கூல்போய் கிருத்திகன் அண்ணா ஆரம்பித்து வைத்த குறும்படவைபோகமே ஏற்படுத்திய தாக்கத்தால்(அல்லது மொக்கையால்) இந்தப்பதிவு.
***
Yamaha SZ பைக் ஒன்று சீறிப்பாய்ந்து வந்து பதிவர்கள் அனைவரும் கூடியிருந்த இடத்துக்கு பத்தடி தள்ளி நின்றது. தனது தொலைபேசியில் பில்லா தீம் மியூசிக்கைப் போட்டபடி கையில் கமரா பாக்குடன் ஒரு கறுப்பு ஆடையணிந்த உருவம் பைக்குக்கு பின்னாலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியது. திடீரென..
“குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்….” பில்லா மியூசிக் நின்று அவரின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது, “கட் கட் கட்…. அடேய் சுபாங்கன் போஃனை ஓஃப் பண்ணிவைக்கச்சொன்னா ஏன்டா இப்பிடிப்பண்ணுறீங்க.. ஜனா அண்ணாவின் குரல் பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
உங்களுக்கு இந்த சீன் பத்தாதுடா.. வேற.. வேற… சதீஸ் அண்ணா பக்கத்திலிருந்த மரத்தில் ஏறி வீஜய் ஸ்டைலில் ஏஏஏஏஏய்ய்ய்ய்… என்று குதித்துக்கொண்டிருந்தார்..:P
சரி இப்பிடிச் செய்யலாம் ஆளுக்கு ஒரு சீன் சொல்லுங்க எல்லாத்தையும் சேர்த்து ஒரு படமாக்கலாம். முதல்ல கன்கொன் நீ சொல்லப்பா.. –ஜனா அண்ணா
ஹிஹிஹிஹி… 5 நிமிட சிரிப்புக்குப்பிறகு ஹீரோ வந்து ஒரு கிறிக்கட் வீரன் பின்தங்கிய கிராமத்தில இருந்து வசதி குறைந்த குடும்பத்தில பிறந்து நசனல் டீம் செல்க்ட் ஆகிறான். ஆனா கொழும்பில வந்து தங்கியிருக்க இடமில்ல, அப்ப…
லோஷன் அண்ணா – டேய் டேய் நிப்பாட்டு இது சனத்ஜயசூர்யவின்ட கதை மாதிரிக்கிடக்கு.. சரி இனி நான் சொல்லுறன். அவனுக்கு இரவு தங்க இடமில்ல அவன் வீதியால் நடந்து போய்க்கொண்டே இருக்கிறான். இதையே ஒரு 5 நிமிசம் காட்டலாம்தானே..
சரி அடுத்தது புல்லட் சொல்லுங்கோ என்றார் ஜனா அண்ணா,
வெல்.. அவன் போகிறான் போற வழியில ஒரு போஸ்டரைப்பாக்கிறான் அப்பிடியே வாயப்பிளந்து பாத்துக்கொண்டு நிக்கிறான்.. எதிரிலிருக்கிற போஸ்டரில ககூனமடாட்டா எண்டு எழுதிக்கிடக்கு, உடனே பிளாஸ்பக்கிக்கு போறான் அதில இவனுக்கு 7 வயசு, அருள்பிரகாசத்திண்ட அஞ்சு வயசு மகள் அஞ்சலிய மடக்க அவை வீட்டுக்கு லயன்கிங் பாக்கப்போன ஞாபகங்கள் தாலாட்டுது.
ஓகே இன்டர்ஸ்டிங், நெக்ஸ்ட் அனுதினன்,
ஆங்.. அப்பிடியே இன்னும் ரெண்டு வருசம் பின்னால போறான், அப்ப அஞ்சலிக்கு 3 வயசு இவனுக்கு 5 வயசு ரெயினில கண்டிக்கு போறான் ரெண்டு பேரின்ட அம்மா அப்பா எல்லாரும் நித்திரை கொண்டுட்டாங்கள், அப்ப ஒரு பாட்டு பக்கிரவுண்டில போகுது.. ம்ம்.. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையப் போடலாம்..
அடேய் ஐயா சாமி ஆள விடுபோதும் அடுத்து…. ஆதிரை அண்ணா கையை உயர்த்தி நான் நான் எண்டார், சரி சொல்லுங்கோ அண்ணே..
