சகோதர,சகோதரிகளே!
இதுவரை வலை மூலம் சந்தித்துக்கொண்டிருந்த நாமெல்லாம் மீண்டும் நேரடியாக சந்திக்கப்போகின்றோம், எப்படா சந்திப்போம் என்றிருந்த எமக்கு ஓர் இனிப்பான செய்தி...
இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )
நிகழ்ச்சி நிரல்
• அறிமுகவுரை
• புதிய பதிவர்கள் அறிமுகம்
• கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
• கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
• சிற்றுண்டியும் சில பாடல்களும்
• கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
• கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
• பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
• உங்களுக்குள் உரையாடுங்கள்
பதிவர் குடும்பத்தின் இந்த இனிய விழாவிற்கு அனைத்து உறுப்பினர்களையும் எதிர்பார்க்கின்றோம்.
பதிவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டியே எமக்கு அறியத்தாருங்கள், கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன் சுபாங்கன், மு மயூரன் ஆகியோரிடமோ அல்லது இங்கு பின்னூட்டியோ உங்கள் வருகையை பதிவு செய்யலாம்.
இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டிhttp://livestream.com/srilankatamilbloggers
நீங்கள் போட்டுத்தாக்கியது
Post a Comment