- வந்தி அண்ணா, புல்லட் அண்ணா, லோசன் அண்ணா, ஆதிரை அ்ண்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் முதலாவது பதிவர் சந்திப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
- முதலாவது சந்திப்பின் பின்னர் இலங்கையில் பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
- முதலாவது சந்திப்பின் பின்னர் பதிவர்களுக்கிடை
யில் நல்ல நட்பு உருவானது, இதற்கு சிறந்த உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பலரின் வலைகளில் வைரஸ் புகுந்தது கங்கோனின் உதவியுடன் அவற்றைப் பலர் நீக்கிவிட்டார்க ள்.
- இலங்கைப் பதிவர்களுக்காக கிடுகு திரட்டியின் வருகை
- லோசன் அண்ணா, வந்தி அண்ணா ஆகியோரின் பதிவுகளுக்கு சில கறுப்பாடுகளால் யாழ்தேவி திரட்டியில் மைனஸ் வோட்டுக்கள் குத்தப்பட்டன.
- அதன் பின் இடம்பெற்ற இருக்கிறம் அச்சுவலைச்சந்திப்பு பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமையாததால் பதிவர்களின் மனம்குமுறல் பதிவுகளாக வெடித்தது.
- இவ்வாறு கவலையடைந்த பதிவர்களை சுபாங்கன் அண்ணா படப்பதிவு போட்டு மகிழ்ச்சியடையச் செய்தார்.
- சுபாங்கன் அண்ணா 400க்கு அதிகமாக பின்னூட்டமிட்டுப் பந்தாடப்பட்டார்.
- புல்லட் அண்ணா பதிவர்களை கும்மு கும்மென்று கும்மி ஒரு கும்மல் பதிவு போட்டார்.
- இவரின் கும்மலைப் பொறுக்கமுடியாத லோசன் அண்ணா புல்லட் அண்ணாவைக்கும்மி எதிர்ப்பதிவிட்டார்.
- கனககோபி அண்ணா, சுபாங்கன் அண்ணா ஆகியோர் போலிச்சரியார்களின் முகத்திரையைக்கிழிக்கும் பதிவுகளை வெளியிட்டனர்.
- கூகிள் குழுமத்தில் பதிவர்கள் கலந்துரையாடவும், பதிவுகளைப்பகிரவும் இலங்கை தமிழ்ப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
- கனககோபி அண்ணாவுக்கு பின்னூட்டமிடுவது பற்றி அனானி ஒருவர் மிரட்டி விட்டுப்போனார்.
- கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இரண்டாவது பதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
- சனத்ஜெயசூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த வருடத்தில் தமது 20வது ஆண்டு கிரிக்கெட்வாழ்க்கையைக் கடந்தனர்.
- இந்த ஆண்டு அதிக ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
- பாகிஸ்தான் அணி- 765 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(21.02.2009ல் கராச்சி மைதானத்தில்)
- இலங்கை அணி- 760 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(16.09.2009ல் அஹமதாபாத் மைதானத்தில்)
- மேற்கிந்திய தீவுகள் அணி- 749 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராகப்பெற்றது.(26.02.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
- இந்தியா அணி- 414 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
- இலங்கை அணி- 411 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
- இந்தியஅணி- 392ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்துஅணிக்கு எதிராகப்பெற்றது.(08.03.2009 கிரிஸ்ட்சேர்ச் மைதானத்தில்)
- தென்னாபிரிக்க அணி- 241ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.11.2009ல் சென்சூரியன் மைதானத்தில்)
- இலங்கைஅணி- 215ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் நாக்பூர் மைதானத்தில்)
- இந்தியா அணி- 211 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.12.2009ல் மொஹாலி மைதானத்தில்)
- இந்த ஆண்டு குறைந்த ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
- இங்கிலாந்து அணி- 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராகப்பெற்றது.(04.02.2009ல் கிங்ஸ்டன் மைதானத்தில்)
- பாகிஸ்தான் அணி- 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.07.2009ல் கொ/பிரேமதாச மைதானத்தில்)
- நியூசிலாந்து அணி- 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்த்தான்அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் வெலிங்டன் மைதானத்தில்)
- சிம்பாபேஅணி- 44 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பங்களாதேஸ்அணிக்கு எதிராகப்பெற்றது.(03.11.2009ல் சிட்டகாங் மைதானத்தில்)
- பாகிஸ்தான் அணி- 75 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(24.01.2009ல் லாகூர் மைதானத்தில்)
- சிம்பாபேஅணி- 80ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.01.2009 டாக்கா மைதானத்தில்)
- ஸ்கொட்லாந்து அணி- 81ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தென்னாபிரிக்க அணிக்கு எதிராகப்பெற்றது.(07.06.2009ல் ஓவல் மைதானத்தில்)
- நெதர்லாந்து அணி- 93ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(09.06.2009ல் லோட்ஸ் மைதானத்தில்)
- நியூசிலாந்து அணி- 99ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(13.06.2009ல் ஓவல் மைதானத்தில்)
- துடுப்பாட்டத்தில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டில்சானும், இலங்கையின் ஆஸ்த்தான தொடக்க வீரராக இதுவரை இருந்து வந்த சனத் தற்போது அணியில் நிலையில்லாமல் இருக்கிறார், இந்த நிலையில் இவர்களுக்கு இரவு விடுதி, களியாட்டம் இதெல்லாம் தேவையா?
- இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிட்ப்பட்டது.
- இலங்கை அணியின் டில்சான், சனத், மெத்தியூஸ், வெலிகெதர, முரளிதரன் ஆகிய வீரர்கள் இந்தியாவில் கடைசியாக நடந்த தொடரில் காயமடைந்தனர்.
- வட்சன், சைமன் கட்டிச் ஆகியோர் நகைச்சுவையாக ஒரு ஆட்டமிழப்பு நிகழ்ந்தது.
- அந்தப்போட்டியில் இருவருமே சதத்தை அண்மித்து ஆட்டமிழந்தது கவலைக்குரிய விடயம்(வட்சன்-93,சைமன் கட்டிச்-98)
புதுவருடம் பிறக்கப்போகிறது. 2010ம் ஆண்டும் வரப்போகிறது. வழக்கமாக புதுவருடமென்றால் நாம் அனைவரும் எங்களிடமுள்ள ஏதாவது தீயகுணங்களைச் செய்வதில்லை, சில நல்ல விடயங்களைச் செய்வது என்று முடிவெடுப்பதுண்டு. அதைக்கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்பது வேறு விடயம்.
- டில்சான்- இனிநான் கிரிக்கெட் விளையாடுவதில்லை.
- சேவாக்- இனி சிக்சரே அடிப்பதில்லை.
- ரஜனி- பஞ்ச் டயலாக் சொல்வதில்லை.
- கஞ்சாகருப்பு- ஹீரோவாக நடிக்கப்போகிறேன்.
- நமீதா- குடும்பப்பாங்கான பாத்திரங்கிளில்மட்டுமே நடிப்பேன்.
- கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.
- டுமீல் பதிவர்- இனி மொக்கைப்பதிவு எழுதுவதில்லை.
- அனானிகள்- இனி அனானியாக பின்னூட்டமிடுவதில்லை.
- உளறும் பதிவர்- ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம் போடுவதில்லை.
- விஜய்- இனி கெட்டப் மாத்திப்படம் (நல்ல) நடிப்பேன்.
- தொலைக்காட்சி சேவைகள்- இனி நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரமே போடுவதில்லை.
- சீரியல் பார்த்து அழுவோர்- இனி சீரியலே பார்ப்பதில்லை.
- 155 பஸ்- 15 நிமிடத்தில் வெள்ளவத்தைக்குப் போவேன்.
- பெட்டிப்பதிவர்- இனி சிகையலஙங்காரம் செய்ய சலூனுக்கு அடிக்கடி செல்வேன்.
- போலிச்சாமியார்கள்- இனி மக்களை ஏமாற்றுவதில்லை.
- அரசியல்வாதிகள்- நாட்டுக்க நல்லது செய்யப்போகிறேன்
ம்ம் சின்னத் தாமரை பாடல் பார்க்க வில்லையா? எப்படி ஒரு கெட் அப் மாற்றம்.
போன வருட கிரிக்கெட் தகவல்களை ஒரே பக்கத்தில் பார்க்க பவனின் பக்கம் வந்தால் சரி போலும் bookmark இல் போட்டு வைக்கிறேன்.