பாராட்டுக்கள்
நேற்றுமுன்தினம் 2மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்கு வரமுடியாவிட்டாலும் நேரடியாக ஒளிபரப்பில் இணைந்திருக்க செய்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு நிகழ்வு என்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்காது என்ற நியதியை இம்முறை எமது பதிவர்கள் உடைத்தெறிந்து விட்டனரென்றே கூற வேண்டும், சொன்னாடி 2 மணிக்கு முதலே LIVE STREAM ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பத்திலே ஒருவர் நான்கைந்து கமராவுடன் போட்டோக்களை எடுத்துத்தள்ளிக்கொண்டருந்தார். யாரடா அது என்று பார்த்தால் அட நம்ம கோப்பி..ச்சா கோபி அண்ணா.
பிறகு அங்கே போலீஸ் ஹெயார் கட்டுடன் காணப்பட்ட சுபாங்கன் அண்ணா, புதுச் ரீ-சேட் போட்டு வந்த வந்தியண்ணா, சோப்பு வாங்கிக் கொடுத்த கோபி அண்ணா, ரிங்ஸ் கரைத்த கீர்த்தி அக்கா, லோசன் அண்ணா, புல்லட் அண்ணா, சந்ரு அண்ணா,நிலா அக்கா, யோகா அண்ணா, மதுவதனன் அண்ணா, மு.மயூரன் அண்ணா, நெதர்லாந்திலிருந்து வந்த அண்ணா, அசோக்பரன் அண்ணா,ஹிசாம் அண்ணா மற்றும் பலரையும் காணக்கிடைத்தது மிக்க மகிழ்ச்சியழிக்கிறது.
பதிவர்சந்திப்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்த ஏற்பாட்டுக்குழுவுக்கும், திரட்டிகளில் சந்திப்பு பற்றி அறிவித்து உதவிய பூச்சரம், தமிழிஸ், தமிழ்மணம், உலவு,யாழ்தேவி ஆகிய அனைத்து திரட்டிகளுக்கும் கலந்து கலக்கிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்..
**********************************************************************************
கிரிக்கெட் கொமெண்ஸ்..
வழக்கம் போல கலக்கலாக இருந்தது, சந்திப்பிற்கு வராவிடினும் நேரடியாக எம்மோடு இணைந்திருந்ததற்கு வாழ்த்துக்கள்.