அந்தநேரம் அந்திநேரம் கண்பார்த்து........(ஹிஹி நம்ம ரிங்டோன்)
ஹலோ என்னடா சொல்லு....(தூக்கக்கலக்கத்துடன்)
டேய் வெளிக்கிட்டியா?
என்ன? எங்க??
டேய் காளிகோயில் தேர் வரலயா நீ?... ஓ... இதோ வெளிக்கிட்டன் நீ டக்கெண்டு வா..
சரிசரி... 6.30க்கு வருவன் ரெடியா இரு..
ok bye..
ஒருவாறு 7.15க்கு வந்தவன் என்னையும் ஏற்றிக்கொண்டு காளிகோயிலுக்குச்சென்றான். அங்கே கோயிலில் போய் பாக்கிங்கில் வண்டியை விட்டுவிட்டு செருப்பையும் ஒளித்துவைத்துவிட்டு கோயிலுக்குப் போகலாம் என்று கோயில் வீதியில் காலடி வைத்தால் கமகம என ஒரு வாசனை, என்னடான்னு பார்த்தா யாரோ மப்பும் மந்தாரமுமாக அடித்த வெயிலும் பட்டுத்தெறித்துக் கண்ணைக்குத்தும் அளவுக்கு மினுமினுப்பான சாறியுடன் ஒரு அம்மணி வந்து இறங்குகிறார்.
ஹச்சும்....
வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்த என் கவனத்தை அந்த சென்ட் வாசனை முக்கில் ஏறி, தாங்கமுடியாமல் தும்மிய நண்பனின் தும்மல் கலைத்தது.
அங்கு ஒரு சிங்கள இளைஞர் தண்ணீர்ப்பந்தலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து அழகூரில் பூத்தவளே.... என்று கர்ணகொடூரமாகப்பாடி பெண்களுக்கு நக்கலடித்துக்கொண்டிருந்தார்
அங்கே மூன்று தேர்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இன்னும் சாமி வெளியே வரவில்லை. சரி இருக்கிற கூட்டத்தைப்பார்த்தால் இப்போதைக்கு உள்ளே போக முடியாது. அன்னதான மண்டபப்பக்கம் சற்று காத்தோட்டமாக இருக்கவே அங்கே போய் உட்கார்ந்தோம்.(தேர் சுத்தின பிறகுதான் சாப்பாடு போடுவாங்க...:p)
என்னா கூட்டம் என்னா கூட்டம்...அவ்வ் |
அங்கு இளம்வயதினர், என்போன்ற பச்சிளம்பாலகர்கள், நடுத்தர வயதினர் என பலரும் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. நகைக்கடை விளம்பரத்தில் வரும் சினேகா கூடப்போட்டிராத அளவுக்கு நகைகள் போட்டிருந்தனர், பளபளக்கும் ஆடைகள், அட இதுகூடப்பரவாயில்லை அவர்கள் யாரென்றுகூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு கலர்கலராகப் பல பெளடர்களை கொண்டு முகத்தை மூன்று இஞ்ச் பெரிதாக்கக்காட்டியிருந்தனர்.(ஹீஹீ மேக்கப்புங்க..) மனதுக்குள் பாடிக்கொண்டேன் ஒரு கூடை சன்லைட் ஒருகூடை மூன்லைட்..
அன்று முதன்முறையாக கடவுளிடம் பொதுநல நோக்கில் வேண்டுகோள் விடுத்தேன் கடவுளே மழைபெய்யணும் என்று, அப்பதானே மேக்கப் கலைஞ்சு யார்யார் வந்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கலாம்.ஆனால் கடவுளுக்கு என்மீது கோபமோ, அல்லது மழைபெய்தால் மேக்கப் போட்டவர்கள் எல்லாரும் மழையில் நனைந்து கலைந்த மேக்கப்புடன் கோயிலுக்குள் ஓடிவந்துவிட்டால் கடவுள் தன்நிலை என்னவாகும் என்று பயந்தாரோ தெரியல கடைசிவரை மழைபெய்யவில்லை.
ஆனால் சூரியன் மழைபெய்து மேக்கப் கலையும் கொடுமையை சற்று தாமதமாக வேறுவிதமாகச் செய்தாலும் கச்சிதமாக செய்தார். நான் கோயிலுக்கு போகும் போது பார்த்த யாரையும் திரும்பி வரும்போது காணவில்லை, அடித்த வெயிலில் மூன்று இஞ்ச் மெலிந்த முகத்துடன் பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர் ஹீஹீ மேக்கப் கலைஞ்சிடிச்சுப்பா.
திரும்பிவரும்போது அதே சிங்கள இளைஞர் பாடிக்கொண்டிருந்தார் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Tweet
ஹி ஹி......
அதுசரி, நீங்களும் கொஞ்சம் மொத்தமாப் போய் மெல்லிசாத் திரும்பி வந்தியளாம்?
பச்சிளம் பாலகன் பச்சிளம் பாலகன் எண்டு சொல்லிச் சொல்லி மேக் அப் போட்ட அன்ரிமாருக்குப் பின்னால திரியிறாய் என? :P