எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர். அதிரடி ஆட்டக்காரர் எப்படிப்பட்ட பந்துகளையும் பயமின்றி அடித்து ஆடுபவர். பின்னூட்ட பந்துகளை அநாயாசமாக வெளுத்து வாங்குபவர். அண்மையில் ருவிட்டருடன் ஆட்ட நிர்ணய சர்ச்சையில் சிக்கிய இவர் குற்றம் நிரூபிக்கப்படாததையடுத்து இப்போது பல ஆனந்தா சுவாமிகளால் பதிவணிக்குள் திரும்பியிருக்கிறார். ஆனால் தான் போர்மை இழந்து தவிப்பதாக அறிவித்திருந்த போதிலும், தற்போது சில நாட்களுக்கு முன்னர் இவர் ஆடிய ஆட்டம் இவர் போர்முக்குத்திரும்பியதைக்குறிப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் ஆனால் கிறிக்கற்டையும் தொடர்வேன் என்றும் அண்மையில் இவர் அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவரும் எமது அணியின் ஆரம்பத்துடுப்பாட்டத் துடுப்பாட்ட வீரர். பல செஞ்சரிகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர். ஆனால் தற்போது விஷேட பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருக்கிறார். இவரை அனைவரும் ஹாட் பிளேயர் என அழைப்பார்கள். தனது வேகமான துடுப்பாட்டத்துக்கு காரணம் சூப் அருந்துவதுதான் என்று அடிக்கடி கூறும் இவருக்கு சிவப்பு சட்டை என்றால் ராசியாம். தனது இரகசியங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் உளறி அடிக்கடி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வார்.
இவரின் துடுப்பாட்டத்தைக்கண்ட STB(Srilanks Tamil Blogger) தற்போது வளர்ந்துவரும் அதிரடிதுடுப்பாட்ட வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. அணிக்கு ஒரு பக்கம் விக்கட்டுகள் சாய்கின்றபோதிலும் தனது அதிரடி மூலம் அணியை தூக்கி நீறுத்தக்கூடியவர். ஆனால் இவர் அடிக்கடி டயர்டாகுவது இவரின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என இவரின் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
புளொக்கர்ஸ் அணித்தலைவர், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். மஹேல ஜயவர்தன போன்ற கிளாஸ் பிளேயர்.(:p) அணி விக்கட் சரிவுகளை எதிர்கொள்ளும் போது தனிமனிதனாக நின்று போராடுபவர். இவரை அனைவரும் மினி ஸ்கோர் போர்ட் என்று அழைப்பார்கள் காரணம் போட்டி நடைபெறும் போது ரன்னில் ஏதாவது குழறுபடி நடந்தால் உடனடியாக முதலாவது பந்திலிருந்து விஜயகாந் பாணியில் ஸ்கோர்களை அள்ளிவீசுவார்.
கடவுள் பக்தி அதிகம் நிரம்பிய இவர், எமது அணியின் மிடில் ஓடர் பாட்ஸ்மன். ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வதற்கு முன்னர் சாமி கும்பிட்டு தேங்காய் உடைத்து நேரத்தை வீணாக்குவதால் STB அதிகாரிகளால் தண்டிக்கப்படுபவர், வீரர்களுக்கு ஐஸ் கிறீம் வாங்கிக்கொடுப்பவர். கிறிக்கற் தனது பார்ட்டைம் வேலைதான் டாக்டராகுவதே (போட்டுத்தள்ளுவதே)எனது குறிக்கோள் என்று தற்போது படிக்கச் சென்றுவிட்டார்.
இவர் மலையகம் தந்த மைந்தன்(:p). இவர் தூரத்தில் இருப்பதால் அணிக் கூட்டங்களுக்கு வரும் போது நூடில்சையே இவரது பிரதான உணவாகக் கொண்டுள்ளார். அதனால் இவரை அனைவரும் யோவ் நூடுல்ஸ் என்று செல்லமாக அழைப்பார்கள். இவர் தான் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ள மங்குஸ் BATஐ வைத்து எதிரணியை வெட்டிசாய்க்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்.
