எந்திரன் இந்தப்படத்திற்கு விளம்பரம், விழாக்கள், ஏன் ட்ரெயிலருக்குக்கூட டிக்கெட் என்று எதிர்பார்ப்புகளை அள்ளிக்குவித்திருக்கிறது. ஆனால் எந்திரன் கற்பனை விழா அட்டவணையும் அந்த விழாவில் என்ன பஞ்ச் டயலாக் போடுவார்கள் என்றும் சின்ன கற்பனை வருமாறு..:P
எந்திரன் படபூஜை AND படபூஜை உருவான விதம்- ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்
எந்திரன் போஸ்டர் வெளியீடு AND போஸ்டர் உருவான விதம்- போஸ்டருங்கதான்டா கூட்டமா வரும் படம் சிங்கிளாத்தான் வரும்
எந்திரன் போஸ்டர் ஒட்டும் தினம் - கஷ்டப்படாம எதுவுமே ஒட்டாது கஷ்டப்படாமக் ஒட்டுப்படுறது என்னைக்குமே நிலைக்காது
எந்திரன் இசை வெளியீடு AND இசை வெளியீடு உருவான விதம் - நான் ஒரு தடவை பாடினா நூறு தடவை பாடின மாதிரி
எந்திரன் ட்ரெயிலர் டிக்கெட் வெளியீடு AND ட்ரெயிலர் டிக்கெட் உருவான விதம்– அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி அசராம அடிக்கிறது என் பாலிசி(டிக்கெட்)
ட்ரெயிலர் வெளியீடு AND ட்ரெயிலர் உருவான விதம்- கண்ணா இது ச்சும்மா ட்ரெயிலர்தாம்மா மெயின் பிச்ச நீ இன்னும் பாக்கல
எந்திரன் கட்டவுட் வெளியீடு AND கட்டவுட் உருவான விதம்– கட்டவுட் பாத்தாலே சும்மா அதிருதில்ல…
எந்திரன் கட்டவுட் திறப்புவிழா - நான் ஒரு கட்டவுட் தொறந்தா 100 கட்டவுட் திறந்த மாதிரி
எந்திரன் திரைப்படம் வெளியிடும் திகதி அறிவிப்பு விழா – ஒக்டோபர் ஒண்ணாந்தேதி படம் வராமப் போச்சு இந்தப்படையப்பன் மூச்சு நின்னு போச்சு.
எந்திரன் திரைப்படம் வெளியீடு AND திரைப்படம் உருவான விதம்- நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரக்டா வருவேன்
இந்த எல்லா நிகழ்ச்சிகளும் மறு ஒளிபரப்பு – கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு..:P
Tweet
:-)))