பட்டிங்கே செய்யத்தெரியாத பட்ஸ்மன் ஒருவர் பட்டிங் செய்யவருகிறார், பெளலரைப்பார்த்தவுடனே பயந்து போன நம்ம பாட்ஸ்மன் இப்பிடி கட்டபொம்மன் டயலாக் பேசி தப்பிக்க முயல்கிறார்
NO BALL
YORKER
YORKER
BOUNCER
GOOD LENGTH
சிக்சர் பறக்கிறது
சிக்சர் பறக்கிறது
பவுண்டரி குவிகிறது
நீ ஏன் செய்ய வேணடும் பெளலிங்
எங்களோடு பிராக்டிசுக்கு வந்தாயா?
பவுலிங் செய்தாயா?
விக்கெட் எடுத்தாயா?
NO BALLசெய்தாயா?
ஒரு WIDE BALL போட்டாயா?
அங்கு ஓடிவிளையாடும் நம்நாட்டுப் பிளேயர்களுக்குதண்ணீர்ப்போத்தல் சுமந்து பணிபுரிந்தாயா?
அல்லது நீ
பாட்ஸ்மனா? பெளலரா? பீல்டிங் செய்யத்தெரியாதவனே..
எதற்கு கேட்கிறாய் பவுலிங்?
யாரைக் கேட்கிறாய் பவுலிங்?
சிங்கிளடித்து ரன்குவிக்கும் எங்கள்நாட்டு பட்ஸ்மன் கூட்டம்
உன் BALLலையும் போட்டடித்து ரன்களை நெற்கதிர்ளாய்க் குவித்துவிடும் ஜாக்கிரதை.
உடனே அந்த பெளலர்
SHUT UP..
SHUT UP..
அதிகார முத்திரையுடைய UMPIREரிடம் பெளலிங் தரச்சொல்லிக் கூறியிருந்தேனே.
அப்படியா...
பலே... நீ கேட்ட ஆள் மிகவும் புத்திசாலி,
என்னிடம் பெளலிங் செய்யும் நோக்கத்துடன் எவனும் தலைகாட்டியதில்லை இந்தப்பக்கம், எங்களுடைய பெருமை தெரிந்தவன் அவன்.ஆனால் இது போன்று பெளலிங் கேட்பதற்கு இதுவரை எவனுக்கும் துணிவு பிறந்ததில்லை. பெளலிங் செய்யப்போகிறேனென்று என்னிடமே கூறிய உன்னை, இனியும் GROUNDக்குள் நிற்கவிட்டது என் குற்றம்.
நடுங்குகிறது கால்கள், அடக்கு அடக்கு என்று எனது கால்காப்பு தடு்க்கிறது.
கால்க்காப்பைக் கழட்டுகிறாயா இது ஆபத்துக்கு அறிகுறி, உன்னை பட்டிங் செய்ய உத்தரவிடுகிறேன்.
என்ன பெளலிங் செய் பார்க்கலாம்....
(BALL படாத இடத்தில் பட்டு பாட்ஸ்மன் ஸ்பாடலயே அவுட்டாகுறார்)
(BALL படாத இடத்தில் பட்டு பாட்ஸ்மன் ஸ்பாடலயே அவுட்டாகுறார்)
ஹா ஹா அருமையான நகைச்சுவை
இன்றைய போட்டி இடம்பெற்றது போன்ற பிட்ச் ஆகா இருந்தால் கட்டாயம் படாத இடங்களில் எல்லாம் படும்