இவர் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் தனது பந்து எறி போலொ என்று அடிக்கடி சந்தேகப்படுபவர். அதனாலே UMPIREடம் ப்ப்பிளீஸ்... நோபால் பிடிச்சுறாதீங்க நோபால் பிடிச்சுறாதீங்க என்று அடம் பிடிப்பவர். பெண்கள் என்றால் இவருக்கு ஆகாது, எனவே IPL போன்ற T20 போட்டிகளில் ஆண்களுக்கு சொந்தமான அணியில் மட்டுமே ஆடுவேன் என்று சபதமெடுத்துள்ளவரை புல்லட் வேகப்பந்து வீச்சாளர் என்று அழைப்பர்.
இவர் எமது அணியின் சிறந்த களத்தடுப்பாளர். மைதானத்தின் மின்கம்பத்துக்கு அருகில் செல்லும் பந்தைக்கூட பறந்து பறந்து பிடிக்கக்கூடியவர். அண்மையில் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது பந்தைப்பிடிக்கப்பாய்ந்தவர் கடலுக்குள் விழுந்து சுறாவைப்பிடித்து வந்ததாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை 7மணிக்குமேல் இவரால் விளையாட முடியாது(கண்ணில ஒரு பிரச்சனையும் இல்ல) ஏழுமணியானாலே என்னமோ போல ஆகிடுறார்.
இவர் தனக்கென ஒரு சொந்த பாணியை உருவாக்கி விளையாடி வருபவர். பஸ்சில் போகும் போது பார்க்கும் பலவிடயங்களைக்கூறி சிரிக்கவைத்து எதிரணி வீரர்களை ஆட்டமிழக்க வைப்பதில் வல்லவர். இதுதவிர கண்ணைக்குத்தும் கலர் ஆடைகளை அணிவதன் மூலம் எதிரணி வீரர்கள் பந்தை எதிர்கொள்வதைக் கட்டுப்படுத்தும் உத்தியைக்கண்டுபிடித்திருப்பவர். இதனால் STB இவரை மதுயிசம் என்ற புத்தகத்தை எழுதுமாறு கேட்டுக்கொண்டமைக்கிணங்க தற்போது புத்தகத்தை எழுதிவருவதால் போட்டிகளில் இவரைக்காண முடியவில்லை.
இவரும் அணியின் மூத்த வீரர், இவர் எப்படி அடிக்கப்போகிறார் என்று யாராலும் ஊகிக்க முடியாத நேரத்தில் ஒன்றுமே புரியாமல் அடித்தாடக்கூடியவர். தற்போது மதுயிசம் மது போட்டிளில் விளையாடாத காரணத்தால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ஆதிரையஜசம் எனப்பெயரிட்டுள்ளார். கடந்தமுறை இலகுவாக ரன் அவுட்டான இவர் தான் போட்டிருந்த டீ-சேட்டில் யானைப்படம் போடப்பட்டிருந்ததால் ஓடமுடியாமல் போனது என ஆதிரையிசப்பதிலை வெளியிட்டுள்ளார்.
இவர் எமது அணியில் சிறந்த ஆல்ரவுண்டர். ஆனால் தனது பெட்டியில் சரக்கு வைத்திருந்து டுபாய் விமான நிலையத்தில் பிடிபட்டவர். ஆனால் அவர் அதைப்பாவிக்கவில்லை எனத் தெரிந்தது மீண்டும் அணிக்குள் இடம்பெற்றிருக்கிறார். இவர் பந்து வீசும் போது எதிரணி சிக்ஸ் அடித்தாலோ, சிங்கிள் எடுத்தாலோ I JUST... CAN'T BELIEVE THIS என்று கூறுபவர். அதற்கான காரணம் அவர் விண்ணைத்தாண்டி வருவாயோ போபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று மருத்துவ அறிக்கைகள் முலம் தெரியவந்திருக்கிறது. இந்த போபியாவின் விளைவாக தற்போது பீமர் பந்துகளை வீசிவிட்டு மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று BATSMANனிடம் கேட்கிறாராம்.
இறுதியாக இவர்......... இவரைப்பற்றி நானே சொன்னா நல்லாவா இருக்கும்..ஹிஹி
Tweet
நான் தான் முதலாவது..... :))))