bavan.info என்று பேரை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது informative ஆக எழுதவில்லை என்றால் அது அம்புட்டு நல்லா இருக்காது அதனால் கொஞ்சம் informative ஆக ஒரு பதிவு.
வடபோச்சே! என்ற டயலொக்கை வடிவேலு என்ற மாபெரும் நகைச்சுவை நடிகர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அந்த டயலொக்கை நம்மில் பலர் ஏன் உபயோகப்படுத்திறோம் என்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். ங்கொய்யால, oops, Thanks, Sorry போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகிப்போனது இந்த "வட போச்சே!".
வடபோச்சே! என்பதன் வரலாறு என்ன?
பாட்டி வடை சுட்ட கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பார் அப்போது ஒரு காக்கை வடையைக் களவெடுத்துக் கொண்டு போய்விட்டது. உடனே அந்தப் பாட்டி "ஐயோ வடபோச்சே!" என்றார். அதுதான் இன்று மருகி "வட போச்சே" என்று கூறப்படுகிறது.
வடபோச்சே Definition
ஏதாவது ஒரு முக்கிய விடயத்தை செய்துகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 சதவீதம் குறிப்பிட்ட விடயம் பூர்த்தியடைந்த பின்னர் தீடீரென ஏற்படும் ஒரு அசாதாரண நிலை காரணமாக அந்தக் குறிப்பட்ட விடயத்தை செய்து முடிக்க முடியாமல் போகும் அந்தக் கணப் பொழுதில் சொல்லப்படுவது "வட போச்சே" என்று அழைக்கப்படும்.
உதாரணமாகச் சச்சின் ஓய்வு பெறவே மாட்டார் என்று சச்சின் ரசிகர்கள் நண்பர்களிடம் சவால் விட்டுவிட்டு வந்து பார்த்தால் அவர் ODIயிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார் உடனே பலரும் சொன்ன வார்த்தை "வடபோச்சே!".
வட போச்சே! பல்வேறு வயதுப்பிரிவினரிடையே பல்வேறு நிலைகளில் சொல்லப்படுகிறது.
குழந்தைகளிடையே அவர்கள் வடை முதல் பிஸ்கட் வரை எதையாவது சாப்பிடும் பொழுது அது கீழே விழுந்துவிட்டால். உடனே அவர்கள் கூறும் வார்த்தை "வட போச்சே!".
இளைஞர்களிடையே அதாவது யூத்துக்களிடையே, கம்பஸ் அல்லது படிக்கும் இடங்களில் ஒரு பொண்ணு வந்து நன்றாகக் கதைத்துவிட்டு, கடைசியில் "Bye அண்ணா" என்று சொல்லும் போது அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தை "வட போச்சே!".
அடுத்து குடும்பஸ்தர்களிடையே, நாளை பெற்றோல் அடிக்கலாம், நாளை குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு என்று செய்தி வரும் போது அவர்கள் சொல்லும் வார்த்தை "வட போச்சே!".
வயது முதிர்ந்தவர்களிடையே, அவர்கள் ஆசையாக மற்றவர்களுக்கத் தெரியாமல் ஆட்டையப் போட்டு ஒரு இனிப்புப் பண்டத்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை பேரன் அடித்த பந்து தட்டி விடல் அல்லது சாப்பிடுவதை வீட்டில் மற்றவர்கள் பார்ப்பதால் சாப்பிட முடியாமல் போதல் போன்ற நேரங்களில் அவர்களால் சொல்லப்படுவது "வட போச்சே!".
கன்னம் ஸ்டைல் நடனத்தை என்னதான் PSY ஆடியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது கிறிஸ் கெயில் தான். அதே மாதிரி இந்த வடபோச்சே என்ற வார்த்தையை வடைசுட்ட பாட்டி சொல்லியிருந்தாலும் அதை பிரபலப்படுத்தியது என்னமோ வடிவேலுதான். ஆனால் அவரையும் நிஜவாழ்க்கையில் அரசியல் மேடையில் பேசியபின்னர் சுமார் ஒரு வருட காலமாக வீட்டிலேயே உக்கார்ந்திருக்கும் போது தினமும் சொல்ல வைத்துவிட்டது இந்த "வட போச்சே!".
இப்போது நீங்களும் ஏதோ informative ஆக இருக்கும் என்று நினைத்து படிக்க வந்துவிட்டு இம்புட்டு மொக்கைப் பதிவா இருக்கே என்று நீங்களும் இப்போது சொல்லுவீர்கள் "வட போச்சே!" =P
Tweet

சட்டியோடவே .. வட போச்சே ))))))))))
ஒரு என்சைக்கிளோபீடியா தொடங்கலாமே நண்பரே?