"எமது பாடசாலையின் நீளக்காற்சட்டை போட்ட அனைவருக்கும் இன்று பாடசாலைவிட்டதும் அடிவிழ இருக்கிறது, சுற்றுவட்டாரப்பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட இருக்கிறோம்" இதுதான் அந்தச்செய்தி 9ம் ஆண்டில் நீ எங்கே நீளக்காற்சட்டை போட்டாய் என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் தரம் 9லிருந்து நாம் விரும்பினால் நீளக்காற்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டிருந்தோம்,தரம் 10இலிருந்துதான் கட்டாயமாக அணிய வேண்டும். நானும் பெரியமனிதன் என்று காட்டும் எண்ணத்தில் நீளக்காற்சட்டைதான் அணிவேன்.
அன்று பாடசாலையில் ஒரே பரபரப்பு இடைவேளைநேரம் எமது பாடசாலைப் பெரிய தல (பொதுவாக பாடசாலைகளில் GANG LEADER ஒவ்வொரு தரங்களிலும் இருப்பார், அதில் A/Lல் இருப்பவர்தான் பெரியதல) தலைமையில் சிறிய தலைகளுக்கு கூட்டம், கூட்டத்தில் கூறப்பட்டவை..................
எங்கள் பாடசாலை நீளக்காற்சட்டை போட்ட அனைவருக்கும் அடிப்பதாக செய்தி கிடைத்துள்ளது நாம் கவனமாக இருக்க வேண்டும், முடிந்தளவு ஆயுதங்களை கைப்பற்றுங்கள் (மூங்கில் தடி, உருட்டுக்கட்டை),
இன்று யார்யாருக்கு ஹொக்கி, கிரிக்கெட் பயிற்சி இருக்கு என்று பார்த்து ஹொக்கி ஸ்டிக், பட் போன்றவற்றை எடுத்து வாருங்கள்.
பாடசாலை விட்டு யாரும் தனியே வீடு செல்லக்கூடாது
அத்துடன் கூட்டம் முடிந்தது, நாங்கள் எப்படியோ சில தடிகள், கட்டைகளைப் பொறுக்கி வைத்திருந்தோம், பாடசாலை முடிவடையும் நேரம் நெருங்கியது, ஒரு போருக்குப்புறப்படுவது போல் தயாராக(பயத்துடன்) இருந்தோம்.
பாடசாலை முடிந்து வரிசையில் செல்ல ஆயத்தமான போது பார்த்தால் பாடசாலை வாயிலில் பல ஆசிரியர்கள், எப்படியோ அவர்களுக்கும் விடயம் தெரியவந்திருந்தது. கட்டையை கையில் கொண்டு போக முடியாது என்று தெரிந்தது, அங்கே பார்த்தால் குடைக்குள் தடியை வைத்து எங்கள் தல குறூப் தடிகளை வெளியே கொண்டு போனது, ஹிம்ம்... பெரியவர்கள் பெரியவர்கள்தான்.
நாங்களும் வெளியே வந்துவிட்டோம், எம் தலயின் கட்டளைப்படி வெளியே காத்திருந்தோம், அனைவரும் வந்ததும் புறப்பட்டோம் எம் பாடசாலையிலிருந்து பஸ் தரிப்பு நிலையத்துக்கு கொஞ்சத்தூரம் நடக்க வேண்டும், சிலர் வேகமாக நடக்க சிலர் மெதுவாக நடக்க தல குறூப்பை தவறவிட்டுவிட்டோம்..
பஸ்த்தரிப்பு நிலையமிருக்கும் அந்த வீதியை அண்மித்தோம் பெரிதாக ஒரு வித்தியாசமுமில்லாமல் இருந்தது, ஒரு பிரச்சினையும் இல்லைப்போல என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன், மறுகணம் எமது பாடசாலைபடபெயரைக்கூறி நாய்களே என்றபடி ஒரு கூட்டம் பஸ்சிலிருந்து இறங்கியது, ஒருநொடியில் எமது வீரமெல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை, ஒவ்வொருவர் ஒவ்வொரு திசையில் ஓடத்தொடங்கினோம் திரைப்படங்களில் வரும் காட்சி போல வீதியில் நின்று வேடிக்கை பார்த்தோருக்கு இருந்திருக்கும், என்ன கொடுமை அவசரத்தில் நான் மகளிர் பாடசாலைப்பக்கம் ஓடிவிடடடேன் ஒருவனுக்கு என்னில் என்ன கோபமோ தெரியவில்லை துரத்தித்துரத்தி அடித்தான். பெண்களுக்க முன்னால் அடிவாங்கி ஓடி....ச்சா... என்ன ஒரு அவமானம்.
அடுத்தநாள் எம் தல தலைமையில் மீள்தாக்குதல் இடம்பெற்று அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டது, சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது, போன்று பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. நாங்களும் யாரும் ஒருகிழமைக்கு பாடசாலைக்கு செல்லவில்லை.
சம்பவத்தின் பின்னணி:
எமது தரத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன் யாரோ வீதியில் சென்ற பெண்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்ற அந்தப்பாடசாலை மாணவர்களை தன் கூட்டணியுடன் சென்று சரமாரியாகத்தாக்கியிருக்கிறான், அதனால் கோபமடைந்த அந்தக்கல்லூரி மாணவர்கள் இதைப்பாடசாலைப்பிரச்சினையாக்கி விட்டார்கள்.
என்னதான் இருந்தாலும் இச்சம்பவத்தை என்னால் மறக்க முடியாத ஓர் சுவடாகிவிட்டது, Tweet
// சம்பவத்தின் பின்னணி:
எமது தரத்தைச்சேர்ந்த மாணவன் ஒருவன் யாரோ வீதியில் சென்ற பெண்களுக்கு தொல்லை கொடுத்தபடி சென்ற அந்தப்பாடசாலை மாணவர்களை தன் கூட்டணியுடன் சென்று சரமாரியாகத்தாக்கியிருக்கிறான், அதனால் கோபமடைந்த அந்தக்கல்லூரி மாணவர்கள் இதைப்பாடசாலைப்பிரச்சினையாக்கி விட்டார்கள்.//
அதுதானே சும்மா யாரும் அடிப்பாங்களா
நீங்கதான் வம்பு பண்ணி இருக்கீங்க