COPY, PASTE
எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p
ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY PASTE பதிவு போடுறாங்க என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே COPY அடிக்கிறாங்க தலைப்பைக்கூட மாத்தாம அதுவும் GOOGLEல போய் தலைப்பைக் கொடுத்து SEARCH பண்ணினா COPY அடிக்கப்பட்ட பதிவுகள் 4 பக்கத்துக்கு வருகிறது. இன்றிலிருந்து நானும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன் நானும் ரைளடிதான்.
******************************************************
இனிய சந்திப்பு
|
மொக்கை போட்டவர்கள்..:p |
அன்று மாலை காலிமுகத்திடலில் பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கடந்த பல சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்த எனது ஏக்கம் பூர்த்தியாக்கப்பட்டது. இனியதொரு சந்திப்பாக அமைந்தது. ப்ப்பிளீஸ் புல்லட் அண்ணா, சின்ன வந்தி கோபி, ஓஃப்லைன் அச்சு அண்ணா, ஏழுமணி சதீஸ் அண்ணா, காமப்பதிவர் வரோ, மது அண்ணா, ஆதிரை அண்ணா, லோசன் அண்ணா பெட்டி சுபா அண்ணா ஆகியோருடன் மொக்கை போட்டபடி இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.
******************************************************
ஏன் திருத்தமுடியாது
|
அம்மா பகவான் அழுக்கைக்கழுவும் பேஸ்புக் குழுமத்துக்கு நன்றி |
அண்மையில் மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு நண்பர் அம்மா பகவானின் படத்தை ஒரு நடிகை போல EDIT பண்ணிப்போட்டிருந்தார். அதற்குள் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒரு அம்மா பகவான் பக்தர் வந்து சராயச்சாமிக்கு சார்பாக கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் இல்லை என்று பிடிவாதமாக இருந்தார்.
இவர் ஒருவரை நாம் ஒரு நான்கைந்து பேர் சேர்ந்தே திருத்தமுடியவில்லை பிறகு எப்படி லட்சக்கணக்கான பக்தர்களைத்திருத்துவது. இதுதவிர இதுபற்றி கலந்துரையாடிய போது நண்பரொருவர் கூறியது கல்கி பகவானும் பக்கா பிசினஸ்மான்தானாம் இப்படி அனைவருக்கும் பாதம் அசையுது, பகவான் தெரியுது என்று மட்டும் பித்தலாட்டம் செய்யாமல் அவர்களுக்கு அம்மா பகவான் டீ-சேட் கான்ராக்ட், வித்யா மாலை கொன்ராக்ட் என கொடுத்திருப்பிறாராம். பிறகு அவர்கள் எப்படி பகவானை எதிர்ப்பார்கள்.
இதிலிருந்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகிறது. மனிதாபிமானம் செத்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது தொழிலுக்காக கஞ்சா சாமியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருக்கும்வரை போதைக்கு அடிமையாகி சீரழியும் மக்களை காப்பாற்றமுடியாது.
******************************************************
பக்தி,சிறுவன், அங்கப்பிரதட்சணம்
திருகோணமலையில் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக இக்காலகட்டத்தில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள், ஆனால் பக்தி என்ற பெயரில் 6 வயதுச் சிறுவன் ஒருவனை அழஅழ போட்டு உருட்டிக்கொண்டிருந்தார் ஒரு தாயார். என்னதான் பக்தியாக இருந்தாலும் ஒரு 6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்.
******************************************************
சுறா
நேற்று சுறா பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாடல்களை வைத்துப்பார்த்தால் வழக்கம்போல விஜயின் அதிரடி பஞ்ச்சுடன்தான் இந்தப்படமும் வெளிவரும் போல இருக்கிறது, விண்ணைத்தாண்டி வருவாயா இசையைக் கேட்டுப்பழகிவிட்டு இப்போது இந்தப்பாடலைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் சுறா பாடல் வரிகள், அதுவும் அந்தக்காதல் பாட்டு சான்சே இல்ல..:p, அதுகாதல்ப்பாட்டுத்தான் என்று கண்டுபிடிக்க பாட்டைநான்குதரம் கேட்க வேண்டுமென்றால் பாருங்களேன்
******************************************************
நான் தான் முதலாவது....