சற்று நேரத்தில் வேகமாக ஓடத்தொடங்கியது.
யன்னலோரத்தில் அமர்ந்திருந்த அந்த வாலிபன் யன்னலுக்கு வெளியே கையை நீட்டி வேகமாக தனது கையை மோதிச்செல்லும் காற்றை ரசித்துகொண்டிருந்தவர், திடீரென ஆச்சரியம் மிகுதியுடன் "அப்பா!!! மரம் எல்லாம் பின்னால போகுது...." என்று சத்தமாகக்கூறி சந்தோசப்பட்டார்.
அவரின் தந்தையும் தன்மகன் கூறியதைக்கேட்டு வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் மகனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டவராகப் புன்னகைதடதார்.
அவர்களுக்கு எதிரில் ஒரு இளம் தம்பதிகள் காணப்பட்டனர், அவர்கள் இந்த தந்தையையும் மகனையும் கவனித்துக்கொண்டிருந்தனர். ஒரு 25 வயது வாலிபன் இப்படி சிறுபிள்ளை போல சத்தமிடுகிறானே என்று மனதுக்குள் யோசித்துககொண்டனர்.
மீண்டும் அந்த வாலிபன் "அப்பா முகில் புகைவண்டியுடன் சேர்ந்து வருகிறது, அதோ குளம், மாடு, மயில்" என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் சத்தமிட்டான்.
அந்த தம்பதிகள் மிகவும் சங்கடத்துடன் பார்த்தக்கொண்டிருந்தனர்.
திடீரென மழை தூறத்தொடங்கியது, மீண்டும் அந்த வாலிபன் மீண்டும் "அப்பா மழைத்துளிகள் என்னைத்தொடுகிறது" என்று சத்தமிட்டான்.
இதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியாத அந்த தம்பதிகள் வாலிபனின் தந்தையிடம் "உங்கள் மனனை ஒரு நல்ல வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறலாந்தாதே?" என்றனர்.
அதற்கு அவர் அமைதியாக "நாங்கள் இப்போது மருத்துவமனையிலிருந்துதான் வருகிறோம், இன்றுதான் என்மகனுக்கு கண்பார்வை கிடைத்தது"
குறிப்பு:மின்னஞசலில் வந்த கதை நல்ல கருத்தைக் கூறுவதால் பதிவிட்டேன்
*****************************************************************
- நோய்த்தடுப்பாற்றலை பாதிக்கும் HIV(human immunodeficiency virus)எனப்படும் நோய்க்கிருமி காரணமாக பரவுகிறது.
- இது எப்படி தொற்றுகிறது....
- பாதுகாப்பற்ற உடலுறவு
- நோய்த்தொற்றுடையவருக்கு பாவித்த ஊசியைப்பாவித்தல்
- நோய்த்தொற்றுடைய தாயின் தாய்ப்பாலை அருந்தும் குழந்தை
- 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 33.2 மில்லியன் மக்கள் இந்தநோய் தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- எயிட்ஸ் மூலம் இதுவரை(2007) 2.1மில்லியன்(330000இலட்சம் குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளன.
Tweet
டச்சிங்கா இருக்கு கதை