ஒரு 65 வயது மூதாட்டிக்கு அனைத்து புதிய தொழிநுட்பங்களையும் பயன்படுத்தி வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்து குழந்தை ஒன்றைப்பிறக்கச்செய்தனர். சிலநாட்களில் அவரும் தனது குழந்தையுடன் வீடு திரும்பினார்.
அவரின் குழந்தையை பார்க்க சில விருந்தாளிகள் வந்திருந்தனர். உடன அவர்களை வரவேற்று உபசரித்தார், சிறிது நேரத்தில்விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
"இல்லை, தேனீர் இருந்திவிட்டுப்பார்க்கலாம் என்று அனைவருக்கும் தேனீர் கொடுத்தார். தேனீர் குடித்து முடித்த பின்னர் மீண்டும் விருந்தாளிகள் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
இல்லை சிற்றுண்டி உண்ணுங்கள் பிறகு பார்க்கலாம், என்றார். சரியென சிற்றுண்டி உண்டுவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் "நாங்கள் குழந்தையைப்பார்க்கலாமா?
மீண்டும் மூதாட்டியும் இல்லை கொஞ்சம் கொறுங்கள் பார்க்கலாம் என்றார்.
ஏன் உங்கள் குழந்தையை நாங்கள் பார்க்கக்கூடாதா? அதன் வளர்ச்சி அவ்வளவு முக்கியமா? நாங்கள் பார்த்தால் அது வளராதா? என்று சற்று கோபத்துடன் கேட்க, இல்லை குழந்தையை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அழவேண்டும் என்றார்.
உங்களை மாதிரியே விருந்தாளிகளும் குழப்பத்துடன் பார்க்க..
குழந்தையை எங்கேயோ வைத்துவிட்டேன், அது அழுதால்தான் கண்டு பிடிக்கலாம் என்றார்.
3வது IPL போட்டிகள் ஆரம்பமாகியிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரை போட்டிகள் மிகுந்த விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நான் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு ஆதரவளித்து வருகிறேன். ஆனால் இலங்கை வீரர்கள் பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இலங்கையின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியுஸ், பந்துவீச்சாளர்கள் மலிங்க மற்றும் சமிந்த வாஸ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.
நேற்றைய சென்னையுடனான போட்டியின் வெற்றிக்கு முதல் மூன்று ஓவர்களிலேயே மூன்று விக்கட்டுகளைச்சாய்த்து சமிந்தவாஸ் டெக்கன் சார்ஜசின் வெற்றிக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.
தவிர முரளிதரனும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் இலங்கை அணியில் மத்தியூசைத் தவிர மற்ற ஒருவரும் அண்மைய போட்டிகளில் இலங்கை சார்பில் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. இனியாவது இலங்கை கிறிக்கற் இவர்கள் பக்கம் பார்வையைத் திருப்புமா? பார்க்கலாம்.
அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய வீடியோவையடுத்து ஆசாமி நித்தியானந்தா தலைமறைவாகி இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அண்மையில் அவரின் சீடர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் ஆசாமி நித்தியின் வலதுகை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு "I CAN'T SPECULATE ANYTHING" என்று கூறிக்கொண்டிருந்தார். பிறகு ஏன் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார்களோ. 45 நிமிட நேரம்தான் மாநாடு என்று கூறியவர்கள், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை தெரிவித்துக்கொண்டிருந்தமையும், வீடியோ போடுகிறேன் என்று கூறி 5 நிமிடங்களை வீணடித்து கடைசிவரை வீடியோ போடாமல் விட்டும் அவர்கள் தாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சியெடுத்தததும் 45 நிமிடம் முடிய ஆள விடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகியதும் சிரிப்பை வரவழைத்தது.
இதுதான் இப்படியென்றால் நேற்று ஆசாமி நித்தியானந்தா தான் ரஞ்சிதாவுடன் வெளியான வீடியோவில் பாலியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்தாராம். ஐயோ இது உலக நடிப்புடா சாமி...
65 வயது...
அவ்வ்வ்வ்...
இப்பிடித்தான் அந்தந்த அந்தந்த விசயங்களச் செய்யோணும் எண்டு சொல்றது...
IPL இல் எம்மவர்கள் கலக்குவது மகிழ்ச்சியே. அதுவும் வாஸ் நன்றாக விளையாடுவதும், முரளி நன்றாக விளையாடுவதும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் மிக்க மகிழ்ச்சி.
இரு மாபெரும் வீரர்கள் form இல்லாமல் ஓய்வு பெறக்கூடாது என்றும், உச்சத்தில் இருக்கும்போது ஓய்வு பெறவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
அன்ஜலோ கலக்குகிறார். ஆனால் படுபாவிகள் நேற்று ஆட்ட நாயகன் விருதைக் கொடுக்காமல் தங்கள் குணத்தைக் காட்டிவிட்டார்கள்.
//உண்மையில் இதை தியட்டரில் DTSசுடன் பார்க்காதவர்கள் வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டார்கள் என்றுதான் செல்லுவேன். //
சும்மா போப்பா...
படம் நல்லாயிருக்கு... அது உண்மை. ஆனா இதெல்லாம் நிறையவே அதிகம்.
வேண்டுமானால் நல்ல படமொன்றைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கோ...
சாமியார்...
Please speak the truths and facts...
Don't speculate anything... :)
ஒரே சிரிப்புப் போங்கள்...
குழந்தை அழகா இருக்கு...
உங்கட மகனா/மகளா? :D