அவன் போஸ்டரைப்பாத்து ஆ எண்டு வாயப்பிளந்து கொண்டிருக்க பக்கத்துக்குக்கானுக்குள் பாய்த்தோடிய எலி சிறு கிலியை ஏற்படுத்தி மறைந்தது. தற்போது மீ்ண்டும் நடக்கத் தொடங்கிறான் கோல்ரோட்டால் போகிறான் போகிறான் போய்க்கொண்டே இருக்கிறான்.
அட.. போய்க்கொண்டே இருந்தா கதையில ஒரு டேர்னிங் பொயின்டே இல்லையே.. என பவன் சொல்ல..
இப்ப உனக்கென்ன டேர்னிங் பொயின்ட்தானே வேணும் போற வழியில பிளீஸ் டேக் டைவர்சன் எண்டு ஒரு போர்ட் வச்சிடுவோம் எப்பிடி – கிருத்திகன்
ம.தி.சுதா – அப்ப அண்ணே இவன் போர்ட்டைப்பார்த்து திரும்பிப் போக முயல அடித்த காற்றில் ஒரு பேப்பர் கையில் வந்து மாட்டுப்படுகிறது. அதில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இலட்சினையுடன் கூடிய ஒரு ரிப்போட், சூதாட்டம் விளையாடிய கிறிக்கட் விரர்களின் பட்டியல் காணப்படுகிறது. உடனே கிறிக்கட் விளையாடுறதை விட இதை வச்சு காசு சம்பாதிக்கலாம் சம்பாதிச்சு அஞ்சலியையும் கைப்பிடிக்கலாம் என்று கனவுக்கோட்டையைக் கட்டுறான். அப்ப இந்தக் கவிதையப்போடிறம்.
நீயும் நானும்
தண்டவாளம் போல் தான்
அன்று சந்தித்துக்கொண்டோம்
விபத்து என்று சொன்னார்கள்
எமக்கா எம் எதிர்காலத்துக்கா
தெரியவில்லை
சதீஸ் அண்ணா - உடனே அவன் தன்ட மொபைல எடுத்து பேஸ்புக்கில ஸ்டட்டஸ் போடுறான், “I’m going to be rich soon, அமேரிக்கா சிட்டிசனாகப்போறேன், நியூயோர்க்கில் வீடு கட்டப்போறேன்” இதையும் சேர்த்துக்கொள்ளுங்க அண்ணே…
பவன் - பிறகு அணியில் இடம்கிடைத்து விளையாடி வருகிறான், பெரிதாகப் பிரகாசிக்காவிட்டாலும் அவனை அணியிலிருந்து தூக்க முடியாமல் மூத்தவீரர்களை புலனாய்வு அறிக்கையைக் குடுத்து செட்டாக்கி வைத்திருந்தான். போட்டியில் நோபோல் போட்டு அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் இவனுக்கு வலைவிரித்து அறிக்கை சமர்ப்பிக்கிறது. அதில் முக்கிய ஆதாரம் பேஸ்புக்கில் இவன் போட்ட இந்த ஸ்டேட்டஸ்…
ஓவருக்கு பணம் தருகிறது SLC உதிரிகளுக்கு பணக்கொடுக்கிறாய் நீ
வந்தியண்ணா – பிறகென்ன தான் ஊரிலிருந்து வரும் போது கொண்டு வந்த அன்புக்காதலி ஆசையாய் பரிசளித்த சிரட்டையில் செய்த வயலினில் எங்கே செல்லும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ… என்று வாசித்துக்கொண்டு மீண்டும் நடையைக்கட்டினான் ஊருக்கு.
ஜனா அண்ணா - வாவ் கலக்கல் கதை பிரன்ட்ஸ்.. கடைசியில் நான் சொல்லிறதையும் போடோணும் அது ரைரக்டர் டச்சு ஓகே..
“பந்தும் போடாது விக்கட்னினுள்ளும் படாது
நல் ஆன் தீம் பால்(BALL) வைட்கோட் உக்காசெல்வதுவோ”
என்ற இலக்கியப்பாடலுக்கு மதுயிசவிளக்கத்துடன் கதை முடிவடைகிறது.
அப்பாடா ஒரு மாதிரிக் கதையெழுதியாச்சு தயாரிப்பாளர் யாரு? என்றமாதிரி அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க கையில் கூலிங் கிளாசை சுத்தியபடி வந்து சேர்ந்தார் வதீஸ் அண்ணா…:P
பி.கு – முற்றிலும் மொக்கை, நகைச்சுவையாக மட்டுமே கருதுங்கள்…:D
சிலரை இணைக்க (கும்ம) முடியவில்லை என்பதால் அடுத்த குறும்படத்தில் அவர்களுக்கு ஸ்பெசஸ் பாத்திரம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்..:P
Tweet
:D