காலை 4 மணிக்கெல்லாம் அந்த விமானசேவை நிலையத்தை அடைந்துவிட்டோம், விமானப்பயணச்சீட்டுக்கள் எல்லாம் உறுதிசெய்யப்பட்டு அனைத்துப்பயணிகளும் வந்ததும் ஒரு பேருந்தில் விமானநிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கும் ஒரு பிரச்சனையும் இன்றி எமது பொதிகளை சமர்ப்பித்துவிட்டு ஓய்வறையில் காத்திருந்தோம்.
அங்கு ஒருதொலைக்காட்சிப்பெட்டி ஒளிபரப்பப்பட்டிருந்தது. விமானம் புறப்படும் நேரம் என பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தையும் தாண்டி அரைமணி நேரமாகியது, அங்குமிங்குமாக விமானநிலைய ஊழியர்கள் ஓடிக்கொண்டிருந்தனரே தவிர விமானம் புறப்படுவதற்கான அறிகுறியைக்காணவில்லை, திடீரென ஒருவர் வந்து "விமானத்தில் தொழிநுட்பக்கோளாறு 20 நிமிடத்தில் சரியாகிவிடும்" என்றார். காலைஉணவு கூட உண்ணவில்லை,தொலைக்காட்சியில் சமயல்குறிப்பு ஓடிக்கொண்டிருந்தது.ஒருவாறு 1மணிநேரத்தின் பின்னர் விமானத்தில் ஏற்றப்பட்டோம்.
ஏறிய ஒருமணிநேரத்தில் குடா நாட்டை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து மூலம் இன்னோர் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம், அங்கு பயணச்சீட்டுக்கள் சரிபார்த்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு அனுப்பப்பட்டோம். அங்கு வைத்து எம் கைத்தொலைபேசிகள் மீளவழங்கப்பட்டன.
அனைத்துப்பயணிகளும் "பொதி எங்கே? பொதி எங்கே?" என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் "வரும்"
அங்கிருந்து அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கே எங்களை இறக்கிவிட்டனர். நாம் சற்று கோபத்துடன் "எம் பொதிகள் எங்கே?" என்று மீண்டும் கேட்க "நாங்கள் சில பொதிகளை மட்டுமே கொண்டு வந்தோம், நாளை காலை11 மணிக்கு வாருங்கள் தருகிறோம்,இல்லாவிட்டால் மாலை 4மணிவரை காத்திருங்கள்" என்றார்கள்.
ஆடைகள் எல்லாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வயதுமுதிர்ந்தவர்கள் பலர் தமது மருந்துகளும், பொதிகளில்தான் இருக்கிறது என்று அங்கலாய்த்துக்கொண்டனர், குழந்தைகளுடன் வந்தவர்கள் தம் குழந்தைகளின் மருந்து,பால்மா போன்றவை பொதியில்தான் இருக்கிறது. என்று வெறுப்புடனேயே இருந்தனர்.
மறுநாள் அந்த எயார்லயின்ஸ் அலுவலகத்தில்.......
மறுநாள் அந்த எயார்லயின்ஸ் அலுவலகத்தில் சென்று பொதிகளை வாங்கிவிட்டேன், ஆனால் அங்கு பொதி பெற ஒரு அக்காவும் வந்திருந்தார், அவரை நான் எங்களுடன் விமானத்தில் பார்த்ததாக ஞாபகமில்லை, "நீங்களும் பொதி எடுக்கவா வந்தீர்கள்? எந்த விமான்ம்?" என்று கேட்க, அவர் சொன்னார்...............
"நான் வந்து 15 நாட்களாகிறது, இன்னும் 15 நாட்களில் திரும்பிச்செல்ல வேண்டும் 5 நாட்களாக இங்கே வந்து செல்கிறேன், இன்னும் பொதி கிடைக்கவில்லை"
ஹா..ஹா.. நான் எவ்வளவோ பரவாயில்லை என்று மனதிற்குள் நினைத்தபடி பொதியுடன் வீடுவந்து சேர்ந்தேன்.
//காலை 4 மணிக்கெல்லாம் //
4 மணி எண்டுறது காலை இல்லையப்பு... அதுக்குப்பேர் அதிகாலை....
இலக்கண அறிவு காணாது....
15 நாளா வந்தும் பொதிக்கு அலையிறாங்களோ?
என்ன கொடுமை இருக்கிறம் இது?
உது எக்ஸ்போ எயார் தானே?