது என்றால் அதை பாவிப்பதை நிறுத்திவிடுங்கள், அல்லது அதை நீங்கிவிட்டு புதிய சுவிட்ச் ஒன்றைப் பொருத்தி விடுங்கள்.அந்த பாவிக்காமல் விட்ட சுவிட்ச் நினைக்கலாம் நீங்கள் தன்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று, ஆனால் தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்துகொண்டால் அந்த சுவிட்சுக்குத் தெரியும் தனது மாற்றங்களும் தான் செய்த அரசியலால்தான் இப்போது உபயோகிக்கப்படாமல் இருக்கிறோம் என்பதும்.
அட ஒரு ச்விட்சுக்குள் அதும் பழுதாப்போனா சுவிட்ச்சுக்குள் இத்தனை தத்துவம்? :)
ரசித்தேன்