அனைவருக்கும் வணக்கம்,
இது உண்மையில் நேற்று பதிவேற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்ட பதிவு, ஆனால் அவசர ஆணிகள் காரணமாக இன்று பதிவிடும்படி ஆகிவிட்டது. நேற்று செப்டெம்பர் 26ம் திகதி 2010 உடன் எரியாத சுவடிகள் தனது 1வது வயதைப் பூர்த்தி செய்துள்ளது. அது மட்டுமன்றி இது இந்த வருடத்தின் 100வது பதிவாகும்..:P
இதுவரை காலமும் எனது பதிவுகளை வாசித்து ஊக்கமளி்த்த, கொலைவெறியைத்தாங்கிக்கொண்ட, மொக்கையை சகித்துக்கொண்ட, சில நேரங்களில் விவாதங்களிலும் ஈடுபட்ட, தவறுகளைச்சுட்டிக்காட்டிய, பலவேளைகளில் பல உதவிகள் புரிந்த, அனைத்து நண்பர்கள், சக பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுவரை காலமும் எனது பதிவுகள் யாருடைய மனம் நோகும்படி இருந்திருந்தால் என்னைத் தயவுகூர்ந்து மன்னிக்கும்படியும் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஒரு வருடத்தில் பல புதிக நண்பர்கள், பல சந்தோஷங்கள், சண்டைகள், சலசலப்புகள், மற்றும் பல விடயங்களை மாறிமாறிக் காண்பித்துள்ளது. அது மட்டுமன்றி ஆரம்ப காலத்தில் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களிலிருந்தும் வெளிவரும் ஜோக்குகளை, மொக்கைகளை படித்து உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்று யோசித்ததுண்டு. நமக்கும் அப்படியெல்லாம் முடியாது என்றும் மனச்சாட்சி அங்கலாய்த்ததுண்டு. ஆனால் இன்று பாரபட்சமின்றி எனக்கும் மொக்கை வரும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமதார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தி – எரியாத சுவடிகளின் 1வது பிறந்த தினத்தின் ட்ரீட் வேண்டியவர்கள் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் எனது பெயரைச் சொல்லிச் சாப்பிடலாம்..:P
பி.கு - ஸ்ஸப்பா.. ரொம்ப கஷ்டப்பட்டு எழுதிய பதிவு இது..:P
Tweet
நூறுக்கும் பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்கு. கஷ்டப்பட்டு போடட்ட பின்னூட்டம்