- நடந்தது என்ன?
- அதற்கு அந்த சாமியின் பதி்ல்
என்னதான் இருந்தாலும் பேய் என்று ஒன்று இருந்தால்தானே அவர் அதை ஏவி விடுவதற்கு. இப்படியான நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன. வீடுகளில் பல தசாப்தங்களாக நடைபெறும் தொடர் நாடகங்களைப்பார்த்து கண்ணீர் விடுவோர் இந்த நிகழச்சிகளையும் பார்த்தால் நல்லது.
அங்கு கூறப்பட்ட இன்னொரு கருத்து காய்ச்சல் , தலைவலி என்றால் நாம் மருத்துவரிடம் சென்று எனக்க காய்ச்சல், தரைவலி என்று கூறி மருந்து கேட்கலாம் ஆனால் மனஅழுத்தம் மற்றும் மனோவியல் சம்பந்தமான நோய்களுக்கு நாம் யாருமே வைத்தியரிடம் சென்று எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பெறுவதில்லை.
எனவே அதை சாதகமாகப்பயன்படுத்தம் இந்த சாமியார் வேடம் பூண்ட போலிச்சாமிகள் உங்கள் பிரச்சினையை நாம் தீர்க்கிறோம் என்ற பெயரில் அந்தப்பூசை இந்தப்பூசை, செய்வினை பணியாரம் என்று ஏதேதோ பெயரையெல்லாம் பயன்படுத்தி போலிச்சாமிகள் எமது காசையும் கறந்துகொள்கிறார்கள்.
எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரிய தலைகளின் தலையீடுகள் இருப்பதால் இன்னும் ஏமாற்றி வாழும் சாமிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். எப்போது மூடநம்பிக்கையும் ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் மக்களுக்கும் அவர்களின் பணத்திற்தும் விடிவு.
Tweet
நல்லப் பதிவு பவன்
மக்கள் மத்தியில் இருக்கும் இவ்வாறான மூட நம்பிக்கைகளை களையும் வரை அவர்களிடம் முன்னேற்றம் என்பது சாத்தியமாகாது.